ஒரு திரைப்படத்தின் ஒரு சில காட்சிகளுக்காக ரிஸ்க் எடுப்பது சகஜமான ஒன்று தான். ஆனால், படம் முழுவதையுமே ஆபத்துகள் பலவற்றை கடந்து படமாக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் ஜெயந்த்.
இவரது முதல் படமான ‘முந்தல்’ படத்துக்குத்தான் அப்படி ரஸ்க் சாப்பிடுவது போல ரிஸ்க் எடுத்துள்ளார்
அடிப்படையில் ஸ்டண்ட் இயக்குநரான ஜெயந்த், தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட இந்திய திரைப்படங்கள் மட்டும் ஒன்றி, ஒரு சில ஆங்கிலப் படங்கள் என சுமார் 250 படங்களில்
ஸ்டண்ட் கலைஞராகவும், பல படங்களுக்கு ஸ்டண்ட் இயக்குநராக பணியாற்றியிருந்தாலும், அவரது நீண்ட நாள் விருப்பமான இயக்குநர் கனவு ‘முந்தல்’ படத்தின் மூலம் நிறைவேறியுள்ளது.
ஹர்வெஸ்ட் மூன் பிக்சர்ஸ் (Harvest Moon Pictures) நிறுவனம் சார்பில், டாக்டர்.கே.பாலகுமரன் தயாரித்துள்ள இப்படத்தில் அப்பு கிருஷ்ணா என்ற புதுமுகம் நாயகனாக நடித்துள்ளார்.
நாயகியாக ருக்ஷா நடித்துள்ளார். இவர்களுடன் நிழல்கல்ரவி, நான் கடவுள் ராஜேந்திரன், அழகு, மகாநதி சங்கர், போண்டா மணி, வெங்கல்ராவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.
புற்றுநோய் விழிப்புணர்வு சம்மந்தமான கருவை வைத்துக் கொண்டு இப்படத்தை இயக்கியிருப்பதாக கூறிய இயக்குநர் ஜெயந்த் மேலும்
” புற்றுநோயை குணப்படுத்தும் சித்த மருந்து தயாரிப்புக்கான பார்முலா ஓர் ஒலைச்சுவடியில் இருக்கிறது. ஆனால், அந்த ஓலைச்சுவடி கம்போடியாவில் பெரும் பாதுகாப்புக்கிடையே உள்ளது.
அதனைத் தேடி ஹீரோ செல்கிறார். ஆனால், ஹீரோவிடம் இருந்த அதை கைப்பற்ற மேலும் பலர் கிளம்ப, யாரிடம் அந்த ஓலைச்சுவடி கிடைத்தது, அதை வைத்து என்ன செய்தார்கள், என்பதுதான் கதை,
“எதிலுமே நாம் முன்னோடியாக இருக்க வேண்டும், ஒரு ரயிலை பிடிக்க போக வேண்டும் என்றால் கூட, அது கிளம்புவதற்கு முன்பாக சென்றால் தான் பிடிக்க முடியும்,
அதன் அர்த்தமாக தான் இப்படத்திற்கு ‘முந்தல்’ என்று தலைப்பு வைத்துள்ளேன், முந்துதல் என்றால் தான் தமிழ் வார்த்தை என்று நினைப்பார்கள், ஆனால், ‘முந்தல்’ என்பதே சுத்த தமிழ் வார்த்தை”
என்று தலைப்பின் காரணத்தையும் நம்மிடையே தெரிவித்தார் இயக்குநர் ஜெயந்த்.
கம்போடியா, வியட்நாம், பாங்காக், அந்தமான், குளுமணாலி, கேரளா, ராமேஸ்வரம் உள்ளிட்ட மொத்தம் 46 லொகேஷன்களில் இப்படத்தை படமாக்கியுள்ளாராம்.
முதல் பாதி காதல், காமெடி என்று நகரும் படம், இரண்டாம் பாதி முழுவதுமே ஆக்ஷல், திரில்லர் என்று நகரத் தொடங்கிவிடுமாம். புதுமுக ஹீரோ, இயக்குநர் என்று இருந்தாலும்,
கதைக்கு தேவைப்பட்டது என்பதால், கிராபிக்ஸ் எதையும் பயன்படுத்தாமல் காட்சிகளை ஒரிஜனலாக படமாக்கியுள்ளார்கள்.
இதுவரை தமிழ் சினிமாவில் இடம்பெறாத அங்கோலா கோயில் பகுதிகளை இப்படத்தில் காட்டியிருப்பதோடு, அசில கம்போடியா காடுகளிலும் படப்பிடிப்பு நடத்தியுள்ளார்கள்.
அதிலும், விஷ்ணு படுத்தியருக்கும் ஒரு சிலையும், அதில் இருந்து தொடங்கும் அருவி ஒன்றில் படமாக்கப்பட்ட காட்சி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெறும் என்று இயக்குநர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கம்போடியாவுக்கு செல்லும் ஹீரோவுக்கு கதைப்படி சிக்கல் அதிகம் என்பதால், அவர் தமிழகத்தில் இருந்து கடல் வழியாகவே கம்போடியா செல்வது போல அமைக்கப்பட்டுள்ளது.
இதற்காக கடல் சம்மந்தமான காட்சிகள் அதிகம் இடம்பெறுகிறது. அத்தனையும் ஒரிஜனல் காட்சிகள். இப்படத்தில் நடித்த ஹீரோவே டூப் ஏதும் போடாமல் அண்டர் வாட்டர் காட்சிகளில் நடித்துள்ளார்.
அப்படி ஒரு முறை அந்தமான் தீவு ஒன்றில் படமாக்கப்பட்ட போது, அண்டர் வாட்டர் காட்சி எடுப்பதற்காக ஒளிப்பதிவாளர் ஒரு கேமராவும், இயக்குநர் ஜெயந்த் ஒரு கேமராவையும் ஏந்திக்கொண்டு
கடலில் இறங்க, முதலை ஒன்று வந்துவிட்டதாம்.
சற்றென்று சுதாரித்துக் கொண்டவர்கள் உடனே படகில் ஏறிவிட்டார்களாம். இருந்தாலும், அந்த இடத்தில் அந்த காட்சியை படமாக்க வேண்டும் என்பதற்காக
முதலை அங்கிருந்து போகும்வரை காத்திருந்து காட்சியை படமாக்கியுள்ளார்கள்.
அதேபோல், வியட்நாமில் மக்களுக்கு அனுமதியில்லாத ஒரு குகையில் படமாக்க முடிவு செய்து, அங்கு கேமராவை எடுத்துச் சென்றுவிட்டார்களாம். ஒரே இருட்டு மயமாக இருக்கும்.
அந்த குகையினுள் சென்ற சிறிது தூரத்தில் அனகோண்டா பாம்புகள் படுத்துக் கொண்டிருப்பதை பார்த்து அதிர்ந்து விட்டார்களாம். ,
என்னதான் பயம் இருந்தாலும், காட்சியை அங்கு படமாக்கிவிட்டு சட்டென்று கிளம்பி வந்துட்டாங்களாம்.
ராஜா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு கே.ஜெய்கிருஷ் இசையமைத்துள்ளார். சாய்சுரேஷ் படத்தொகுப்பு செய்துள்ளார். ஜாய்மதி நடனம் அமைக்க
வெ.மதன்குமார், அண்ணாமலை, தர்மபுத்திரன் ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளார்கள். மக்கள் தொடர்பு கோவிந்தராஜ்.
தற்போது அனைத்து பணிகளும் முடிவடைந்துள்ள ’முந்தல்’ விரைவில் வெளியாக உள்ளது.