தேய்கிறது ‘தேசிய விருது’ எடிட்டர் கிஷோரின் குடும்பம்

APPA 2
அறிவிக்கப்பட்டு இருக்கும்  தேசிய திரைப்பட விருதுப் பட்டியலில்  விசாரணை படம் சிறந்த மாநில மொழி படமாக விருது பெறுவதோடு , 
அந்தப் படத்தில் நடித்த சமுத்திரக்கனி சிறந்த துணை நடிகருக்கான விருதையும் , படத்தின் எடிட்டரான மறைந்த கிஷோர் அதே படத்துக்காக சிறந்த எடிட்டருக்கான விருதையும் பெற்று இருக்கிறார்கள்.
இவர்களோடு தாரை தப்பட்டை படத்துக்காக இசைஞானி இளையராஜா சிறந்த பின்னணி இசைக்கான  தேசிய விருதையும் பெற்று இருக்கிறார் .
விருதுப் பட்டியல் மகிழ்வு அளித்தாலும்,  எடிட்டர் கிஷோர் அதீத வேலைப் பளு காரணமாக உடல் நலிவுற்று மரணம் அடைந்த  விஷயம், அவருக்கு  விருது அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த நேரத்தில்,
கனத்த நெகிழ்வை உருவாக்குகிறது 
அந்த மனிதன் உயிரோடு இருந்திருந்தால் விசாரணை போன்ற இன்னும் எத்தனை படைப்புகளுக்கு உயிர் தருவானோ என்ற .ஏக்கம் எழுகிறது . 
ஒரு படைப்பு சிறப்பாக வர வேண்டும் என்பதற்காக அந்த படம் சம்மந்தப்பட்ட பலரும் மெய் வருத்தி உழைப்பது ஒன்றும் புதிய  விஷயம் இல்லை . 
ஆனால் ஒரு காலத்தில் இயக்குனர்களுக்கு எடிட்டிங் சென்ஸ் அதிகம் இருந்தது . 
பீம்சிங் ,கே.ஷங்கர் போன்ற திரைக்கலை மேதைகள் எடிட்டராக இருந்து இயக்குனர் ஆனவர்கள். எனவே தேவை இல்லாமல் நிறைய படம் பிடிக்க மாட்டார்கள் .  
APPA 4
ஆனால் பின்னாளில் இயக்குனர்கள் எடிட்டிங் என்பது,  தான் சம்மந்தபட்ட விஷயம் இல்லை என்ற  முடிவுக்கு வந்தார்கள் . எனவே தோணுவதை எல்லாம் படமாக்கித் தள்ளி விட்டு ,
எடிட்டிங்கில் பார்த்துக் கொள்ளலாம் என்ற பழக்கத்துக்கு வந்தார்கள் .  அவர்களாவது எடிட்டிங்கில் உடன் உட்காருபவர்களாக இருந்தார்கள் . 
ஃ பிலிம் பயன்பாடு இல்லாமல் போன பிறகு,  இப்படி அளவு இல்லாமல் படம் எடுத்துக் குவிக்கும் பழக்கம் அதிகம் ஆனது. அதோடு அப்படி எடுத்துக் கொண்டு வந்ததை எடிட்டரிடம் கொட்டி,
 தொகுத்துக் கொடுக்கச் சொல்லும் வழக்கம் பெருகியது  . 
தவிர  மாறி வரும் புரமோஷன் உத்திகளின் அடிப்படையில்  டிரைலர்,  டீசர், டி வி ஸ்பாட்ஸ் என்று,  வேலைகளும்  அதிகம் ஆனது . 
அது  மட்டுமல்ல படங்களை ரிலீஸ் செய்வதில் உள்ள குழப்பம் காரணமாக,  அதிக வேலைகளை குறைவான நேரத்தில் செய்ய வேண்டிய கட்டாயம் . அதனால்  ஓய்வொழிச்சல் இல்லாத நிலை . 
ஓபி அடிப்பவர்கள் என்றால் பிரச்னை இல்லை . ஆனால் சின்சியர் ஆன நபர்களுக்கு இது ஒரு சித்திரவதையே .
இப்படி ஓய்வின்றி  பல படங்களுக்கு வேலை செய்ததால் உயிரைக் கொடுத்தவர் கிஷோர் . 
அவருக்குத்தான் இப்போது தேசிய விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஆனால் இப்படி பல படங்களுக்கு உழைப்பைக் கொடுத்து உயிரையும் கொடுத்து , மரணித்த பிறகு தேசிய விருது  எடிட்டராக அங்கீகாரம் பெற்று இருக்கும் கிஷோரின் குடும்பம் எப்படி இருக்கிறது . ? 
APS
எடிட்டர் கிஷோரின் தந்தையாரிடம் சக பத்திரிக்கையாளர் ஒருவர் தொலைபேசியில் பேசியபோது அந்த தந்தை  கதறி அழுதது நெஞ்சை உலுக்கி இருக்கிறது .
உடல் நலத்திலும், பொருளாதார ரீதியிலும் மிகுந்த சிரமத்தில் இருப்பதாக சொல்லி இருக்கிறார் அந்த தந்தை 
மகனை இழந்த தந்தைக்கு கிஷோரால் பலன் பெற்றவர்கள் என்ன செய்யப் போகிறார்கள்?  தமிழ் சினிமா உலகமும் விருது கொடுக்கும் இந்திய சினிமா உலகமும்  என்ன செய்யப் போகிறது ?
இதுதான் அந்த தந்தையின் முகவரி . 
Editor kishore father, 21/32, drowpathi Amman koil street, kumara kuppam, valavanur – 605108. PH – 9600249340
IF YOU ARE ALL NOT HANDICAPPED , PREPARE TO SAVE  HIM NOW !

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →