கோதண்டபாணி பிலிம்ஸ் எம்.செந்தில்குமார் தயாரிப்பில் உருவான ஜீவா – நயன்தாரா நடித்த “திருநாள்” திரைப்படத்தின் ட்ரெய்லர் தீபாவளி திருநாளை முன்னிட்டு இன்று நள்ளிரவு 12:01 மணி முதல் வெளியிடப்பட உள்ளது.
கடந்த 2006ம் ஆண்டு திபாவளி அன்று ஜீவா, நயன்தாரா நடிப்பில் வெளியான “ஈ” பிரம்மாண்ட வெற்றியை பெற்றது. தற்போது அதே ஹிட் காம்பினேஷன் மீண்டும் இணைந்திருக்கும் படம் “திருநாள்” என்பதால் படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஸ்ரீயின் இசையில் , மகேஷ் முத்துசுவாமியின் ஒளிப்பதிவில்…
அம்பா சமுத்திரம் அம்பானி படத்தை இயக்கிய பி.எஸ்.ராம்நாத் இத் திரைப்படத்தை இயக்கியுள்ளார்.