விவகாரமான கதையில் ‘நட்பதிகாரம் – 79’ ?

natpathikaram 1
ஜெயம் சினி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் ராஜ் பரத், ரேஷ்மி மேனன், அம்ஷாத், தேஜஸ்வி என இளம் நடிகர்கள் நடித்திருக்கும் படம் நட்பதிகாரம் – 79.
கண்ணெதிரே தோன்றினாள். மஜ்னு போன்ற படங்களை இயக்கிய ரவிச்சந்திரன் இயக்கி இருக்கும் படம் இது
 
நட்பதிகாரம் – 79. ?
 
திருக்குறளின் 79 அதிகாரம் நட்பு .
 
நட்பைப் பற்றி பத்து அருமையான திருக்குறள்களை இயற்றி இருப்பார் தெய்வப் புலவர்
 
செயற்குஅரிய யாவுள நட்பின்? அதுபோல்
வினைக்குஅரிய யாவுள காப்பு?

நட்பைப்போல் செய்துகொள்வதற்கு அருமையானவை எவை உள்ளன? அதுபோல் தொழிலுக்கு அரிய காவலாக இருப்பவை எவை உள்ளன?
 
natpathikaran 7
நிறைநீர நீரவர் கேண்மை பிறை:மதிப்
பின்நீர பேதையார் நட்பு.

அறிவுடையவரின் நட்பு பிறை நிறைந்துவருதல் போன்ற தன்மையுடையன; அறிவில்லாதவரின் நட்பு முழுமதி தேய்ந்து பின்செல்லுதல் போன்ற தன்மையுடையன.
 
நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு.

பழகப் பழக நற்பண்பு உடையவரின் நட்பு இன்பம் தருதல், நூலின் நற்பொருள் கற்கக் கற்க மேன்மேலும் இன்பம் தருதலைப் போன்றதாகும்
natpathikaram 2
நகுதல் பொருட்டன்று நட்டல்: மிகுதிக்கண்

மேற்சென்று இடித்தல் பொருட்டு..

நட்புச் செய்தல் ஒருவரோடு ஒருவர் சிரித்து மகிழும் பொருட்டு அன்று; நண்பர் நெறி கடந்து சொல்லும்போது முற்பட்டுச் சென்று இடித்துரைப்பதற்காகும்.

 
புணர்ச்சி பழகுதல் வேண்டா: உணர்ச்சிதான்
நட்புஆம் கிழமை தரும்.
நட்புச் செய்வதற்குத் தொடர்பும் பழக்கமும் வேண்டியதில்லை; ஒத்த உணர்ச்சியே நட்பு ஏற்படுவதற்கு வேண்டிய உரிமையைக் கொடுக்கும்.
 

போட்டோ  பாக்கற கேப்ல , அப்படியே  திருக்குறளையும் படிச்சுக்குங்க கண்ணுகளா !
போட்டோ பாக்கற கேப்ல , அப்படியே திருக்குறளையும் படிச்சுக்குங்க கண்ணுகளா !

முகம்நக நட்பது நட்பன்று: நெஞ்சத்து

அகம்நக நட்பது நட்பு.
முகம் மட்டும் மலரும்படியாக நட்புச் செய்வது நட்பு அன்று; நெஞ்சமும் மலரும்படியாக உள்ளன்புகொண்டு நட்புச் செய்வதே நட்பு ஆகும்.
 
அழிவின் அவைநீக்கி ஆறுஉய்த்து அழிவின்கண்
அல்லல் உழப்பதாம் நட்பு.

அழிவைத் தரும் தீமைகளிலிருந்து நீக்கி, நல்ல வழியில் நடக்கச் செய்து, அழிவு வந்த காலத்தில் உடனிருந்து துன்பப்படுவதே நட்பாகும்.
 
Natpathigaram-79 Tamil Movie Stills 30
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதுஆம் நட்பு.

உடை நெகிழ்ந்தவனுடைய கை, உடனே உதவிக் காப்பது போல், (நண்பனுக்குத் துன்பம் வந்தால்) அப்பொழுதே சென்று துன்பத்தைக் களைவது நட்பு.
 
நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனில் கொட்பின்றி
ஒல்லும்வாய் ஊன்றும் நிலை.

நட்புக்குச் சிறந்த நிலை எது என்றால், எப்போதும் வேறுபடுதல் இல்லாமல், முடியும்போதெல்லாம் உதவி செய்து தாங்கும் நிலையாகும்.
 
natpathikaram 4
இனையர் இவர்எமக்கு இன்னம்யாம் என்று
புனையினும் புல்லென்னும் நட்பு.

இவர், எமக்கு இத்தன்மையானவர், யாம் இவர்க்கு இத்தன்மையுடையேம்` என்று புனைந்துரைத்தாலும் நட்புச் சிறப்பிழந்துவிடும். (உரை விளக்கம் நன்றி :டாக்டர் மு.வரதராசனார்)
 
— ஆகிய இந்தப் பத்துக் குறள்களில் ஒவ்வொரு குறளையும் வைத்தே  பத்து படத்துக்கு கதை எழுதலாம் . 
 
ஆனால் இந்த நட்பதிகாரம் படம் தற்காலத்திய நட்பு மற்றும் காதலை விவரிக்கும் வகையில் எடுக்கப்பட்டு இருப்பதாக இயக்குனர் ரவிசந்திரன் கூறினாலும்
(ஒரு வேளை எதுவும் விவகார வில்லங்கமான கதையா இருக்குமோ ?) ,
natpathikaram 3
மேலே உள்ள எதாவது ஒரு குறளின் கருத்து உள்ளே இருக்கும் என்று கூறப்படுகிறது .
 
தணிக்கையில் U சான்றிதழ் பெற்றுள்ள இந்தப் படம் அடுத்த மாதம் திரைக்கு வருகிறது.
 
படத்தின் டிரைலர் லிங்க்
—————————————
https://www.youtube.com/watch?v=eqUe6GU6gSk&feature=youtu.be

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →