
இயற்கையை மனிதன் வெல்வதாக நமக்கு தோன்றினால்..
அப்படி தன்னை மனிதன் வெல்லவும் கூட இயற்கைதான் அனுமதி தருகிறது என்பதே உண்மை.
நிலநடுக்கம், சுனாமி, சூறாவளி, புயல் , பெருமழை , நிலச்சரிவு போன்ற நிகழ்வுகள் முன்னாள் உயிர்க் குலம் கை கட்டி நிற்கும்போதுதான் ..
இந்த உண்மை எல்லோருக்கும் புரிகிறது,
இந்த உண்மையை பிரம்மாண்டமாக மனதில் தைக்கும்படி சொல்லும் பல திரைப்படங்கள் எப்போது வந்தாலும் வரவேற்பை பெறத் தவறுவது இல்லை.
அந்த வரிசையில் Warner brothers தயாரிக்க, John Swetnam திரைக்கதை அமைக்க Richard Armitage, Sara Wayne Callies, Matt Walsh ஆகியோர் நடிக்க Brian Tyler இசை மற்றும் Brian Piarson ஒளிப்பதிவில் Stevan Quale இயக்கி இருக்கும் படம் INTO THE STORM-3D .

கதை?
Silverton என்ற அழகிய சிறு நகரம் ஒரு பெரும் புயலில் சிக்கி சின்னா பின்னமாக, அந்த ஊர் மக்கள் அந்த புயலிடம் இருந்து தப்பித்து உயிர் பிழைக்க, பதறிச் சிதறிக் கதறி ஓட ,
கடைசியில் அந்த மக்களுக்கு என்ன நேர்ந்தது என்பதை கலங்கடிக்கும் காட்சி அமைப்புகள் மற்றும் விஷுவல் எஃபக்டுகளோடு படத்தில் சொல்லி இருக்கிறார்களாம்.
தமிழில் இந்தப் படத்துக்கு கேப்டன் சூறாவளி என்று பெயர் வைத்துள்ளார்கள்.
ஹலோ ஹாலிவுட் டைரக்டர்ஸ் ! எங்க ஆட்களை பார்த்து படத்துக்கு பேரு வைக்கக் கத்துக்குங்க !