Mas Cinemas சார்பில் சாம் ஜோன்ஸ் தயாரித்துக் கதாநாயகனாக நடிக்க , கயல் ஆனந்தி, கரு. பழனியப்பன், வேல. ராம மூர்த்தி, ஏ. வெங்கடேஷ், வடிவேல் முருகன் நடிப்பில் கே. ஆர். செந்தில் நாதன் இயக்கி இருக்கும் படம் .
ரஜினி ரசிகராக இருக்கும் ஆட்டோ டிரைவர் அப்பா (முனீஸ்காந்த்), அன்பான அம்மா, பாசமுள்ள தங்கை – இவர்களைக் கொண்ட தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த – விளையாட்டு வீரனான கல்லூரி மாணவன் ஒருவனுக்கும் ( சாம் ஜோன்ஸ்).
அப்பாவும் ( ஏ. வெங்கடேஷ்) வேல ராமமூர்த்தி) பெரியப்பாவும் கூட்டுக் குடும்பமாக வாழ்கிற – அம்மா இல்லாத – பெரியப்பாவின் மகனான அடாவடி அண்ணனைக் கொண்ட- பெரியப்பா சொல்வதற்கு எல்லாம் தலை ஆட்டும் அப்பாவைக் கொண்ட – ஒரு சாதி வெறி குடும்பத்துப் பெண்ணான – பண்புள்ள நல்ல கல்லூரி மாணவிக்கும் ( கயல் ஆனந்தி)
வரும் நட்பும் அரும்பும் காதலும் சாதி ஆணவம் காரணமாக ஆரம்பத்திலேயே எதிர்க்கப்படுகிறது .
அவன் படித்து வேலைக்குப் போவதை முடக்கவும் முடியாவிட்டால் கொல்லவும் நாயகி குடும்பம் முடிவு செய்ய , நாயகி குடும்பத்தின் மீது பகை கொண்ட அவளது தாய்மாமன் (கரு. பழனியப்பன்) குறுக்கே புகுந்து குட்டையைக் குழப்பி லாபம் பார்க்க முயல , என்ன நடந்தது என்பதே நதி .
எளிமையாக , அழகாக, பாந்தமாக இருக்கிறார் சாம் ஜோன்ஸ். இயல்பாக , பொருத்தமாக நடிக்கிறார் .தோற்றம் உயரம் எல்லாமே மண் சார்ந்த கதாபாத்திரங்களுக்கு அவ்வளவு பொருத்தமாக விதத்தில் இருக்கிறது.
ஒரு தயாரிப்பாளராகவும் சிறப்பாக செயல்பட்டுள்ளார் என்பது மேக்கிங்கில் தெரிகிறது . ஆனந்தி பண்பட்ட நடிப்பில் மிளிர்கிறார் .
மற்ற எல்லோரும் வசனம் பேசிவிட்டுப் போகிறார்கள் .
எம் எஸ் பிரபுவின் ஒளிப்பதிவு சிறப்பு .
இசை அமைப்பாளர் திபு நினன் தாமசும் படத்துக்கு பலம் சேர்க்கிறார் . பழக்கப்பட்ட கதை, திரைக்கதை , சாரம் இல்லாத வசனங்கள், காட்சி வசனங்களில் வரும் ரிப்பிட்டேஷன் , இரண்டாம் பகுதியில் குழம்பும் திரைக்கதை, தவறான கிளைமாக்ஸ் இவை குறைகள்.