பெப்பி சினிமாஸ் சார்பாக ஃசோபியா ஜெரோம் மற்றும் பெப்பிட்டா ஜெரோம் இருவரும் தயாரிக்கும் படம் யானும் தீயவன்.
நாளைய இயக்குனர் சீசன் மூன்றில் பங்கேற்றவரும் இயக்குனர் ஹரியிடம் சிங்கம் 2 படத்தில் உதவி இயக்குனராகவும் பணியாற்றிய பிரசாந்த் இயக்கும் படம் இது.
அறிமுகம் அஸ்வின் ஹீரோவாக நடிக்க, புதுமுகம் வர்ஷா நாயகியாக நடிக்க…
டான்ஸ் மாஸ்டர் சுந்தரத்தின் மகன் , பிரபுதேவாவின் அண்ணன் , டான்ஸ் மாஸ்டர் , இயக்குனர், நடிகர் , சிம்ரனின்…….

பல படங்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றிய (வர் என்று சொல்ல வந்தேன்) ராஜு சுந்தரம் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் . இவருடன் வி டி வி கணேஷ் , பொன்வண்ணன் ஆகியோர் நடித்து உள்ளார்கள்
பிரபல தெலுங்கு திரையுலக இசையமைப்பாளரான அச்சு ராஜாமணி படத்துக்கு இசையமைக்கிறார்.
இந்தப் படத்தின் பாடல்கள் படத்திற்கு பெரிய பலமாக அமையும் என்கிறார் இயக்குனர் பிரசாந்த்.

“அந்த அளவுக்கு படத்தின் ஒவ்வொரு பாடலையும் புதிய கோணத்தில் எடுத்து இருக்கிறோம் ” என்கிறார் .
வாழ்த்துகள் !