தமிழக அரசின் புதிய கேளிக்கை வரி காரணமாக தியேட்டர்கள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டது .
இதான் எதிரொலியாக பல சினிமா நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன .
ஆனால் தனது நெஞ்சிலே துணிவிருந்தால் படத்தின் இசை வெளியீட்டை தள்ளி வைக்காமல்ந டத்திக் காட்டினார் சுசீந்திரன் .
நெஞ்சிலே துணிவிருந்தால் படத்தில் சந்தீப் மற்றும் விக்ராந்த் கதாநாயகன்களாகவும், மெஹ்ரீன் நாயகியாகவும் நடித்துள்ளனர்.
இவர்களுடன் சூரி, அப்புக்குட்டி, ஹரிஷ் உத்தமன், சாதிகா, வினோத் கிஷன், மகேந்திரன், அருள்தாஸ், திலீபன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
சுசீந்திரன் கதை, திரைக்கதை வசனம் எழுதி இயகியுள்ளார். பாடல்களை வைரமுத்து, யுகபாரதி மற்றும் மதன் கார்க்கி எழுத, டி.இமான் இசையமைத்துள்ளார்.
ஜே.லக்ஷ்மன் ஒளிப்பதிவு செய்ய, மு.காசிவிஸ்வநாதன் படத்தொகுப்பு செய்த்துள்ளார். அன்னை பிலிம் பாக்டரி சார்பாக மேனேஜர் ஆண்டனி தயாரித்துள்ளார்.
படத்தின் இசை வெளியீடு விழாவில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர் கே.ஈ.ஞானவேல்ராஜா, பொருளாளர் எஸ்.ஆர்.பிரபு,
தயாரிப்பாளர்கள் தனஞ்செயன், அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா, சக்திவேல், நடிகர் சங்க பொருளாளர் கார்த்தி, இயக்குனர்கள் கண்ணன், எஸ்.ஆர்.பிரபாகர், அமுதேஷ்வர் மற்றும் படத்தில் நடித்த நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் கலந்துகொண்டனர்.
இப்படத்தின் இசை தகட்டினை நடிகர் கார்த்தி வெளியிட இயக்குனர் சுசீந்திரனின் நண்பர்கள் இருவரும்,
மேடையில் இருந்த படக்குழுவினரும், சிறப்பு விருந்தினர்களும் பெற்றுகொண்டனர்.
நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியது வில்லன் நடிகர் ஹரீஷ் உத்தமன்
” இது நட்பை மையப்படுத்திய படம் . புரடக்ஷன் மேனேஜரா இருக்கற ஆண்டனி சாரை இந்த நெஞ்சிலே துணிவிருந்தால் படத்துக்கு புரடியூசர் ஆக்கியபோது ‘படம் ஓடலன்னா என் மேனேஜர் வேலைக்கும் வேட்டு வச்சிடுவாங்களே சார்’ என்று பயந்தார் . நான் அவர் கிட்ட ‘கவலையே படாதீங்க.
இன்னும் பத்து வருஷமாவது நான் படம் எடுப்பேன். எல்லா படத்துக்கும் உங்களையே மேனேஜரா போடறேன்’னு தைரியம் சொன்னேன் என்றார் சுசீந்திரன் .
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இயக்குனர் சாய் ரமணி ” சினிமாவுக்கு என்று ஒரு ஸ்டுடியோ காட்டித்தராத — சலுகைகள் தராத- எந்த வசதியும் செய்து தராத அரசு,
வரி போடுவது மட்டும் என்ன நியாயம் ? இப்படி சினிமாவை ஆளும் அரசு அழிக்க நினைத்தால்,
அடுத்த முதல்வர் மீண்டும் சினிமாவில் இருந்த வருவதை தவிர்க்க முடியாது ” என்றார்
மாதா பிதா குரு நண்பன் என்று புது வரிசை சொல்கிறது படம் . பெண்களை திட்டி பாடல்கள் வரும் நிலையில் பெண்களை உயர்த்தி ஆண்களை கண்டித்து ஒரு பாடல் எழுதியுள்ளார் வைரமுத்து .