ஆவிகளின் பெயரால் நடப்பதாகச் சொல்லப்படும் சம்பவங்கள் உண்மையிலேயே ஆவிகளால் நடக்கிறதா ? இல்லை அப்பாவி ஆவிகளின் பெயரால் அநியாயம் செய்யும் பாவிகளால் நடக்கிறதா?
— என்பது காலகாலமாக நடக்கும் தர்க்கம் .
அதையே சஸ்பென்சாக வைத்து உருவாகும் படம்தான், ராமனுஜம பாக்கியம் என்ற புதிய பட நிறுவனத்தின் சார்பில் பிரபு ராமனுஜன் என்பவர் கதை திரைக்கதை வசனம் எழுதி தயாரித்து இயக்கும் நந்திவரம்.
நந்திவரம் எண்ணும் கிராமத்தில் அடுத்தடுத்து கொலைகள் நடக்கின்றன. இதற்கெல்லாம் காரணம், ஜோடியாக தற்கொலை செய்து கொண்ட ஒரு வெட்டியானும் அவரது மனைவியும்தான் என்பது அந்த கிராம மக்களின் நம்பிக்கை.
கொலைகளை துப்பறிய வரும் இன்ஸ்பெகடர் இதை செய்வது உண்மையிலேயே ஆவிதானா இல்லை மர்ம கும்பலா என்று அறிய முயல அடுத்தடுத்து நடக்கும் திகில் மர்ம சஸ்பென்ஸ் விறுவிறுப்பு படம்தான் நந்திவரம்
மேற்படி இன்ஸ்பெக்டர் வேடத்தில் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ராமானுஜமே நடிக்க, அவருடன் ஜெர்ஷா, நெல்லை சிவா, கோவை செந்தில், அம்பானி சங்கர், அசோக்ராஜ் வாசுதேவன் , சிவகை கங்கா, ராஜேஸ்வரி மற்றும பலர் நடிக்க விருத்தாச்சலம் , காட்பாடி, வேலூர் திருவண்ணாமலை, ஆகிய இடங்களில் மட்டுமல்லாது, படத்தின் பெயருக்கு ஏற்ப காஞ்சிபுரம் மாவட்டம் நந்திவரம் கிராமத்திலும் படப்பிடிப்பு நடந்து முடிந்திருக்கிறது இந்தப் படம் .
படத்தில் கதாநாயகி வைக்கோல் போரில் கதறுகிறார். . பேயாக மரத்தை தூக்கி அடிக்கிறார் , சேற்றில் புரண்டு விளாசுகிறார் .சாமியாக சூலாயுத நடனம் ஆடுகிறார்.
பின்னணி இசைக் கோர்ப்பு நடைபெற்று வரும் இந்தப் படம் அடுத்த மாதம் வெளிவருகிறது .
நந்திவரம் தயாரிப்பாளருக்கு லாபவரம் என வரட்டும்