பதினான்காம் தேதி வெளியாக இருக்கும் தாரை தப்பட்டை படத்துக்காக , பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர் நாயகன் சசி குமார், நாயகி வரலக்ஷ்மி , மற்றும் இயக்குனர் ஜி எம் குமார் .
சசிகுமார் பேசும்போது “படத்தில் நான் சன்னாசி என்ற பெயர் கொண்ட கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் . நாட்டுப் புறக் கலைக்குழு ஒன்றை நடத்தும் கதாபாத்திரம். கலைக்குழுவில் தவில் வாசிப்பவர் வரவில்லை என்றால் நானே தவில் வாசிக்கணும். நாயனம் வாசிப்பவர் லீவு என்றால் நான்தான் நாயனம் வாச்கிக்கணும். இதுதான் எனது கேரக்டர் . .
நாட்டுப்புறக் கலைஞர்களின் வாழ்வியலை சொல்லும் படம் இது. பாலா சார் ஆரம்பித்த படத்தில் ஒரு நிலையில் நானும் தயாரிப்பாளராக இணைந்தேன் .
அவரது அசிஸ்டன்ட் ஆக இருந்த நான் அவரது படத்தில் நடிப்பது சந்தோஷமான விஷயம் . படப்பிடிப்பு முழுக்க அவ்வளவு ஜாலியாக இருந்தது. பொதுவாக அவரை எல்லோரும் ரொம்பக் கோபக்காரர் என்று சொல்வார்கள் . ஆனால் அசிஸ்டன்ட் ஆக இருந்த என்னிடம் கூட அவர் கோபப்படவில்லை . ” என்று சொல்லும் சசிகுமார்,
தாரை தப்பட்டை படத்தை அடுத்து ஒரு படத்தையும் முடித்து விட்டு வந்து விட்டார் . அதோடு ” மீண்டும் அதர்வாவும் விஷாலும் பாலா படத்தில் நடிக்கிறார்கள்” என்ற தகவலையும் சொன்னார் .
” சன்னாசி நடத்தும் கலைக்குழுவில் இருக்கும் சூறாவளி என்ற ஆட்டக்காரி கேரக்டரில் நான் நடிக்கிறேன் .” என்று ஆரம்பித்த வரலக்ஷ்மி, ” போடா போடி படத்துக்குப் பிறகு நான் நடித்த மதகஜராஜ தமிழ்ப் படம் வெளிவரவில்லை. அடுத்து ஒரு கன்னடப்படத்தில் சுதீப்புடன் நடித்தேன் .
ஆக, தமிழைப் பொறுத்தவரை போடா போடிக்கு அடுத்து நான் நடித்து வரும் தமிழ்ப் படம் இதுதான். அதுவும் பாலா படம் . அதிலும் கிராமத்துப் பெண் கேரக்டர் . ‘கிராமத்துப் பெண் கேரக்டருக்கு நான் செட் ஆக மாட்டேன்’ என்று சொல்லி பல இயக்குனர்கள் என்னை தவிர்த்தது உண்டு
ஆனால் பாலாவே என்னை கிராமத்துப் பெண் கேரக்டருக்கு செலக்ட் செய்து விட்டார். அதுவும் பக்கா கிராமத்துப் பெண் கேரக்டர் .தன் படத்தில் நடிப்பவர்களை பாலா அடிப்பார் என்றெல்லாம் சொல்வார்கள் . அப்படி எந்த ஒரு சம்பவமும் நடக்கவில்லை . படப்பிடிப்பு ரொம்ப ஜாலியாக இருந்தது . ” என்றார் .
பொதுவாக படப்பிடிப்பில் காட்சியின் தன்மையை இயக்குனர் மட்டும் விளக்க, நடிகர்கள் நடித்து விடுவார்கள். அப்புறம்தான் அதற்கு ஏற்ப பின்னணி இசை அமைப்பார்கள். ஆனால் இந்தப் படத்தில் ?
“படப்பிடிப்பில் காட்சிக்கு பொருத்தமான பாடலோ அல்லது பின்னணி இசையோ ஒலிக்கும் . அதற்கு ஏற்ப நடிக்கும் நாங்கள் முகபாவம் கொடுப்போம் . அப்படிதான் எல்லோரும் நடித்தோம்” என்று சசிகுமார் கூற . “வழக்கமான முறைக்கு அப்படியே தலைகீழ் ” என்றார் வரலக்ஷ்மி .
படத்தின் கடைசியில் அதே பின்னணி இசை அப்படியே வராதுதான் . என்றாலும் இது புதுமையான நல்ல ஐடியாதனே !