நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே @ விமர்சனம்

இசை அமைத்துப் பாடல்கள் எழுதி பிரதீப் குமார் தயாரிக்க, செந்தூர் பாண்டியன், பிரீத்தி கரன், சுரேஷ் மதியழகன், பூர்ணிமா ரவி, தமிழ் செல்வி, ஷிவானி கீர்த்தி, நடிப்பில் பிரசாத் ராமர் எழுதி இயக்கி இருக்கும் படம் .

முக நூலில் பெண்களை வளைத்து தியேட்டருக்கு அழைத்துப் போய் கசமுசா செய்வதோடு அந்தப் பெண்ணின் தோழிகளை நண்பர்களுக்கும் கொடுக்கிற ஒரு மதுரை இளைஞன் ( செந்தூர் பாண்டியன்) அதே முகநூலில் உரையாடும் கும்பகோணத்துப் பெண் ஒருத்தியின் (பிரீத்தி கரன்) பிறந்த நாள் அன்று அவளே எதிர்பாராதபடி நேரில் சென்று அவளை ஆச்சர்யப்படுத்த, நண்பனோடு பைக்கில் காலையில் ஐந்து மணிக்கு மதுரையில் இருந்து கிளம்பி கும்பகோணம் வருகிறான் .

எப்படியாவது அவளை கரெக்ட் செய்து அவளது பிறந்த நாள் அன்றே அவளை அனுபவிக்க அவன் திட்டமிட்டு முயற்சிக்க , அவளோடு அவளது தோழி ( பிக் பாஸ் பூர்ணிமா) அவளது தங்கை இருவரும் சேர்ந்து சந்திக்க, அதன் பின்னர்  நடந்தது என்ன என்பதே படம் . 

முக நூல் நட்புகள் நினைத்தது போல இருக்காது . நேர்மாறாகவும் இருக்கும் என்பதையும் , நட்போ காதலோ அல்லது ஜஸ்ட் லைக் சந்திப்போ அந்த சந்திப்பில் ஆண் சாதிக்க விரும்புவது என்ன ? சந்திப்பை பெண் எப்படி பார்க்கிறாள் என்பதையும்  சொல்லும் படம். 

சுவையான கதை. எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில் ஆரமபித்துப் பறக்கிறது . பெரும்பாலான காட்சிகளில் இருவர் மட்டுமே. நீளமான  ஷாட்கள் யதார்த்தமாக இருக்கின்றன .  ஷார்ப்பாக கட் செய்யாமல் end tail எனப்படும் வால் விட்டுக் கட் செய்யும் படத் தொகுப்பு பாணி ரசிக்க வைக்கிறது . 

கிளைமாக்சுக்கு இன்னும் கொஞ்சம் யோசித்து இருக்கலாம் . 

நேரத்தைக் காட்டுவதற்காக  வெறுமனே  பைக்கில் போவது நடப்பது போன்ற காட்சிகள் ஷாட்களுகுப் பதில் சின்னச் சின்ன சம்பவங்கள் காமெடிகள் என்று எழுத்தில் இன்னும் அடர்த்தி கொடுத்து இருந்தால் படம் நன்றாக வந்திருக்கும் . 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *