படத்துக்குக் கீழே படம் பற்றிய செய்தி …
இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் ஃபைனல் மேட்சை டிவியில் டென்ஷனோடு ஒருவர் பார்த்துக் கொண்டிருக்க, கடைசி ஓவரில் கடைசி பந்தில் கடைசி விக்கெட் ஆடுபவர் ஒரு பந்தில் நாலு ரன் எடுத்தால்தான் வெற்றி ; விக்கெட் அவுட்டானால் தோல்வி என்ற நிலையில்… அவருடைய வாழ்க்கையில் ஏற்படும் ஒரு விபரீதம்தான் இந்தப் படத்தின் கருவாம் .
“அந்த விபரீதம் என்பது மாரடைப்பு இல்லை . வேறு ” என்று கூறும் இயக்குனர் வீரா ” இது ஒரு பேய்ப்படம் மற்றும் காமெடி படம். இதில் ஒரு காதல் , பெற்றோரைப் பிரிதல் , ரகசியக் கல்யாணம்,எல்லாம் இருக்கிறது . கூடவே ஒரு பேயும் இருக்கிறது . ஆனால் அது மிரள வைக்கும் பேய் அல்ல. ரொம்ப சைவமான பேய் . ஆன்மா மாதிரியான விசயம் ” என்கிறார் .
படத்தின் ஹீரோவாக வினய் கிருஷ்ணா என்பவர் அறிமுகமாக, தயாரிப்பாளரின் உறவினரான ஹாஷிகா தத் என்பவர் நாயகியாக நடிக்கிறார்.
இவரோடு கதாநாயகி மீது கல்யாண ஆசை வைத்து அடைய முடியாமல் போகும், தாய் மாமன் கதாபாத்திரத்தில் சென்ட்ராயன் நடிக்கிறார் .(கிளைமாக்ஸ்ல இவரு தாய் மாமன் இல்ல பேய் மாமான்னு சொல்லமாட்டீகள்லப்பு?)