கிளாப் இன் ஃபில்மோடைன்மென்ட் சார்பில் கே ஆர் நவீன் குமார் தயாரிக்க, ஷாரிக் ஹாசன், ஹரிதா, மோனிகா ரமேஷ், திவாகர் குமார், ஆனந்த், காவ்யா அமிரா, அரவிந்த், பாலா, செல்வா, தயாரிப்பாளர் நவீன் குமார் ஆகியோர் நடிக்க, சாய் ரோஷன் கே ஆர் எழுதி இயக்கி இருக்கும் படம்.
விஸ்காம் முடித்த நண்பர்கள் குழு ஆண்களும் பெண்களுமாக ஊட்டிக்கு சுற்றுலா செல்கிறது . போன இடத்தில் அவர்களுக்குள் சிறு சிறு மோதல்கள் ஏற்பட, ஒரு நிலையில் ஒருவர் ( ஷாரிக்) காணமல் போகிறார் . அது பற்றி அவர்கள் போலீசிடம் புகர் கொடுக்க, அவர் கொல்லப்பட்டு இருக்கலாம் என்று என்ற முடிவுக்கு போலீஸ் வரும் நிலையில் புகார் கொடுத்தவரும் (அரவிந்த்) காணமல் போகிறார்.
இரண்டு பேர் பற்றியும் மற்றவர்களிடம் போலீஸ் விசாரிக்க , ஒவ்வொருவரும் தங்கள் கோணத்தில் சம்பவங்களையும் விவரங்களையும் சொல்ல காணமல் போனவர்களுக்கு என்ன ஆயிற்று? ஏன் ஆயிற்று? எப்படி எதற்கு ஆயிற்று என்பதே படம்.

அகிரா குரோசோவாவின் ரோஷமான், அதைத் தழுவி தமிழில் சிவாஜி நடிப்பில் உருவான பாதுகாப்பு , அப்புறம் கமல் நடித்த விருமாண்டி போன்ற படங்களின் உத்தியில் உருவாகி இருக்கும் படம். உத்தி மட்டும்தான் .
ஒரு முக்கியமான விஷயத்தை கோட்டை விட்டு விட்டார்கள்.
இது போன்ற படங்களுக்கு தேவையான மேக்கிங், ஒரே கதை ஒரே சம்பவங்கள் கூட மீண்டும் மீண்டும் வர வாய்ப்பு உண்டு என்பதால், ஒவ்வொரு முறை வரும்போதும் வேறு கோணத்தில் வேறு தன்மையில் அவை படமாக்கப்பத வேண்டும் . அதை மொத்தமாக கோட்டை விட்டு அதே ஷாட் அதே கோணம் என்று மீண்டும் மீண்டும் வருவது பொறுமையை சோதிக்கிறது.
மற்றபடி நடிக நடிகையரின் நடிப்பு சிறப்பு .

போலீஸ் விசாரணை பற்றிய காட்சிகள், நம்பகத்தன்மை குறைவான கதாபாத்திரங்கள், , குற்றங்களுக்கான காரணம் போன்ற விசயங்களில் பக்குவம் இன்மை .என்று மொத்த கதை திரைக்கதையும் பலவீனமாக நிற்கிறது
படத்தில் நடித்து இருப்பவர்கள் எல்லோரும் சிறப்பாகவே நடித்துள்ளனர் . விசாரணை அதிகாரியாக நடித்துள்ள செல்வாவின் நடிப்பு அவ்வளவு யதார்த்தம்.
விஷால் எம் செய்திருக்கும் ஒளிப்பதிவு , கெவின் என் னின் பாடல்கள் இரண்டும் பாம்பும் இல்லை. மீனும் இல்லை . சைக்கோ கொலையாளி விசயமும் பலன் தரவில்லை.
நேற்று இந்த நேரம்…. எல்லா வகையிலும் கூடுதல் நேர்த்தி தேவை . எனினும் ஒரு நல்ல முயற்சி.