இவற்றை வெளிச்சம் போட்டுக் காட்டும் அற்புதப் படைப்பாக வந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படம் இறுதிச் சுற்று
ஒய் நாட் ஸ்டுடியோஸ் சார்பில் சசிகாந்த் , திருக்குமரன் என்டர்டெய்னர்ஸ் சார்பில் சி வி குமார் ஆகியோர் யூ டி வி மோஷன் பிக்சர்சுடன் சேர்ந்து தயாரிக்க,
மாதவன் , அறிமுகங்கள் ரித்திகா சிங் , மும்தாஜ் சொர்க்கார் , ராதாரவி , நாசர் நடிப்பில், சுனந்தா ரகுநாதன் மற்றும் மாதவனோடு சேர்ந்து திரைக்கதை அமைத்து , கதை எழுதி , சுதா கொங்காரா இயக்கி இருக்கும் இறுதிச் சுற்று தமிழ் சினிமாவின் மறக்க மூடித படமாகி விட்டது
உலக அளவில் குத்துச் சண்டைப் போட்டி என்றால் மறக்க முடியாதபடி , உடனே எல்லோருக்கும் நினைவுக்கு வருவது, சரித்திரம் படைத்த குத்துச் சண்டை வீரர்களான முகமது அலியும் மைக் டைசனும்தான் .
இறுதிச் சுற்று படத்திலேயே, இந்த இருவரும் குத்துச் சண்டைப் போட்டியில் எவ்வளவு புகழ் பெற்றவர்கள் என்பதை உணர்த்தும் வகையில், வசனங்கள் இடம் பெற்று இருக்கும் .
அப்படி இருக்க,, இறுதி சுற்று படத்தைப் பற்றிப் படித்த அந்த குத்துச் சண்டை வீரர் மைக் டைசனே , இறுதிச் சுற்று படத்தை பார்க்க விரும்புகிறார் என்றால், அது எப்பேர்ப்பட்ட விஷயம் .
ஆம் ..!
தனது முக நூல் பக்க்கத்தில் ” நான் இந்த குத்துச் சண்டைப் படத்தைப் பார்க்க விரும்புகிறேன்” என்று ஸ்டேட்டஸ் போட்டு இருக்கிறார் மைக் டைசன்.
இதை விட இந்த படக் குழுவுக்கு கவுரவம் தரும் செயல் என்ன இருக்க முடியும் ? .
தீபத்தின் உயர்வு என்றால் அது திருவண்ணாமலை மலை உச்சியில் எரிவது தானே …
வாழ்த்துக்கள் ..
இயக்குனர் சுதா , தயாரிப்பாளர் சசி காந்த் , சி.வி.குமார், மாதவன் , ரித்திகா சிங், சந்தோஷ் நாராயணன் , சிவ குமார் விஜயன் , சுனந்தா ரகுநாதன் உள்ளிட்ட படக் குழுவினர் அனைவருக்கும் !