என் பார்வையில் the paradise suite , court

the-paradise-suite

உலகப் பட விழாவில் நான் பார்த்த the paradise suite

 வெள்ளைக்காரர்களை மட்டமாகவும் கருப்பர்களை உயர்த்தீயும் பிடித்த காரணத்தால்தான் அதற்கு ஆஸ்கார் அவார்டு கிடைக்கவில்லை என்பது சும்மா பம்மாத்து .

அதே காரணத்தால் கடைசி நேரத்தில் கழுத்தறுக்கப்பட்ட நம்ம the lagaan படத்தை ஒப்பிடும்போது the paradise suite எனக்கு பஸ் ஸ்டாண்டு லாட்ஜ் போலதான் தெரிந்தது . இதை விட எல்லாம் கொம்பான படங்கள் அந்த வருடமே வந்தது.

அப்புறம் court (marathi).

நேஷனல் அவார்டுகள் சம்மந்தப்பட்ட ஒரு தயாரிப்பாளர் சில மாதங்களுக்கு முன்பு என்னிட்ம் இந்த கோர்ட் படம்தான் என் படம் அவார்டு வாங்க பெரிய தடையாக இருக்கும் என்று ரொம்பவே சீன் போட்டார் . ஆனால் படத்தில் அந்த அளவுக்கு சீன் எல்லாம் இல்லியே ,

ஒரு வக்கீலும் ஜட்ஜும் சேர்ந்து உட்கார்ந்து திரைக்கதை வசனம் எழுதினார்களோ என்று என்ன வைக்கும் அளவுக்கு நுணுக்கம் ஒன்றே படத்தின் ஸ்பெஷல் .

பிளஸ் அவ்வளவு வசனம் உள்ள படத்தில் கூட கோர்ட்டில் தூங்கும் குமாஸ்தா , பெண்ணின் நவீன ஆடை காரணமாக வழக்கை ஜட்ஜ் தள்ளி வைக்கும் காட்சிகளில் அந்த டைப்பிங் பெண்ணின் முக பாவனை என்று இயக்குனரின் கிண்டல் அழகு .

(படம் முழுக்க நிரம்பி வழிந்த டயலாக்குகளுகான சப் டைட்டில் படிக்கும் சீரிய பணியில் இது மாதிரி எத்தனை விசயங்களை மிஸ் பண்ணினேனோ தெரியலையே )

court

மற்றபடி இதை விட எல்லாம் தமிழ் சினிமா கருத்தியல் ரீதியாக எப்போதோ எங்கேயோ போய் விட்டது . (ஒரு படத்தில் ஜட்ஜ் ஓமக்குச்சி நரசிம்மன் ஓமக்குச்சி நரசிம்மன் ஆர்டர் ஆர்டர் சுத்தியலை வைத்து மாத்திரை உடைப்பார் தெரியுமா? அதை விடவா கோர்ட் படத்தில் வரும் காட்சிகள் பெருசு )

அதே நேரம் மராட்டிய மாநில சென்சார் போர்டில் அந்த மண்ணை உண்மையாக நேசிக்கும் அளவுக்கு உப்புப் போட்டு சோறு தின்பவர்கள் இருப்பது அவர்கள் அனுமதித்து இருக்கும் வசனங்களில் தெரிகிறது . .

என்னவோ மராத்தியப் பெண்களை நம்மூரு முட்டாள் ஆண்கள் எல்லாம் காதல் என்ற பெயரில் வளைத்து மராத்தியனின் சொத்துக்களை அனுபவிப்பதாக வரும் காட்சி கடுப்பேற்றியது . (அது பிராமின்ஸ் பற்றி மட்டும்தான் சொல்லுது.. ஆந்திர வெட்டி கட்டு தெரியுதே என்று தப்பிப்பது எல்லாம் தப்பு. அவங்க பார்வையில் எல்லாமே மதராசிதானே )

வழக்கு தோற்றதும் கோர்ட் இருண்டு கிடப்பதை பார்த்து விஷயம் தெரியாதவர்கள் வேண்டுமானால் மெய் சிலிர்த்துக் கைதட்டலாம் . ஆனால் சட்டம் ஒரு இருட்டறை என்ற வார்த்தைகளை கேட்டு வளர்ந்த நமக்கு எந்த கிளர்ச்சியும் ஏற்படவில்லை .

நியாயம் கிடைக்காத அப்பாவிகள் ஜெயிலில் வாட , மக்கட்டை நீதிபதிகள் கோடை விடுமுறை என்ற பெயரில் ரிசார்ட்டுகளில் பட்டப் பகலில் வெயிலில் தூங்கிக் கொண்டு இருக்கிறார்கள் என்று சொல்வது ஓகேதான் .

ஆனால் இங்கே பல ஆகா ஓகோ என்பது எதோ வடக்கத்தி லாபியாகவே தோணுது .

aferimAFERIM … என்னால நாற்பது நிமிஷத்துக்கு மேல உட்கார முடியலீங்க . .

எனக்கென்னவோ இப்போதெல்லாம் நம்ம ஆட்கள் ஒரு மாதரியான மேற்கத்திய பாணிப் படமாக்கலில் என்ன வந்தாலும் கைதட்டி குலவை போடும் பழக்கத்துக்கு ஆளாகி விட்டாகளோ என்று தோன்றுகிறது .

CHILDREN OF HEAVEN , THE SONG OF SPARROW, SAMSAARA , THE KILLING FIELDS, THE HAIR DRESSER’S HUSBAND, SWASH, CAFE TRANSIT , TULPAN , I SERVED THE KING OF ENGLAND மாதிரியான படங்கள் இப்போது வருவதே இல்லை என்று தோன்றுகிறது

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →