மேட்டர் படத்தை எடுத்தால் ஈசியா ஜெயிக்கலாம். ஆனா…

காலம் எல்லாவற்றையும் மாற்றி விடுகிறது. 
 
தியேட்டர்களுக்கு அப்பாற்பட்டு  சினிமாவை நேரடியாக மக்களிடம் கொண்டு போவது குற்றமாகப் பார்க்கப்பட்ட காலம் ஒன்று உண்டு . 
 
ஆனால் இன்று கொரோனா பொது முடக்கத்தால்  தியேட்டர்கள் இயங்க முடியாத நிலையில் , படத்தை எப்படியாவது மக்களிடம் கொண்டு போவது நியாயம் என்றானது 
 
ஓடிடி தளங்கள், அடுத்து டிஷ் ஆண்டனா நிறுவனங்கள்  இப்படி புதிய படங்களை வெளியிட என்றே ஒரு சேனலை ஒதுக்குவது என்று ஆன நிலையில் இப்போது எல்லோரும் பார்க்கும் அரசு கேபிள் நிறுவனத்திலும் அப்படி , புதுப்படங்களை வெளியிட ஒரு சேனல் ஒதுக்கப்பட்டு அதில் படங்கள் வரும் நிலை உருவாக்கி இருக்கிறது .
 
அந்த  வகையில்தான் வெளிவருகிறது  நுங்கம்பாக்கம் . 
 
நுங்கம்பாக்கம் ?
 
திதிர்  பிலிம் ஹவுஸ், ஐகான் ஸ்டுடியோஸ், ட்ரீம்வேர்ல்ட் சினிமாஸ் வழங்க அஜ்மல் நடித்துள்ள   படம் ” நுங்கம்பாக்கம் “
 
தமிழகத்தை உலுக்கிய – நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வெட்டிக் கொல்லப்பட்ட சுவாதி கொலை வழக்கு சம்பந்தப்பட்ட இந்தப்படத்தை எழுதி இயக்கி இருக்கிறார் ரமேஷ் செல்வன்.
 
இப்படத்தின் போஸ்டர் வெளியீட்டில் இருந்து டீசர் மற்றும்  டிரைலர் வெளியீட்டு வரை கடும் பிரச்சனைகளைச் சந்தித்தது. ரிலீஸ் தேதியை பலமுறை அறிவித்தும் வெளிவர முடியாத சூழலில் இருந்த இப்படம் வரும் 24-ஆம் தேதி  வெளியாகிறது. அதை முன்னிட்டு இன்று படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. 
 
விழாவில் கலந்துகொண்டு,தயாரிப்பாளர் ரவிதேவன் பேசும்போது, “முதலில் இந்தப் படத்தை ஏன் ஆதரிக்கணும் என்ற கேள்வி எல்லாருக்குள்ளும் இருக்கும். ஆனால் நாம்  இந்தப் படத்திற்கு நல்லாதரவு தரணும். நீங்கள் வீட்டில் இருந்தே பார்க்கும் படியாக வசதி ஏற்படுத்தி இருக்கிறோம். இந்தப்படத்தில் உங்களின் எல்லாக் கேள்விகளுக்கும் பதில் இருக்கும். இந்தப்படத்தைப் பெரிதாக வெற்றிபெற வைக்க வேண்டும்” என்றார்.
 
நடிகர் ஆர்.என் ஆர் மனோகர் , “சமுதாயத்தின் முகமூடியை கிழிக்கும் பட விழாவிற்கு நாம் அனைவரும்  முகமூடி அணிந்து வந்துள்ளோம். பல தடைகளைக் கடந்து வந்துள்ள  இப்படைப்பு ஒரு மாபெரும் படைப்பாக இருக்கும்” என்றார்.
 
நடிகர் அஜ்மல் தனது பேச்சில், “பல தடைகளைத் தாண்டி கொண்டு வந்துள்ளோம். இவ்வளவு கஷ்டப்பட்டு கொண்டு வந்ததிற்கு காரணம் இருக்கிறது. இந்தப்படம் மூலமாக பல விசயங்கள் வெளிவரும். பல உண்மைகள் தெரியும். இப்படத்தை நீங்கள் ஆதரிக்க வேண்டும்” என்றார்
 
பாடலாசிரியர் சினேகன், “ஏழுமாதம் கழித்து உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி. இந்தப் படத்தின் பிரச்சனைகள் எப்ப முடியும். இந்தப் படம் எப்போது வரும் என்று கேட்டுக்கொண்டே இருந்தேன். ஒரு உண்மைச் சம்பவத்தைச் சொல்ல இங்கு இவ்வளவு போராட்டங்களைச் சந்திக்க வேண்டியுள்ளது. இந்தப் படம் வராவிட்டால் அந்த கொலை வழக்கே நமக்கு மறந்து போய்விடும். எதற்காக இந்த இயக்குநர் மீது ஏழு கேஸ் போட்டார்கள் என்றே தெரியவில்லை. இந்தப் படம் பற்றிய செய்தி வெளிவந்தாலே பலருக்குப் பயம் வந்துவிடும்.
 
தான் எடுத்த காரியத்தை கடைசி வரை முடித்த இயக்குநரைப்.பாராட்ட வேண்டும்.  நீதிமன்றத்தில் கொஞ்சம் ஈரம் இருந்ததால்தான் இந்தப் படம் வெளிவர இருக்கிறது. இவ்வளவு போராட்டத்தை சந்தித்த இயக்குனருக்கு இந்த சினிமாக்காரர்கள் யாரும்  ஆதரவாகக் குரல்கொடுக்க முன் வராதது மிகவும் தவறான விஷயம்,  எதையெதையோ பார்த்தோமே..49 ரூபாய் கொடுத்து இந்தப் படத்தைப்  பார்ப்போம். போராடுபவன் இறைவனின் பிள்ளை. போராட்டம் தோற்பதே இல்லை. இந்தப் படம் பெரு வெற்றியடைய வாழ்த்துகள்” என்றார்
 
இயக்குநர் ரமேஷ் செல்வன் பேசும்போது,” என்னை இந்த மேடையில் நிற்க வைத்த ஜெயச்சந்திரன் ஜே அவர்களுக்கு நன்றி.  கிருஷ்ணகிரி கோவிந்தராஜ் அவர்களுக்கும் நன்றி. அடுத்ததாக ரமேஷ் குமார் அவர்களுக்கும் நன்றி . நகரி பரத்குமார் அவர்களுக்கும் நன்றி.
 
இரண்டரை வருட போராட்டம். கஜினி முகமதுவை  விட அதிகப் போராட்டத்தைச் சந்தித்தேன். நான் 80% உண்மையாக இருப்பவன். சினிமாவில் சில விசயங்களைச் செய்யவே முடியாது.
 
ஒரு மேட்டர் படத்தை எடுத்தால் ஈசியா ஜெயிச்சிருக்கலாம். ஒரு மெசேஜ் படத்தை எடுத்ததால் தான் இவ்வளவு கஷ்டம். இந்தப்படத்தின் டீசர் வெளிவந்த பின் பெரிய ரீச் ஆனது. அப்பவே வியாபாரத்திற்கு வழி கிடைத்தது. ஆனால் இந்தப் படத்தை வெளியிடக்கூடாது என பெண்ணின் தந்தை கேஸ் போட்டுவிட்டார்.
 
அந்தப் பெண் செத்து மூன்று மணி நேரம் யாருமே அருகில் செல்லவில்லை. படத்தின் கதையை ரைட்டர் சூளைமேட்டில் ஒவ்வொரு தெருத்தெருவாகப் போய் எழுதினார்.   படத்தில் சைபர் க்ரைம், போலீஸ் டிப்பார்ட்மெண்ட் முதற்கொண்டு பல விசயங்கள் இருக்கு.
 
என்னை  கைது செய்யணும் என்று போலீஸ், சென்சார் அதிகாரி பக்கிரிசாமியிடம் போய்க் கேட்டார்கள். நான் பெங்களூரில் போய் ஒளிந்து கொண்டு பின் பெயில் வாங்கியதும் வந்தேன். நான் ஏழு படம் செய்தவன். ஆனால் என்னைப் போலீஸ் 10 கொலைகளைச் செய்தவன் போல நடத்தினார்கள்.
 
என் ஆபிஸ் பாய்ல இருந்து 24 பேரிடம் விசாரித்தார்கள். போலீஸ் என்னை படத்தில் அதைத் தூக்கு இதைத் தூக்கு என்று நச்சரித்தார்கள். கமிஷனர் முதல் பலரையும் சந்தித்து கதை சொல்லி அவர்களிடம் 6 மாதம் கழித்து தான் அனுமதி  கிடைத்தது.
 
ராம்குமார் குடும்பம் சார்பாகவும், சுவாதி குடும்பம் சார்பாகப் படத்தைப் பார்த்து என்னைப் பாராட்டினார்கள்  
 
அதன்பின் சென்சார் போனேன். அங்கு பெயர் டைட்டில் ஆகியவற்றை மாற்றச் சொன்னார்கள். பின் க்ளைமாக்ஸை மாற்றச் சொன்னார்கள். நான் சம்மதிக்கவில்லை. பின் ஆறுமாத போராட்டம்.
 
அது முடிந்ததும் பிராமணர்கள்  கேஸ் போட்டார்கள்.  அதன்பின் ஒரு வழக்கு வந்தது. அதையும் சமாளித்து  படத்தை வெளியிட நினைத்தால் கொரோனா வந்துவிட்டது. 
 
தற்போது Cineflix என்ற ஓடிடியில் படம் வரும் 24-ஆம் தேதி வெளிவருகிறது. இந்தப்படத்தை அனைத்து கேபிள் இணைப்புகளில்   77-ஆம் நம்பரை ரிமோட்டில் அழுத்திப் பார்க்கலாம். தயவுசெய்து 49 ரூபாய் கட்டிப் பார்க்கும்படி அன்போடு கேட்டுக் கொள்கிறேன். தமிழ் ராக்கர்ஸ்… இப்படத்தை பைரஸி எடுக்காதீர்கள். அப்படி எடுத்தால் நான் சூசைட் தான் பண்ணணும். ” என்றார்.

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *