கத்தி படத்தின் கதை தன்னுடையது என்று கூறும் கறுப்பர் நகரம் படத்தின் இயக்குனர் கோபி , அதற்கான தனது தரப்பை விவாதபூர்வமாக ஒவ்வொரு முறையும் எடுத்து வைக்கிறார் .
அதற்கு அதே பாணியில் அறிவுப்பூர்வமாக பதில் சொல்லி பதிலடி கொடுக்க வேண்டிய முருகதாஸ் , அது பற்றி எந்த விளக்கமும் தராமல் தப்பி ஓடிக் கொண்டு இருக்கிறார் .
அப்படியே அவர் ஓடி இருந்தால் கூட விஷயம் ஒரு நிலையில் அமைதி ஆகி இருக்கும் .
ஆனால் கோபிக்கு பதில் தருவதாக எண்ணி முருகதாஸ் செய்திருக்கும் ஒரு காரியம் விஜய் ரசிகர்களும் முருகதாசைப் பார்த்து கொந்தளிக்கும் நிலையை ஏற்படுத்தி விட்டது .
அது என்ன என்று தெரிந்து கொள்வதற்கு முன்பு ஒரு நகைச்சுவைக் காட்சியைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.
சின்னத்தம்பி படத்தில் கவுண்டமணிக்கு மாலைக் கண் நோய் இருக்கும். அதை மறைத்து அனுஷாவை திருமணம் செய்து கொள்வார். அனுஷா கவுண்டமணியை ஆறு மணிக் காட்சி திரைப்படம் பார்க்க வற்புறுத்தி அழைத்துப் போய் விடுவார் .
கண் தெரியாத நிலையில் படம் பார்க்க முடியாத கவுண்டமணி மற்றவர்கள் சிரிக்கும்போது சிரிப்பார் . பல சமயம் அது சரியாக அமையாமல் சோகமான காட்சிகளில் சிரிப்பார். மோசமான காட்சிக்கு கைதட்டி பாராட்டுவார். உடனே மற்ற எல்லோரும் “என்ன இவன் இவ்வளவு கேவலமான ரசிகனா இருக்கான் ?” என்று எண்ணி கவுண்டமணியை கேவலமாக பார்ப்பார்கள் .
இப்போது முருகதாஸ் விஷயத்துக்கு வருவோம்.
கத்தி பட விவகாரத்தில் கருத்துப் பூர்வமாக பல வாதங்களை முன் வைக்கும் கோபிக்கு முருகதாஸ் தரப்பு பதிலாக, டீம் முருகதாஸ் என்ற பெயரில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது. அதில் கோபிக்கு பதில் சொல்வதாக எண்ணி கோபியின் ஒவ்வொரு கருத்துக்கும் பதிலாக கவுண்டமணியின் காமெடி வசனங்களை போட்டு இருக்கிறார் .
அதில்தான் ஒரு இடத்தில் விஜய் ரசிகர்களையும் கேவலப்படுத்தி இருக்கிறார்கள்.
அதாவது கோபி தனது பேச்சின் ஒரு பகுதியாக நடிகர் விஜய்யை பாராட்டும் கோபி , “விஜய்யின் கோடானு கோடி ரசிக சகோதரர்களிடம் உரிமையோடு நியாயம் கேட்கிறேன் ” என்ற ரீதியில் அந்த இடத்தில் ஒரு வரி வரும்போது , மாலைக் கண் நோயாளி கவுண்டமணி திரையரங்கில் தப்பாக கைதட்டி அவமானத்துக்கு ஆளாகும் காட்சியை போட்டு உள்ளார் . அதாவது விஜய் ரசிகர்கள் எல்லாம் அறிவுக் குருடர்கள் . எந்த காட்சிக்கு கிட்ட வேண்டும் என்பது கூட தெரியாதவர்கள் என்ற பொருளில் அங்கே கவுண்டமணி காமெடியை போட்டுள்ளது முருகதாஸ் டீம்
இதை பார்க்கும் விஜய் ரசிகர்கள் உள்ளுக்குள் கறுவத் தொடங்கி இருக்கிறார்கள் .
வீடியோ பார்க்க
https://www.youtube.com/watch?v=3FOkJ8ugMIs