நிமிர் @ விமர்சனம்

உதயநிதி ஸ்டாலின், நமீதா பிரமோத், பார்வதி நாயர், சமுத்திரகனி, இயக்குனர் மகேந்திரன் ஆகியோர் நடிப்பில் மலையாள இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கி இருக்கும் படம் நிமிர் . எவ்வளவு ? பேசுவோம் 
 
நெல்லை மாவட்டம் சுந்தர பாண்டியபுரத்தில் ஒரு ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் முதல் மாடியில் போட்டோ ஸ்டுடியோ வைத்திருக்கும் இளைஞன் செல்வம் (உதயநிதி ஸ்டாலின்) . 
 
அவரது தந்தை தனித்துவமான குண இயல்பும் புகைப்படம் எடுக்கும் திறமையும் நிறைந்த புகைப்படக் கலைஞர் (இயக்குனர் மகேந்திரன் ) 
 
 பக்கத்திலேயே போட்டோ பிரேம் கடைவைத்துள்ளார் தந்தையின் நண்பர் (எம் எஸ் பாஸ்கர்) . அவர் கடைக்கு  வேலைக்கு வரும் நபரும் (கருணாகரன்) செல்வமும் நண்பர்கள் . 
சிறு வயது முதல் செல்வம் காதலிக்கும் வள்ளியை ( பார்வதி நாயர்) திருமணம் செய்து தர , அவளது பெற்றோருக்கு விருப்பம் இல்லை . 
 
இந்நிலையில் மலேசியாக்காரர் (இமான் அண்ணாச்சி) ஒருவரின்  தென்னந்தோப்பு ஒன்றை பராமரிக்கும் உரிமை அவரது  எடுபிடிக்கா ? இல்லை மச்சினருக்கா ? என்ற சண்டை ,
ஒரு பஞ்சாயத்து போர்டு மெம்பரிடம்  (அருள்தாஸ்) வந்து , டென்ஷன் ஆகி அது அடுத்தடுத்து அந்த டென்ஷனான நபர்கள் சந்திக்கும் வெவ்வேறு நபர்களை பாதித்து , 
 
ஒரு நிலையில் நாடு வீதியில் செல்வத்தை ஒரு முரடன் ( சமுத்திரக் கனி) அடித்துத் துவைக்கும் நிலைக்கு போகிறது . அவமானமாய்  உணரும் செல்வம் அந்த ரவுடியை அடித்துத் துவைக்கும் வரை செருப்பு அணிய மாட்டேன் என்று சபதம் செய்கிறான் . 
 
அடித்த முரடன் துபாய்க்கு வேலைக்குப் போய் விடுகிறான் . 
 
வள்ளி தன் அப்பா அம்மா ஆசைப்படி வேறொருவனை திருமணம் செய்து கொண்டு செல்வத்தை கை கழுவுகிறாள் . 
 
அவன் திரும்பி வந்தால் அடிக்க செல்வம் கராத்தே கற்கிறான் . 
 
மலர்விழி என்ற பெண்ணோடு காதல் வருகிறது . அவள், தான அடிக்கக் காத்திருக்கும் முரடனின் தங்கை என்பதும் தெரிய வருகிறது .முரடனும் துபாயில் இருந்து வருகிறான் . 
 
‘என் அண்ணனை அடிக்கும் நினைப்பை எல்லாம் விட்டு விடு . மீண்டும் அடி வாங்குவ . அது நம் காதலையும் பாதிக்கும் . என்னை கல்யாணம் பண்ணிட்டு அப்புறம் செல்லமா உன் மச்சானை கன்னத்தில் வேண்ணா  ஒரு தடவை தட்டிக்கோ ” என்கிறாள் . 
 
செல்வம் என்ன செய்தான் ? செல்வத்துக்கு என்ன ஆனது ? என்பதே நிமிர் . இரண்டு வருடம் முன்பு மலையாளத்தில் வெளிவந்த மகேஷிண்டே பிரதிகாரம் படத்தின் ரீமேக் . 
 
படம் துவங்கிய உடனேயே மனத்தைக் கவர்கிறது ஏகாம்பரத்தின் ஒளிப்பதிவு கடைசி வரை தொடர்கிறது அந்த மனம் கவர்தல் . 
 
செல்வம் கேரக்டரில் அருமையாக பொருந்தி இருக்கிறார் உதயநிதி . 
 
இயக்குனர் மகேந்திரனுக்காக பாத்திரத் தேர்வும் , அவரது நடிப்பும் அபாரம் . 
 
பார்வதி நாயர் எரிச்சல். அந்தக்கால எம் ஜி ஆர் படங்களில்  வில்லி , கதாநாயகி போல மாஸ்க் போட்டுக் கொண்டு வருவார் . ஒரு நிலையில் அதை கண்டு பிடிக்கும் எம் ஜி ஆர் அவளை இறுக்கிப் பிடித்து காது பக்கத்தில் சொறிந்து கொடுத்து  சதையை பிய்த்து இழுப்பார் .
 
வில்லியின் நிஜ முகம் தெரியும் . எம் ஜி ஆர் வில்லியிடம் இருந்து கழட்டிப் போட்ட — கதாநாயகியின் முக வடிவம் கொண்ட ரப்பர் மாஸ்க் தரையில் கிடக்கும் . அந்த ரப்பர் மாஸ்க் போலவே இருக்கு பார்வதியின் முகம் . எண்டே குருவாயூரப்பா !
 
நமீதா பிரமோத் கூட ஜஸ்ட் ஒகேதான்.  பெரிதாக ஒன்றும் ஈர்க்கவில்லை . அவருக்கு இதுதான் முதல் படமோ ? ஆக்ஷன் என்று குரல் கேட்ட உடன் மின்சாரம் பாய்ந்தவர் போல ஆகிவிடுவார் போல . ஷாட்டில் தெரியுது 
தர்புக  சிவா , அஜ்னேஷ் லோகநாத் இசையில் பாடலும்  பின்னணி இசையும் ஒகேதான் . 
 
செல்வத்துக்கு அவமானம் வந்த நிலையில் அவனது காதலும் கானல் ஆகும் இடத்தில் கொடுக்கும் லேசான உணர்வுக் கூட்டலில் மட்டும் தெரிகிறார் இயக்குனர் பிரியதர்ஷன்  . 
 
“காதலிச்சவனை எல்லாம் கல்யாணம் பண்ணிக்க அவசியம் இல்லை . அம்மாவை ஒரு தடவை கட்டிப் பிடிச்சு அழுதுடு . எல்லாம் சரியாக போயிடும் ” என்று வள்ளியின் அம்மா சொல்லும் இடம் அப்படியே மலையாள ஸ்டைல் . 
 
தவிர படத்தையும் மலையாளப் படம் போலவே எடுத்து இருக்கிறார் பிரிய தர்ஷன் . அப்புறம் எதுக்கு தமிழில் எடுக்கணும் .?
 
அதே நேரம் ஒரிஜினல் மலையாளப் படத்தில் இருக்கும் நல்ல விசயங்களை கவனமாக உருவி வெளியே போட்டு இருக்கிறார் இயக்குனர் . (உதாரணமாக ஒரிஜினலில் முதல் காட்சியிலேயே செருப்புக்கு கொடுக்கப் படும் முக்கியத்துவம்)  யார் மேல் கோவமோ ?
 
ஒரு காட்சியில் செல்வத்தின் தந்தை காணாமல்போய்விட போலீசுக்குப் போகும் நண்பர்  நம்ம போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் “எதுக்கும் கேரளா போலீசிடமும் சொல்லி தேட சொல்லுங்க சார் ” என்பார் .
மேலோட்டமாக பார்த்தால் கேரளா எல்லைக்குள்ளும் காணமல் போயிருப்பவர் போயிருக்கலாம் . அதனால் சொல்றார் என்பது போல ஒரு மேல் பூச்சு சமாதனம் இருந்தாலும் , தமிழ்நாடு போலீஸ் வேஸ்ட் . கேரளா போலீஸ் பெஸ்ட் என்ற தொனி மேலோங்கி நிற்கிறது . 
 
மலையாள படைப்பாளிகளுக்கே உரிய — தமிழர்களை மட்டம் தட்டுகிற — இன்டல்லக்சுவல் அர்ரகன்ஸ் !
 
தவிர வேங்கடாஜலதி புகைப்படத்தை சுற்றி ஓடும் சீரியல் செட் பல்புகளை பார்க்கும் போது பின்னணியில் சொர்க்கம் மதுவிலே பாட்டு ஒலிக்க, செல்வத்தின் அப்பாவுக்கும்  நண்பருக்கும் கேபரா டான்ஸ் பார்க்கப் போக ஆசை வருகிறது . அதுவும் ஒன்றுக்கு இரண்டு முறை !
 
(ஆண்டாள் விசயத்தில் தாண்டிக் குதித்த எச்-சைகளுக்கும் பிச்சைப் பொறுக்கிகளும் இதற்கு எல்லாம் வாயைத் திறக்க மாட்டான்கள். உண்மையிலயே இவனுங்கதான் நிஜமான் நாத்திகன்கள் !)
 
படம் துவங்கிய சில நிமிடங்களில் ஆரம்பித்து செல்வத்தை ரவுடி அடிப்பதற்கான  இரண்டு காட்சிகள் முன்பு வரை படம் ரொம்பவே செயற்கை . அப்புறம் சுமாரான செயற்கை . படத்தின் முக்கிய விஷயமான செல்வம் – முரடன் கிளைமாக்ஸ் மோதலை அந்த பதட்டம் பரபரப்பை மிஸ் பண்ணி சும்மா ஹா ஃப் வே ஓப்பனிங்கில் அடித்துக் கொண்டு இருப்பது போல  காட்டுவது எல்லாம் செமை போங்கு . 
 
மக்களைக் கவர வேண்டும் என்ற நோக்கத்தில் எடுக்கப்பட்ட படம் போலவே தெரியல . 
 
எந்த பில்டப்பும் பாசாங்கும் பந்தாவும் இல்லாமல்  எளிமையான கதாபாத்திரங்களுக்கு தன்னை கொடுக்கும் உதயநிதியின் மனப்பாங்கு அருமையானது  பாராட்டுக்குரியது . ஆனால் அதை இப்படி வீணாக்காத வண்ணம் நல்ல கதை திரைக்கதைகளுக்கு அவர்தர வேண்டும்  
 
நிமிர்… இடுப்பு வலி 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *