ரஜினிகாந்த் திறக்கும் எம் ஜி ஆர் சிலை!

டாக்டர் எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி  நிறுவனப் பல்கலைக் கழகத்தின் நிறுவன வேந்தரான ஏ சி . சண்முகத்துக்கு சொந்தமான ராஜ ராஜேஸ்வரி கல்விக் குழுமம், 
 
பெங்களூரில்  வைத்து இருக்கும் ராஜேஸ்வரி மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்வி நிறுவனங்களை 2012 இல் பார்வையிட வந்த , 
 
இங்கிலாந்து கிளாஸ்கோவில் உள்ள ராயல் காலேஜ் ஆஃப் பிசியன்ஸ் அண்ட் சர்ஜன்ஸ் நிறுவனத்தின்  தலைமைப் பேராசிரியர் இயான் ஆண்டர்சனின்  தெரிவு மற்றும் , 
 
2013 ஆம் ஆண்டு பார்வையிட வந்த மேற்படி இங்கிலாந்து கல்லூரி நிறுவனத்தின் பேராசிரியர் ஃபிராங்க் டனின் தெரிவு இவற்றின் அடிப்படையில் 
 
ஏழை மக்களுக்கு வசதி வாய்ந்த மருத்துவ மனைகளுக்கிணையாக  இலவச மருத்துவம் வழங்கும் சேவைக்காக 
 
ஏ சி சண்முகத்துக்கு கவுரவ ஃபெலோஷிப் வழங்கப்பட்டது . 
பொதுவாக மருத்துவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் இந்த விருதை , முன்னாள் இந்திய ஜனாதிபதி கே ஆர் நாராயணனுக்குப் பிறகு வாங்கும் மருத்துவர் அல்லாத பிரமுகர் ஏ சி சண்முகம்தானாம் . 
 
இந்த நிலையில், மேற்படி டாக்டர் எம் ஜிஆர்  நிகர் நிலைப் பல்கலைக் கழகத்தில் வரும் மார்ச் 5 ஆம் தேதி திங்கள் அன்று மாலை நான்கு மணி அளவில்  நடக்கவிருக்கும், 
 
எம் ஜி ஆர் நூற்றாண்டு விழா கட்டிட திறப்பு விழா மற்றும் பல்கலைக் கழக முப்பதாம் ஆண்டு விழாவில் 
 
எம்ஜிஆரின்  வெண்கலச் சிலையை  ரஜினிகாந்த் திறந்து வைக்கிறார் . 
 
மொரீஷியஸ் குடியரசுத் தலைவர் பரமசிவம் பிள்ளை வையாபுரியும் இலங்கை கல்வி அமைச்சர் வி எஸ் ராதா கிருஷ்ணனும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்கள் . 
 
இந்த நிகழ்ச்சியில்  எம்ஜி ஆர் விருதை இயக்குனர்கள் கே .பாக்யராஜ், பி வாசு, கே. எஸ் ரவிகுமார் , விக்ரமன், ஆர் கே செல்வமணி, கஸ்தூரி ராஜா, சுந்தர் சி ,\
நடிகர்கள் நாசர், விஜயகுமார், பிரபு, பாண்டியராஜன் , கஸ்தூரி , ஜெய சித்ரா,
 
பழம்பெரும் நடிகைகள் எம் என் ராஜம், சரோஜா தேவி, சௌகார் ஜானகி, காஞ்சனா, பாரதி  சச்சு, வெண்ணிற ஆடை நிரமலா , லதா ஆகியோர் பெற்றுக் கொள்கிறார்கள் . 
 
சிறப்பு அழைப்பாளர்களாக ஐசரி கணேஷ், பாரதி ராஜா, எஸ் பி முத்துராமன், தாணு, ஆர் பி சவுத்ரி, முன்னாள் அமைச்சர்கள் ஹண்டே, வி வி சுவாமிநாதன், எஸ் ஆர் ராதா, மற்றும் பல முன்னாள் கலெக்டர்கள், 
 
கவிஞர் முத்துலிங்கம் , இசையமைப்பாளர் சங்கம் கணேஷ் , எம் ஜி ஆருக்கு சிறுநீரகம் கொடுத்த லீலாவதி, மற்றும் எம் ஜி ஆரின் உறவினர்கள் மற்றும் பல முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர் . 
 
இதற்கான பத்திரிகையாளர் சந்திப்பில் மேற்கண்ட தகவல்களை எம் ஜி ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் ஏ சி எஸ்அருண்குமார், துணை வேந்தர் முஸ்தபா ஹுசைன் , பதிவாளர் பழனிவேலு ஆகியோர் தெரிவித்தனர் . 
அவர்களிடம் நான் , எல்லாம் சரி .. எம் ஜி ஆர்  சிலை எம் ஜி ஆர் மாதிரி இருக்குமா ?” என்று கேட்டேன் . 
 
“கண்டிப்பாக இருக்கும் . சிலையைப் பார்த்த பலரும் இதுவரை அமைக்கப்பட எம் ஜி ஆரின் வெண்கல சிலைகளிலேயே இதுதான் சிறப்பானது என்று கருத்து தெரிவிக்கிறார்கள் ” என்றனர் . 
 
அப்போ சந்தோசம் !

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *