பொறியியல் பட்டதாரியான சுரேஷ்குமார், டெல்லியில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிப்புரிந்துக் கொண்டிருக்கும்போதே, நடிப்பின் மீது உள்ள ஆர்வத்தினால், அங்கே இருந்த நடிப்பு பள்ளி ஒன்றில் நடிப்பு பயிற்சியும், நடனப் பள்ளி ஒன்றில் நடனப் பயிற்சியும் பெற்றார். பிறகு வேலையை விட்டுவிட்டு, நடிக்க வாய்ப்புத் தேடி சென்னைக்கு வந்த அவர், சென்னையில் கூத்து பட்டறை ஆசிரியர் ஒருவரிடமும் நடிப்பு பயிற்சியை மேற்கொண்டார்.
இந்த படங்கள் மட்டும் இன்றி, தெலுங்கிலும் இரண்டு படங்களில் நாயகனாக நடித்து வரும் சுரேஷ்குமாரிடம், “முதல் படத்திலேயே இரட்டை வேடங்களில் நடித்த அனுபவம் எப்படி இருந்தது?” என்று கேட்டபோது “, முதல் படத்துக்காக கேமரா முன்பு நிற்பதே ஒரு புதுமையான அனுபவம் தான். அதோடு இரட்டை வேடம் என்றதும், கொஞ்சம் பரபரப்பாக இருந்தது. ஆனால் நான் டெல்லியில் பயின்ற நடிப்பு பயிற்சியும், சென்னையில் கூத்து பட்டறை ஆசிரியரிடம் பயின்ற பயிற்சியும் எனக்கு உதவியாக இருந்தது.
அதோடு “பூக்களுக்கு மரியாதை, மிஸ் பண்ணாதிங்க அப்புறம் வருத்தப்படுவிங்க ஆகிய இரண்டுப் படங்கள் வெளியான பிறகு தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் தன்னை தமிழ் ரசிகர்கள் பார்ப்பார்கள்” என்கிறார் நம்பிக்கையுடன்.

வாழ்த்துகள் சுரேஷ்குமார். !