ஆங்கில இதழான WE மேகசின் (WOMEN EXCLUSIVE) சினிமா, சமூக சேவை , விளையாட்டு உள்ளிட்ட பல்துறைகளிலும் சாதனை புரிபவர்களை தேர்ந்தெடுத்து வருடம்தோறும் வழங்கி வரும் விருதுகளில் இந்த ஆண்டு முக்கியமான ஒரு விருதாக இருந்தது , பத்திரிகை தொடர்பாளர் – நண்பர் நிகில்முருகன் பெற்ற Camaraderie Catalyst விருது .
தான் இருக்கும் இடங்களில் எல்லாம் தோழமை உணர்வை ஏற்படுத்துக் கிரியா ஊக்கி என்று இதற்குப் பொருள் .
விருது அறிவிக்கப்பட்டபோது மேடையில் திரையிடப்பட்ட ஆடியோ விஷுவலில் பேசி இருந்த நிகில் முருகன் தின மணி நாளிதழின் மூத்த முதன்மை ஆசிரியரான சொக்கலிங்கம் குடும்பத்தில் பிறந்து டிப்ளமா ஜர்னலிசம் படித்து பல சினிமா இதழ்களில் தான் பணி புரிந்த தனது ஆரம்ப காலங்களை நினைவு கூர்ந்தார் .
தொடர்ந்து “பொதுவாக எல்லாரும் செய்ய நினைக்கறதை நான் செய்ய மாட்டேன். சினிமாவுக்கு வரும் எல்லோரும் நடிகரா ஆகணும்னு நினைப்பாங்க . நான் அதை செய்யக் கூடாதுன்னு முடிவு பண்ணினேன் . டைரக்ஷன் பண்ணலாம் . ஆனா அது ரொம்ப கிரியேட்டிவான வேலை. அதனால அதையும் நான் தொடல .
பத்திரிக்கையாளனா இருந்தபோது எல்லாரோடும் இயல்பா நான் கலந்து பழகுவதை பார்த்து பி ஆர் ஓ ஆகலாமேன்னு பலரும் சொன்னாங்க . எனக்கும் அது சரின்னு பட்டுது. உல்லாசம் படம்தான் நான் பி ஆர் ஓ வா பணியாற்றிய முதல் படம் இதுவரை சுமார் 250 படங்களுக்கு பணியாற்றி இருக்கேன் . இப்போ கையில் 150 படங்கள் இருக்கு ” என்ற போது பலத்த கைதட்டல் .
அதே போல “கமல் சார் அடிக்கடி ஒரு விஷயம் சொல்வார் ‘ ஒரு விஷயத்தை செய்ய நினைக்கும்போது அது முடியாது கஷ்டம்னு நினைக்க கூடாது. அதோட கடைசி முனை வரை போய்ப் பார்த்துடனும்’ அப்படின்னு….! . என் தாரக மந்திரமும் அதுதான் ” என்று சொன்னபோதும் பாராட்டுக் குரல்கள்
நிகிலைப் பற்றி கமல்ஹாசன்” எதிலும் நவீனமாக செயல்படும் குணம் . முழுமையாக சிறப்பாக செயல்படுவது இரண்டும் நிகில் முருகனின் சிறப்புகள். என்னையும் அவரையும் இணைத்தது கூட அவருடைய இந்த சிறப்புகல்தான் தான் ” என்று பேசி இருந்ததும் திரையிடப்பட்டு பாராட்டுதலுக்குள்ளானது
பின்னர் நடிகர் பொன்வண்ணன் அவர் மனைவி நடிகை சரண்யா , மற்றும் WE மேகசின் இதழின் ஆசிரியர் சுமதி சீனிவாஸ் ஆகியோர் நிகிலுக்கு விருதை வழங்கினார்கள் .
“மறைந்த எனது தந்தையின் நினைவு நாளான இன்று இந்த விருது பெறுவது நெகிழ்வான மகிழ்வு “என்று குறிப்பிட்ட நிகில் முருகன் , தனது தாயார் , மனைவி ஆகியோரையும் மேடைக்கு அழைத்து அவர்களோடும் சேர்ந்து விருதினை பெற்றுக் கொண்டது சிறப்பான விஷயம் .
விருது பெற வந்திருக்கும் விருந்தினர்களில் தானும் ஒருவர் என்பதற்காக ஒதுங்கி நிற்காமல் இந்த விழாவுக்கு வந்த சிறப்பு விருந்தினர்கள் அனைவரையும் வரவேற்று, அமர்வு கொடுத்து, விழா முடிந்ததும் அவர்களை அனுப்பி வைத்ததோடு…