நாங்கெல்லாம் ஏடாகூடம் @ விமர்சனம்

IMG_1708

குருத்துடையார் புரடக்ஷன்ஸ் சார்பில் நிர்மல் தேவதாஸ் தயாரிக்க, மனோஜ் தேவதாஸ், வீணா நாயர் இணையர் நடிப்பில் ஆர்.விஜயகுமார் என்பவர் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கி இருக்கும் படம் நாங்கெல்லாம் ஏடாகூடம் . ரசிக்க வைக்குமா படம் ஓடும் திரைக்கூடம்? பார்க்கலாம் . 

உடல் திடம் மனோதிடம் இரண்டும் தரும் சண்டைக் கலைகளில் முக்கியமானது பாக்சிங் எனப்படும் குத்துச் சண்டை. உலக அளவில் புகழ் பெற்ற இந்த விளையாட்டுக்கும் நம்ம வட சென்னைக்கும் பெரிய பந்த பாசம் உண்டு . வட சென்னையில் பாக்சிங்கிற்கு என்றே தனி வரலாறு உண்டு . தனித்தன்மை உண்டு . சொல்லப் போனால் வட சென்னை பாக்சிங் மிக ஆபத்தானது கூட . 
விளையாடும்போது கைகளுக்கு கிளவுஸ் போட மாட்டார்கள். சில ஆக்ரோஷமான தாக்குதல் முறைகள் இங்கு உண்டு . வடசென்னை பாக்சிங் போட்டிகளுக்கு பின்னால் சூதாட்டம் , ஆளை காலி பண்ணவே பாக்சிங் போட்டி அறிவிப்பது என்று பல ஆபத்துகள் உண்டு . இன்று வடசென்னையில் இருந்து பெரிய ரவுடிகளாக, தொழில் அதிபர்களாக, பெரிய மனிதர்களாக ஆகி உள்ள பலரும் அடிப்படையில் பாக்சர்கள்தான்  
இந்த அடிப்படையில் வட சென்னை கடற்கரை உப்புக்காற்று பின்னணியில் உருவாகி இருக்கும் படம்தான் நாங்கெல்லாம் ஏடாகூடம் 
DSC_0197
ஏரியாவில் பாக்சிங் கற்றுக் கொடுப்பதை ஒரு தவமாக செய்தபடி வாழும் டோக்கியோ மணி  என்ற பாக்சிங் மாஸ்டரின் (அறிமுகம் ஜார்ஜ் விஜய்)  பாக்சிங் திறமையால் கவரப்பட்டு மாரி (அறிமுக நாயகன் மனோஜ் தேவதாஸ்) மற்றும் வேலு (அறிமுகம் விசாகர்) இருவரும் சிறுவயது முதலே மணியோடு இருக்கிறார்கள். அப்படியே மாரி பாக்சிங்கும கற்றுக் கொள்கிறான். மணியின் பிரதம பாக்சிங் சிஷ்யன் பெயர் குமார் (அறிமுகம் பாலாஜி) .   
 மிகப்பெரிய கடத்தல்காரனும் பாக்சிங் சூதாட்டத்தில் ஈடுபடுபவனுமான தேவராஜிடம் (அறிமுக வில்லன் ராஜேஷ்) மணி கந்து வட்டிக்கு கடன் வாங்க வேண்டி வருகிறது . ஒரு காலத்தில் தேவராஜும் மணியிடம் பாக்சிங் கற்றுக் கொண்டவன்தான் என்றாலும் தேவராஜிடம் அந்த குருபக்தி எல்லாம் இல்லை . 
இன்னொரு பக்கம் ஜமீந்தார் குடும்பமாக இருந்து வாழ்ந்து கெட்ட ஒரு குடும்பத்துக்கு கடன் கொடுத்து வட்டி மேல் வட்டி வாங்கும் தேவராஜ்,  பணத்தை தரமுடியாத அந்த ஜமீன் குடும்பத்து தலைவரை கொண்டு விட்டு  அந்தக் குடும்பத்தின் கடைசி சொத்தாக இருந்த விலை உயர்ந்த வைரத்தை கவர்ந்து, தன் கழுத்தில் கவுரவ சின்னமாக போட்டுக் கொள்கிறான். இறந்து போனவரின் மகளான இளம்பெண் மகா (அறிமுகம் வீணா நாயர்) தேவராஜை பழிவாங்கி அந்த வைரத்தை மீட்க துடிக்கிறாள் .
இந்த கதைகள் மற்றும் பின்னணிதெரியாமலேயே மாரிக்கும் மகாவுக்கும் காதல் வருகிறது. 
IMG_0607
கடன் வாங்கி இருப்பதால் தேவராஜின் கட்டளையை மீற முடியாத மணி ஒரு நிலையில் தேவராஜின் ஆசைப்படி சூதாட்ட பாக்சிங்கிற்கு ஒத்துக் கொள்ள வேண்டி வருகிறது . சூதாட்ட திட்டப்படி மணியின் நபர் தோற்கவேண்டும் என்ற நிலையில் அதற்கு வசதியாக  மாரியை அனுப்புகிறார் மணி. ஆனால மாரி ஜெயிக்கிறான். மணிக்கு உள்ளுக்குள் மகிழ்ச்சி என்றாலும் தேவராஜின் பகைக்கு ஆளாகிறார் . 
அடுத்து சூதாட்டம் இல்லாமல் நேரடியாக ஒரு போட்டியை அறிவிக்கிறான் தேவராஜ். அதன்படி மணியின் ஆள் தோற்றால் இனி மணி பாக்சிங் கற்றுக் கொடுக்கவே கூடாது என்பதுதான் அதில் பந்தயம். 
தேவராஜ்  வடநாட்டில் இருந்து பாக்சிங் வீரர்களை இறக்குகிறான். கண்டிப்பாக ஜெயித்தாக வேண்டும் என்ற நிலையில் மணி தனது சிஷ்யனான குமாரை களம் இறக்குகிறார் . ஆனால் குமார் தேவராஜிடம காசு வாங்கிக் கொண்டு தோற்றுப் போக சம்மதித்து  விடுகிறான். 
இந்த விஷயம் மாரிக்கு  தெரிகிறது . தோற்றுப் போனால் மணி மாஸ்டர் தாங்க மாட்டார் என்ற நிலையில்,  மாரி என்ன செய்கிறான் . மகாவுக்கு அவளது குடும்ப சொத்தான வைரம் கிடைத்ததா என்பதுதான் இந்தப் படம் .
IMG_0150எளிய மண் சார்ந்த களம் இந்தப் படத்தின் பலம். 
எல்லோரும் புதுமுகங்கள் என்றாலும் கேரக்டருக்கு பொருத்தமாக இருப்பதால்,  ‘நாம் பார்ப்பது படம் இல்லை . ஒரு நிஜ நிகழ்ச்சித் தொடர்ச்சி ‘ என்ற உணர்வு  ஏற்படுகிறது. 
மணி மாரி இவர்களின் பாத்திரப்படைப்பு நன்றாக வருகிறது . மணியாக வரும் ஜார்ஜ் விஜய் நடிக்காமல் ஜஸ்ட் அப்படியே கேரக்டராகவே நடந்து கொள்கிறார் . நாயகன் மனோஜ் தேவதாஸ் இயல்பாக நடிக்கிறார். குரலும் பேச்சு பாவனையும் நன்றாக இருக்கிறது . 
IMG_0231சார்லஸ் மெர்வினின் இசையும் பாடல்களும் பரவாயில்லை ரகம். 
படத்தை ஆர்ப்பாட்டம் இல்லாமல் எளிமையாக இயல்பாக எடுத்து இருப்பது பாராட்டுக்குரியது . 
பாக்சிங் கற்றுக் கொள்வது ரவுடி ஆவதற்கோ , கடத்தல்காரன் ஆவதற்கோ அல்ல . சூதாட்ட ஆட்களுக்காக பாக்சிங் போட்டியில் கலந்து கொள்வது தவறு . பாக்சிங்கை கலையாக மதிக்க வேண்டும் என்று சொன்ன விதத்தில் கவனம் கவர்கிறது இந்தப் படம் . 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →