நயன்தாரா கிசுகிசுவுக்கு சாட்சியான பார்த்திபன்

IMG_3534
நடிகர் தனுஷின் உண்டர்பார் நிறுவனம் தயாரிக்க , விஜய் சேதுபதி, நயன்தாரா , ஆர். பார்த்திபன் , மன்சூர் அலிகான் ஆகியோர் நடிக்க போடா போடி படத்தை இயக்கிய விக்னேஷ் சிவன் அடுத்து இயக்கி இருக்கும் படம் நானும் ரவுடிதான் . 
படத்தின் டைரக்டர் விக்னேஷ் சிவன் பிரபுதேவாவுக்கு அடுத்து நயன்தாராவின் ‘நெருங்கிய’ நண்பனாக அறியப் படுபவர். 
ஓர் இளைஞன் ஒரு பெண்ணை விரும்பிக் காதலிக்க, அந்தக் காதலை ஏற்றுக் கொள்ளும் பெண் , அவனிடம் கேட்கும் காதல் பரிசு .. ஒருவனை  அடித்துத் துவைக்க வேண்டும் என்பதுதான் .  இளைஞன் விஜய் சேதுபதி . காதலி நயன். வில்லன் ஆர்.பார்த்திபன் . 
IMG_3541
பத்திரிக்கையாளர் சந்திப்பில் , படத்தில் நடித்திருக்கும் ஆர்.ஜே பாலாஜி பேசிய போது “நான் இதுவரை எத்தனையோ படங்களில் நடித்துள்ளேன் அதையெல்லாம் பார்த்து என்னுடைய அம்மா பாராட்டியதில்லை. இந்த படத்தில் நான் நடிகர் பார்த்திபன் , மன்சூர் அலி கான் போன்றோருடன் நடிக்கிறேன் என்றதும் அவருக்கு சந்தோஷம் தாங்கவில்லை. 
ராதிகா மேடத்திடம் தொடரில் அடுத்த நாள் என்ன நடக்கும் என்பதை கேட்டு,  என் வீட்டில் கூறி நான் என்னுடைய வீட்டில் உள்ளவர்களை மகிழ்வித்து விட்டேன். நீங்கள் அனைவரும் கண்டிப்பாக இந்த படத்தை 120 ருபாய் கொடுத்து பார்க்கலாம். நான் பொய் எல்லாம் சொல்லமாட்டேன்; உண்மையதான் சொல்லுவேன். கண்டிப்பாக என்னை மகிழ்வித்த இந்த படம் உங்களையும்  மகிழ்விக்கும்” என்றார்.
IMG_3539
நடிகர் மன்சூர் அலி கான்  “எனக்கு கேப்டன் பிரபாகரன் படத்தில் நடிக்கும் போது நிறைய வித்தைகளை கற்றுகொடுத்தவர் சூப்பர் சுப்ராயன் மாஸ்டர். இந்த படத்தில் திலிப் சுப்ராயன் மாஸ்டருடன் நான் பணியாற்றியுள்ளேன்.
அவருக்கு நிறைய தொழில் நுட்பம் தெரிந்துள்ளது. அவருடைய திறமைகள் பாரட்டுக்குரியது.  விக்னேஷ் சிவனை,  பார்க்க கல்லூரி மாணவர் போல் இருந்தாலும் , இயக்குனராக அவர் சிறப்பாக பணியாற்றினார் “என்றார்.
 
இசையமைப்பாளர் அனிருத் பேசும்போது ” முதலாவதாக பாடல்களை நன்றாக விமர்சித்த  பத்திரிக்கையாளர்களுக்கு நன்றி.  நானும் ரௌடிதான் திரைப்படம் நிஜமாகவே எங்கள்
அனைவருக்கும்  மனதுக்கு நெருக்கமான திரைப்படம்.
IMG_3553
எனக்கு இயக்குநர் விக்னேஷ் சிவனை பாடலாசிரியராகவும்  மிகவும் பிடித்துள்ளது. அவருடைய பாடல் வரிகள் தான் படத்துக்கு மிகப் பெரிய பலம் .  நாங்கள் அனைவரும் எங்களுடைய முழு உழைப்பையும் இந்த படத்தில் போட்டு உழைத்துள்ளோம்.”என்றார்.
நாயகன் விஜய் சேதுபதி தன் பேச்சில் “இந்த படத்தில்  வாய்ப்பளித்த  தனுஷ் சாருக்கு நன்றி .அனிருத்தின் இசை படத்துக்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பையும் விளம்பரத்தையும் கொடுத்துள்ளது. இயக்குநர் விக்னேஷ் சிவன் என்னுடைய நெருங்கிய நண்பர் . அவர் இயக்கத்தில் வெளிவந்த போடா போடி படத்தை பார்த்துவிட்டு நான் அவரை தொடர்பு கொண்டு பாராட்டினேன். அதில் இருந்து எங்களுடைய நட்பு நன்றாக வளர்ந்தது. 
IMG_3564
இயக்குநர் விக்னேஷ் சிவன் பலமுறை இந்த கதையை என்னிடம் கூறி மாற்றங்கள் செய்து இறுதியில் படத்தில் என்னை நாயகனாக நடிக்க வைத்துவிட்டார்.  நயன்தாராவோடு படத்தில் நடித்துள்ளது எனக்கு மகிழ்ச்சி” என்றார்.
நிகழ்ச்சியில் பேசிய பார்த்திபன் ” இந்தப் படத்தின் இயக்குனர் கரெக்ட் செய்வதில் வல்லவர் . நாங்க எல்லாம் பார்த்து பொறாமைப் படத்தான் முடியும் . அதாவது காட்சிகளை சரியாக கரெக்ட் செய்து  எடுப்பதில் வல்லவர்னு  சொன்னேன் . நீங்க வேற எதும் கரெக்ட் பண்றதுன்னு நினைச்சா நான் என்ன பண்ண முடியும் ?” என்று ….
நயன்தாரா — விக்னேஷ் சிவன் நெருக்கத்தை தன் பங்குக்குப் போட்டுக் கொடுத்து விட்டுப் போனார் . 
ஏதோ நம்மால முடிஞ்சுது !

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →