
ஆனாலும் தனக்கு இப்படி ஒரு இக்கட்டு வரும் என்று நயன்தாரா நினைத்துப் பார்த்திருக்கவே மாட்டார் .
திருவண்ணாமலையில் உள்ள தனது ஆசிரமத்துக்கு வரும்படி நயன்தாராவுக்கு தனது ஆசிரமம் சார்பில் மோக நிஷ்டை (எழுத்துப் பிழை அல்ல!) புகழ் நித்யானந்தா அழைப்பு விடுத்திருக்கிறார் என்ற அதகள செய்திதான் அந்த இக்கட்டு. (அண்ணனுக்கு புதுப்புது சிஷ்யைகள் வேணும் போல !)
“எங்கள் ஆசிரமத்துக்கு வந்தால் யோகா செய்யலாம் . தியானம் செய்யலாம். நல்ல உடல் பயிற்சிகள் செய்யலாம் . ஆன்மிகம் பேசலாம் ” என்று பலவித மார்க்கெட்டிங் உத்திகளை போட்டு அந்த அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது. (என்னது .. வீடியோ எடுக்கலாமா? அதெல்லாம் சொல்லப்படாது )
நயன்தாரா இந்த அழைப்பை கவனிக்கக் கூட மாட்டார் எவ்ன்பது வேறு விஷயம் .
ஒருவேளை சும்மா ஒரு வெளம்பரமா இருக்கட்டும்னு நயன்தாரா கிளம்பி வந்தா என்ன ஆகும் ?
அதுக்கு மேல கற்பனை செய்வது அவங்க அவங்க ஆழத்தை பொறுத்தது. நாம சும்மா கால் நனைச்சுட்டு கரையேறுவோம் கண்ணுகளா !