பாடல் ஆசிரியராக அறிமுகம் ஆகி ஞாபகங்கள் , இளைஞன் படங்களில் ஹீரோவாக நடித்த பா.விஜய் விஜய் வில் மேக்கர்ஸ் என்ற நிறுவனத்தின் சார்பில் தயாரித்து பாடல்கள் எழுதி ஹீரோவாக நடிப்பதோடு இயக்குனராகவும் அறிமுகம் ஆகும் படம் ஸ்ட்ராபரி .
படத்தில் சமுத்திரக்கனி, தம்பி ராமையா, தேவயானி , இவர்களுடன் யுவினா பார்த்தவி, அவனி மோடி என்று இரண்டு கதாநாயகிகள்
படத்தில் சுமார் நாற்பது நிமிடம் கிராபிக்ஸ் காட்சிகள் வருகிறது . அந்தக் காட்சிகளை முதலில் வீடியோவில் படம் பிடித்து கிராபிக்ஸ் காட்சிகளை முடிவு செய்து மீண்டும் படமாக்கினோம் . மொத்தப் படமும் சென்னையிலும் பாண்டிச்சேரியிலும் எடுத்து இருக்கிறோம்.
படத்தின் ஒளிப்பதிவாளர் மாறவர்மன் உட்பட பல புதிய இளைஞர்கள் அணியுடன் களம் இறங்கி இருக்கிறேன் “என்கிறார் பா விஜய் .
படத்தின் இசையமைப்பாளர் தாஜ் நூருக்கு இது இரண்டாவது பேய்ப்படம். . “படத்தில் விஜய் எழுதி இருக்கும் சண்டேக்கும் மண்டேக்கும் சண்டை . அதுல உடைஞ்சு போச்சு டியூஸ்டேயின் மண்டை ‘ என்ற பாடல் ரொம்ப சிறப்பா வந்திருக்கு. படத்தின் ரீ ரிக்கார்டிங்கை முடிக்க அறுபது நாட்கள் ஆனது ” என்கிறார் தாஜ் நூர்.
ரீரிக்கார்டிங் படத்தின் பெரிய பலம் என்கிறார் பா. விஜய்