‘அடுத்தடுத்து அனல் மின் நிலையங்கள் மட்டும் அல்லாது கல்பாக்கத்தில் மேலும் அணு உலைகள் கூடங்குளத்தில் அதற்குள் இன்னொரு அணு உலை , பூமிப் பந்தையே புரட்டிப் போடும் அளவுக்கு தேனியில் திட்டமிடப்படும் நியூட்ரினோ திட்டம் .. இப்படி மத்திய அரசு தொடர்ந்து தமிழகத்தை வேட்டைக்காடாக்கி அதன் பலன்களை மட்டும் இந்தியாவின் மற்ற பகுதிகளுக்கு கொடுக்கும் கொடுமையை இனத்துவேஷத்தொடு செய்து வருவதை அறிவும் உணர்வும் உள்ள பலரும் கண்டித்துக் கொண்டு இருக்கும் வேளையில் …
இது போதாதென்று , பூத் தேன் கொழிக்கும் பூமியில் மீத்தேன் தேடும் மடையர்கள் என , காவிரி டெல்டா பகுதியை பாலைவனம் ஆக்கும் முயற்சி… இவைகளுக்கெல்லாம் நிலம் கையகப்படுத்தும் சட்டம் ஆகியவற்றை கொண்டு வந்து மத்திய அரசு தமிழினத்துக்கு திட்டமிட்டு மிகப்பெரிய கொடுமைமையை செய்து வருகிறது . இதன் மூலம் தமிழ்நாட்டிலேயே தமிழர்களை வாழ்வாதாரம் இழந்து அகதிகளாக ஆக்கும் வேலையை செய்கிறது
உலகம் முழுக்க மக்கள் எல்லோரும் மீத்தேன் எடுக்கும் திட்டங்களை எதிர்த்து போராடும் வேளையில் தமிழகத்தின் நீர் , நிலம் காற்று அனைத்தையும் அழிக்கும் எண்ணத்தில் மத்திய அரசு நடந்து கொள்கிறது …
— என்ற உணர்வில் மாணவர்கள் இளைஞர்கள் சமூக பொறுப்புள்ள பொதுமக்கள் இவர்களைக் கண்டித்து தமிழர் விடியல் கட்சி என்ற கட்சியை மா. டைசன் மற்றும் உ. இளமாறன் ஆகிய இருவரும் துவங்கி இருக்கிறார்கள் .
இருவரும் மாநில ஒருங்கிணைப்பாளர்களாக பணியாற்றும் இந்தக் கட்சியின் கொடியை தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தலைவர கு. ராமகிருட்டிணன் அறிமுகம் செய்து வைத்தார்
முதல் கட்டமாக காவிரி டெல்டா மாவட்டங்களை பாலைவனம் ஆக்கும் மீத்தேன் திட்டத்தை கண்டித்து டெல்டா மாவட்ட மக்களையும் தோழமை அமைப்புகளையும் திரட்டி ஒரு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை தஞ்சை பழைய பேருந்துநிலையம் அருகில் நடத்தியது தமிழர் விடியல் கட்சி .
இதில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் , விடுதலைத் தமிழ்ப் புலிகள் கட்சி , மே பதினேழு இயக்கம், பேரிழப்புக்கு எதிரான இயக்கம் ஆகிய அமைப்புகள் கலந்து கொண்டன .
“இனி மக்களுக்கு எதிரான அனைத்து திட்டங்களுக்கும் எதிராக போராடி அவற்றை தடுத்து நிறுத்துவோம்” என்கிறார்கள் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர்களாக பணியாற்றும் மா. டைசன் மற்றும் உ. இளமாறன் இருவரும்.
வாழ்த்துகள்!
Comments are closed.