பத்திரிக்கையாளர் சந்திப்பில் படம் பற்றி சொன்ன இயக்குனர் “சென்னையில் இருந்து மங்களூர் போகும் ஒரு பெண் (நிகிஷா பட்டேல் ) மங்களூரில் உள்ள ஒரு பீச் ஹவுசில் சிக்கிக் கொள்கிறார் . அடுத்த ஒரு வாரம் அவரால் வெளிவர முடியவில்லை . அங்கே நடக்கும் திரில் சம்பவங்கள்தான் கதை . இரண்டு ஜோடிகள். இனியா ஒரு கம்பெனியின் எம் டி யாக நடிக்கிறார். தவிர காமெடிக்கு எம் எஸ் பாஸ்கர் , சிங்கம் புலி மனோ பாலா (இன்னுமா உலகம் நம்மள நம்புது ?!) உள்ளிட்ட சிலர் நடிக்கிறார்கள் . படத்தில் மொத்தம் எட்டே கேரக்டர்தான் ” என்றார்.
படத்தின் இசை கன்னட பட இசைமயமைப்பாளரான சுஜித் ஷெட்டி (நீங்க சுனில் ஷெட்டி பிரதரா சார்?)
படத்தின் கேமரா மேன் ஜெய் ஆனந்த் பல வெற்றிகரமான கன்னடப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் . “சோனி 65 8 கே என்ற ஒரு கேமரா . இதுவரை இந்திய அளவில் எந்த படத்துக்கும் இதை பயன்படுத்தியது இல்லை . முதன் முதலில் இந்தப் படத்துக்கு பயன்படுத்துகிறோம் ” என்றார் .”8 கே என்றால் நிறைய லைட்டிங் தேவைப்படுமே . அதை வைத்து எப்படி திரில் திகில் படம் எடுப்பீர்கள் ?” என்று நான் கேட்க . “இல்ல சார் 4 கே ரெசல்யூஷனிலும் பண்ணிக்கலாம் ” என்றார் . சரி பொழைச்சுப் போங்க !
“(நான் சிகப்பு மனிதன் படத்தைஅடுத்து ) இந்தப் படத்திலும் நீங்க வில்லிதானா ?” என்றுகேட்டேன் இனியாவிடம்.
“நீங்க பாத்துட்டு சொல்லுங்க ” என்றார் இனியா.
“அதெப்படி ? காட்டினதானே பாக்க முடியும் ” என்றேன் .
உடனே எல்லாரும் சிரிச்சாங்களே … ஏ ஏ ஏ ஏ ன் ன் ன் ன் …..?