விரைவில் திரையில், D16 கார்த்திக் நரேனின் ‘நரகாசுரன் ‘

துருவங்கள் பதினாறு  படத்தின் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில், 
 

ஷ்ரத்தா என்டர்டைன்மென்ட் சார்பில் பத்ரி கஸ்தூரி தயாரிக்க, 

அரவிந்த்சாமி, ஷ்ரேயா, இந்திரஜித்  சுகுமாரன், சந்தீப் கிஷன் , ஆத்மிகா நடிப்பில் உருவாகி இருக்கும் நரகாசுரன் படம் ஆகஸ்டு மாதத்தில் திரைக்கு வருகிறது . 
 
இதையொட்டி நடந்த  டீசர் வெளியீட்டு பத்திரிகையாளர் சந்திப்பில் திரையிடப்பட்ட டீசர் , ஊட்டியில், 
 
இரவில் நடக்கும் சம்பவங்களோடு அழகான காட்சிகளோடு அதிர வைக்கும் நிகழ்வுகளோடு விரிந்தது .நிகழ்ச்சியில் பேசிய கிட்டி , ” கார்த்திக் நரேன் போன்ற ஒரு பர்பெக்டான இயக்குனரை – இது போன்ற ஓர் அற்புதமான குழுவை, 
 
அண்மைக் காலங்களில் நான் பார்க்கவில்லை . அவருக்கு இன்னும் உயரங்கள் காத்திருக்கிறது . ” என்றார் . 
“ஒரு காட்சியை பாதி எடுத்து விட்டு பல நாட்கள் கழித்து மீதியை எடுப்பார்கள் . ஆனால் ஒரு சிறு தவறோ மாற்றமோ இல்லாமல் ,
 
அப்படியே மறு உருவாக்கம் செய்து அசத்தினார்கள்” என்றார் நடிகர் தாடி வெங்கட் 
 
ஒளிப்பதிவாளர்  சுஜீத் சாரங் பேசும்போது ” துருவங்கள் பதினாறு படத்துக்குப் பிறகு இந்தப் படத்திலும் இணைந்து இருக்கிறோம் .
 
அந்தப் படத்தில் பேப்பரில் என்ன எழுதினாரோ அதை அப்படியே ஒரு ஷாட் கூட , கூடவோ குறையவோ இல்லாமல், 
 
சொன்ன நாட்களின் எண்ணிக்கையில் எடுத்து முடித்தார் . இந்தப் படத்தில் அதே நேர்த்தி . சொல்லப் போனால் இன்னும் அதிக நேரத்தி ” என்றார் . “இப்படி ஒரு படத்தில் நடித்ததை என் வாழ்நாள் பாக்கியமாக கருதுகிறேன் ” என்றார் சந்தீப் கிஷன் . 
 
அரவிந்த்சாமி பேசுகையில் ” துருவங்கள் பதினாறு படத்தின் நேர்த்தியை பார்த்து நான் இந்தப் படத்தில் சந்தோஷமாய் நடித்தேன் .
அந்த சந்தோசம் இப்போது அதிகமாகி இருக்கிறது . அந்த அளவுக்கு மிக சிறப்பாக படத்தை உருவாக்கி இருக்கிறார் . படம் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் ” என்றார் . 
 
இயக்குனர் கார்த்திக் நரேன் தனது பேச்சில் ” இது ஒரு மிஸ்டரி திரில்லர் படம் . படபிடிப்பு ஊட்டியில் நடந்த பல நாட்களில் கடும் குளிர்.
 
தவிர படத்தில் அந்த நேரத்தில் பல மழைக் காட்சிகளும் உண்டு . படத்தில் ஈரமான குளிர் சூழல் அதிகம் வரும் . எனவே படப்பிடிப்பு சிரமமான ஒன்று . 
அந்த சமயத்தில் நடிக நடிகையரின் ஒத்துழைப்பு இல்லாவிட்டால் நினைத்தபடி படத்தை உருவாக்குவது கஷ்டம் . 
 
ஆனால் எனக்கு எல்லோரும் கொடுத்த ஒத்துழைப்பு அபாரமானது .
 
ஆகஸ்ட் மாத கடைசி வார வாக்கில் படம் திரைக்கு வருகிறது . படம் எல்லோரையும் கவரும் என்று நம்புகிறேன் ” என்றார் . 
 
மையத்துக்கு வர வாழ்த்துகள் கார்த்திக் நரேன் !

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *