அருமை சந்திரன் தயாரிப்பில் ஸ்ரீகாந்த், நீலம் ஆகியோர் நடிக்க , சூர்ய பிரபாகர் இயக்கி இருக்கும் படம் ஓம் சாந்தி ஓம்.
படம் மந்திரமா இல்லை எந்திரமா ? பார்க்கலாம் .
திருச்சியில் இருந்து தஞ்சாவூருக்கு ஓர் மழை நாளில் நள்ளிரவில் – ஒரு சில பயணிகள் மட்டுமே பயணிக்கும் ஒரு — பேருந்தில் பயணிக்கிறார் ஸ்ரீகாந்த் . பஸ் பெரும் விபத்துக்குள்ளாகிறது . அவர் உயிர் பிழைக்கிறார் . ஆறு மாதங்களுக்கு பிறகு இயல்பு நிலைக்கு திரும்புகிறார் . ஒரு பெண்ணை (நீலம்) காதலிக்கவும் செய்கிறார் .
ஒரு நாள், ஐந்து பேர் அடங்கிய குழு ஒன்று ஸ்ரீகாந்தை பின் தொடர்கிறது .
அதில் உள்ள பெரியவர் ஒருவர் (ஜுனியர் பாலையா) தன் பேத்தியின் திருமணத்துக்கு என்று சேமித்து வைத்திருந்த பத்துலட்ச ரூபாய் பணத்தை, தனது தம்பியின் மகனான ஒரு ரவுடி (மொட்டை ராஜேந்திரன்) வாங்கிக் கொண்டு தராமல் ஏமாற்றுவதைக் கூறி, அதை வாங்கித் தரச் சொல்கிறார் . ஸ்ரீகாந்த் ஒரு வழியாக வாங்கித் தருகிறார் .
ஐவர் குழுவில் உள்ள ஒரு பெண்மணி தனது மகனின் மரணத்துக்கு காரணமான– காலாவதி மருந்துகளை விற்கும்ஒரு — மருந்து கடை ஓனரை பழிவாங்க உதவி கேட்கிறார் . அவருக்கும் ஸ்ரீகாந்த் உதவுகிறார் .
அவர் உதவிய இருவர் மட்டுமல்லாது மிச்சம் உள்ள மூவரும் கூட இறந்து போன ஆவிகள் என்பதும் தங்கள் கடைசி ஆசையை தீர்த்து வைக்க ஸ்ரீகாந்தின் உதவியை நாடுகிறார்கள் என்பதும் அப்போதுதான் ஸ்ரீகாந்துக்கு தெரிய வருகிறது .
எதனால் ஸ்ரீகாந்தை தேர்ந்தெடுத்தார்கள் என்பதற்கான விடை , பஸ் விபத்தில் இருக்கிறது .
இதற்கிடையே ஸ்ரீகாந்த் ஆவிகளுக்கு உதவுவதைப் புரிந்து கொள்ளாத காதலி, ஸ்ரீகாந்தை பைத்தியம் என்று என்று எண்ண . அது காதலின் பிரிவுக்கு வழி வகுக்கிறது . உண்மையை காதலியிடம் சொன்னால் மற்ற மூவருக்கும் உதவ முடியாது என்று நிலைமை . காதலை பற்றிக் கவலைப் படாமல் அவர்களுக்கு உதவ முடிவு செய்கிறார் ஸ்ரீகாந்த்.
குழந்தை ஆவியின் ஐஸ்கிரீம் ஆசை, தோழியின் காதலை நிறைவேற்ற உதவி கேட்கும் கல்லூரிப் பெண் ஆவியின் ஆசை, ஐம்பது லட்ச ரூபாய் பணம் வாங்கிக் கொண்டு ஏமாற்றும் நபரிடம் இருந்து மகளுக்கு மெடிக்கல் காலேஜ் சீட் வாங்க விரும்பும் ஓர் பிராமண ஆவியின் ஆசை… இவற்றை ஸ்ரீகாந்த் நிறைவேற்றி முடிப்பதற்குள் …
அவருக்கும் அவரது காதலிக்குமான பிரிவு வலுவாகி விட …
அப்புறம் என்ன ஆனது என்பதே ஓம் சாந்தி ஓம் .
எஸ் அதே தான் ! சூர்யா நடித்த மாஸ் படத்தின் அதே கதை .
படமாக்கல் எளிமையாக இருந்தாலும் மாஸ் படத்தை விடவும் சில காட்சிகள் நன்றாக இருக்கின்றன.
சிறுவன் ஆவியின் ஐஸ்கிரீம் ஆசை காட்சிகள் நெகிழ்ச்சி .
காலாவதி மருந்து என்ற சமூக அக்கறை விசயமும் இருப்பது சிறப்பு.
விபத்துக் காட்சியை சிறப்பாக படமாக்கி இருக்கிறார்கள் .
இன்னும் கொஞ்சம் சிரத்தை இருந்திருந்தால் சிறப்பு இன்னும் கூடி இருக்கும்