நமீதாவின் எடை குறைப்புச் சாதனை

Copy of Namita- shakshi wellness1
ஒரு கிலோ இரண்டு கிலோ எடை குறைக்கவே பலரும் ஓரியாடுவதை பார்க்கிறோம் . அதிலும் ஒரு சிலரைப் பார்க்கும்போது ‘ இவரெல்லாம் எடை குறைக்கவே முடியாது’  என்று நாம் சத்தியமே செய்வதற்கு சூடத்துக்கே சொல்லி வைப்போம் . அப்படிப்பட்ட ஒருவர் ஒரு கிலோ இரண்டு கிலோ அல்ல…. ஒரே முட்டாக இருபது கிலோ எடை குறைத்தால் எப்படி இருக்கும் ?

 அப்படி ஒரு ஆச்சர்யத்தைக் கொடுத்து இருக்கிறார் நமீதா .

இப்போது 20 கிலோ எடை குறைந்து  புதிய தோற்றத்தில்  காணப்படுகிறார் .அவரைப் பார்க்கிற யாரும் நம்ப முடியாமலேயே பார்க்கிறார்கள் .காரணம் இப்படி மெலிந்த நமீதாவை யாருமே கற்பனை செய்து கூடப்பார்க்கவில்லை என்பதுதான்.

குறைப்பு….!  நடந்தது என்ன நமீ?

Namita- shakshi wellness 7

” என் உடல் எடை அதிகமாகிக்கொண்டே போனது. பட வாய்ப்புகளும் குறைந்தன. நான் மிகுந்த மனச்சோர்வுக்கு ஆளானேன். நான் அடைந்த வருத்தமும் உளைச்சலும் கொஞ்ச நஞ்சமல்ல . .எடையைக் குறைக்க எவ்வளவோ  முயற்சி செய்து பார்த்து விட்டேன்.என்னென்னவோ பயிற்சி, சிகிச்சை முறைகள்  எல்லாம் பின்பற்றினேன். ஆனால் பலனில்லை.

மிகவும் வெறுத்துப் போய்விட்டேன் எப்படியாவது எடை குறைத்தாக வேண்டும், வாழ்வா சாவா என்கிற போராட்டம். அப்படிப்பட்ட சூழலில்தான் ‘சாக்ஷி வெல்னஸ்’ நிறுவனம் பற்றி  திரைப்படத் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மூலம் கேள்விப்பட்டேன்.

எனக்கு நம்பிக்கையில்லை. ஏனென்றால் எவ்வளவோ பார்த்தாகி விட்டது. எடைமட்டும் குறையவேயில்லை. இப்படித்தான் அவர்களையும் பார்த்தேன்.ஆரம்பத்தில் அவர்கள் மீது நம்பிக்கையில்லை. முதலில்  ஒன்றரை கிலோ எடை குறைந்தது. எனக்கே அது ஆனந்த அதிர்ச்சியாக இருந்தது, பிறகுதான் நம்பிக்கை வந்தது.

Namita- shakshi wellness 3

இப்படி முன்றே மாதங்களில் சுமார் 20 கிலோ எடை குறைந்தது. அவர்கள் சிகிச்சை, பயிற்சி, உணவு முறை இவற்றை சரிவர பார்த்துக் கொண்டார்கள். நம்பிக்கையையும் ஊக்கமும் கொடுத்தார்கள். இப்போது நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன். மற்றவர்களுக்கும் சிபாரிசு செய்கிறேன். சாக்ஷி வெல்னஸ் நிறுவனத்துக்கு பிராண்ட் அம்பாசிடராகவும் ஆகிவிட்டேன்.

என்னை இப்போது பார்ப்பவர்கள்  என் உணவு பற்றிக் கேட்கிறார்கள். அரிசி உணவுகளை முற்றிலும் தவிர்த்து விட்டேன். காபி, டீ, கிடையாது. நான் ஒரு பீட்ஸாப் பிரியை. பீட்ஸா டோமினோவில் நான்  பிளாட்டினம் மெம்பர். அந்த அளவுக்கு பீட்ஸா சாப்பிடுவேன். ஆனால்  நான் இப்போது மாதம் ஒன்றுதான் சாப்பிடுகிறேன்” என்கிறார், வெயிட்லஸ் ஆக !

Namita- shakshi wellness1

”இப்போது நான் ஆக்ஷன் நாயகியாக நடிக்க விரும்புகிறேன். எனக்கு அரசியல் ஆர்வம், ஈடுபாடு உண்டு. நிச்சயமாக அரசியலில் ஈடுபடுவேன். பல கட்சிகளிடமிருந்து அழைப்பு வந்தது. ஆனால் எப்போது அரசியலில் இறங்குவது என்று இப்போதே சொல்ல முடியாது.

என் சொந்த ஊர் குஜராத் என்பதே எனக்கு மறந்து விட்டது. ஹோலி, ராக்கி ரக்ஷாபந்தன் எல்லாம் மறந்து விட்டது.எனக்கு  இங்குள்ள  பொங்கல்தான் நினைவுக்கு வருகிறது. தமிழ்நாடு சென்னையை விட்டு எங்கும் போக மாட்டேன்” என்கிறார் நமீதா

நிகழ்ச்சியில் சாக்ஷி வெல்னஸ்  நிறவனத்தின் நிர்வாக இயக்குநர் சிவாஜி குணா பேசும்போது,”இங்கு அல்ட்ரா சவுண்ட் ரேடியோ ஃபிரீக்வன்ஸி முறையில் தான் எடை குறைக்கப் படுகிறது. இம்முறையில் கொழுப்பு செல்கள் அழிக்கப்பட்டு  வியர்வையாக வெளியேற்றப்படுகிறது.” என்கிறார். 

நமீதாவை இனி நமீடா என்று கூப்பிடலாமா?

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →