ZEE5 தளத்தின் ‘ஒரு கோடை Murder Mystery’ திரில்லர் வெப் சீரிஸ்!

ஒவ்வொரு மாதமும் தமிழ் பார்வையாளர்களுக்கென்றே பிரத்தியேகமான விருந்தளித்து வரும், இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5 தளத்தின் அடுத்த வெளியீடாக, “ஒரு கோடை Murder Mystery”  திரில்லர் வெப் சீரிஸ்  ஏப்ரல் 21 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.
Sol Production Pvt.Ltd சார்பில் ஃபசிலா அல்லானா, கம்னா மெனேசஸ் தயாரித்துள்ள இந்த வெப்சீரிஸை,  விஷால் வெங்கட் இயக்கியுள்ளார். திரைக்கதை வசனத்தை N பத்மகுமார் மற்றும் ரோஹித் நந்தகுமார் எழுதியுள்ளனர்.நடிகை அபிராமி, ஆகாஷ், ஐஸ்வர்யா, ராகவ், ஜான், நம்ரிதா, அபிதா, பிராங்கின், சில்வன் ஆகியோர் முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளனர். இதனையொட்டி படக்குழுவினர் இன்று பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்தனர்.

இந்நிகழ்வினில்..ZEE5 நிறுவன அதிகாரி சிஜு பிரபாகரன் பேசியபோது, “ஒரு கோடை Murder Mystery” எங்கள் பயணத்தில் ஒரு புதுமையான வெப் சீரிஸ். செங்களம் தொடர் மிகப்பெரிய வெற்றி பெற்றதற்குப் பிறகு இந்த சிரீஸ் முழுக்கவே புதுமையானதாக இருக்கும். முதல் முறை இன்றைய தலைமுறையின் டீன் டிராமா, நவீன தலைமுறை ரசிக்கும் திரில்லராக இது உருவாகியுள்ளது. இதன் வரவேற்பைப் பார்க்க நாங்களும் ஆர்வமாக உள்ளோம். முந்தைய வெப் சீரிஸ் போல் இதற்கும் உங்கள் ஆதரவைத் தருவீர்கள் என நம்புகிறோம்.”என்றார். 

ZEE5 நிறுவனம் சார்பில் கௌசிக் நரசிம்மன்  பேசியபோது, “சம்மரில் சூடான மர்டர் மிஸ்டரி கூலான பிரதேசத்திலிருந்து தர விரும்பினோம். அபிராமி மேடம் ஐஸ்வர்யா மேடம் நிறைய புதுமுகங்கள் நடிப்பில், இந்த வெப் சீரிஸ் தொழில்நுட்ப ரீதியாக மிக அட்டகாசமாக உருவாக்கப்பட்டுள்ளது. செங்களம் சீரிஸுக்கு நல்ல ஆதரவைத் தந்தீர்கள். ஒவ்வொரு முறையும் புதுமையான அனுபவத்தைத் தரவே உழைத்து வருகிறோம். இந்த சீரிஸ் உங்களுக்குப் பிடிக்கும் என நம்புகிறோம்.”என்றார். 

Sol Production Pvt.Ltd சார்பில் தயாரிப்பாளர் ஃபசிலா அல்லானா பேசியபோது, “கௌசிக் நரசிம்மன் மற்றும் சிஜு பிரபாகரன் சொன்னது போல் இது கொஞ்சம் புதுமையான திரில்லர். ரசிகர்களுக்குக் கண்டிப்பாகப் பிடிக்கும் என்று நம்புகிறோம். இயக்குநர் விஷால் வெங்கட் மற்றும் படக்குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள். அளவற்ற ஆதரவு தந்த ZEE5 நிறுவனத்திற்கு நன்றிகள்.”என்றார். 

ஒளிப்பதிவாளர் ராஜ்குமார் பேசியபோது,”எனக்கு வாய்ப்பளித்த விஷால் வெங்கட், தயாரிப்பாளர் ஃபசிலாவுக்கு நன்றிகள், என் படக்குழுவிற்கு வாழ்த்துக்கள். சீரிஸை பார்த்து ஆதரவு தாருங்கள் “என்றார். 
 
இசையமைப்பாளர் சுதர்சன் N குமார் பேசியபோது, “இந்த சீரிஸில் பின்னணி இசையமைத்துள்ளேன். மிகப் புதுமையான அனுபவமாக இருந்தது. நான் பர்மா படத்திற்கு இசையமைத்துள்ளேன். சில காலம் தொலைக்காட்சி பக்கம் வேலை பார்த்தேன். இப்போது இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. ZEE5 கௌசிக் மிகப்பெரிய ஆதரவு தந்தார்.  இயக்குநர் மற்றும் ZEE5 நிறுவனத்திற்கு நன்றி.  எல்லோருக்கும் நன்றி.”என்றார். 

நடிகர் ஆகாஷ் பேசியபோது, ”ZEE5 மற்றும் மீடியாவுக்கு என் முதல் நன்றி. இந்த சீரிஸை எல்லோருக்கும் பிடிக்கிற மாதிரி எடுத்துள்ளோம். நிறைய உழைத்துள்ளோம், உங்கள் அனைவருக்கும் பிடிக்குமென நம்புகிறோம். உங்கள் ஆதரவை தாருங்கள். என் படக்குழுவிற்கு இந்நேரத்தில் நன்றிக் கூறிக்கொள்கிறேன். எல்லோருக்கும் நன்றி.”என்றார். 

நடிகை அபிதா பேசியபோது, “கமலிக்கு பிறகு எனது அடுத்த பங்களிப்பு. எல்லோரும் கடுமையாக உழைத்து இந்த சீரிஸை உருவாக்கியுள்ளோம். பார்த்து உங்கள் ஆதரவை தாருங்கள் “என்றார். 

நடிகை நம்ரதா பேசியபோது, “சம்மர் டைமில் எங்கள் சீரிஸ் ரிலீஸ் ஆகிறது. எல்லோருக்கும் புது அனுபவமாக இருக்கும்.  நான் தாரா எனும் கதாபாத்திரத்தில் நடித்தருக்கிறேன். உங்கள் அனைவருக்கும் இந்த சீரிஸ் பிடிக்குமென நம்புகிறோம் “என்றார். 

நடிகர் ராகவ் பேசியபோது, “இந்த சீரிஸ் பாம்பே நிறுவனத்தின் தயாரிப்பு,  எழுத்தாளரும் மும்பையை சேர்ந்தவர். ஆன்லைனில் ஆடிசன் கேட்டிருந்தபோது,  நான் இதில் வாய்ப்புக் கேட்டேன். அவர்கள் சார்மிங்காகவும் இருக்கனும் வயலண்டாகவும் இருக்கனும் அப்படி ஒரு ஆள் தேவை என்றார்கள்.

இதே காரணத்திற்காக தான் பாலசந்தர் சார் என்னை நடிக்க வைத்தார். என்னைப்பற்றி அவர்களுக்கு தெரியாது என்பதால், நான் ஒரு காட்சி நடித்து அனுப்பினேன். அவர்களுக்கு பிடித்து என்னை நடிக்க வைத்தார்கள். கௌஷிக் உடன் முன்பாகவே இணைந்து ஒரு சீரிஸ் வேலை பார்த்தோம் அது வெளியாகவில்லை, ஆனால் இந்த சீரிஸில் பங்கு கொண்டது மகிழ்ச்சி. படக்குழுவினர் அனைவருமே மிகச்சிறந்த திறமைசாலிகள் இந்த சீரிஸ் சிறப்பாக வர வேண்டும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் “என்றார். 

நடிகை லிசி ஆண்டனி  பேசியபோது, “ZEE5 உடன் எனது ஆறாவது சீரிஸ் இது. என் முதல் படத்திலிருந்து எனக்குப் பெரிய ஆதரவு தந்து வருகிறீர்கள் அதற்கு நன்றி. இந்த சீரிஸில் நடிகை அபிராமி, மிகச்சிறந்த நண்பராகக் கிடைத்துள்ளார். இந்த சீரிஸ் மிக நன்றாக வந்துள்ளது. உங்கள் ஆதரவைத் தாருங்கள் “என்றார். 

இயக்குநர் விஷால் வெங்கட்  பேசியபோது, “சில நேரங்களில் சில மனிதர்கள் படத்திற்கு நீங்கள் மிகப்பெரிய ஆதரவைத் தந்தீர்கள் அதற்கு மிகப்பெரிய நன்றி. இந்த வெப் சீரிஸ் இயக்கச் சொல்லி ஜீ5 யிலிருந்து கால் வந்தது. Sol Production Pvt.Ltd  உடன் முன்னதாகவே அஸிஸ்டெண்டாக வேலை பார்த்துள்ளேன். இந்த சீரிஸ் மிகச்சிறந்த அனுபவமாக இருந்தது. மிகக் குறைந்த காலகட்டத்தில், இந்த வெப் சீரிஸை எடுத்தோம். அதற்கு ஒளிப்பதிவாளர், எடிட்டர், குழுவினர் அனைவரும் மிகப்பெரும் தூணாக இருந்தார்கள்.

அபிராமி மேடம், லிசி மேடமுடன் வேலை பார்த்ததில் நான் நிறையக் கற்றுக்கொண்டேன். இந்த சீரிஸில் நடித்த டீன் பசங்க அனைவருமே பிரமிக்க வைத்தார்கள். திரைக்கதை வசனத்தை எழுதிய N பத்மகுமார்  மற்றும் ரோஹித் நந்தகுமாருக்கு நன்றி. கதை எழுதிய அனிதா மேடத்துக்கு நன்றி. முக்கியமாக இந்த வாய்ப்பை அளித்த ZEE5 க்கு நன்றி. ஒவ்வொரு வேலையுமே கற்றுக் கொள்ளும் நல்ல அனுபவமே. இந்த சீரிஸ் நன்றாக வந்துள்ளது. உங்கள் ஆதரவைத் தருவீர்கள் என்று நம்புகிறேன் “என்றார் 

நடிகை அபிராமி  பேசியபோது, “இந்த மாதிரி பிரஸ் மீட் எனக்கு புது அனுபவம். முதலில் எனக்கு வாய்ப்பளித்த ZEE5 க்கு நன்றி. இது எனது முதல் வெப் சீரிஸ். இந்த வெப் சீரிஸ்க்கு அணுகும்போதே முழு திரைக்கதையும் தந்தார்கள். எனக்கு மர்டர் மிஸ்டரி ரொம்ப பிடிக்கும். இதன் திரைக்கதை மிகவும் பிடித்தது. இதில் வேலை பார்த்த அனைத்து கலைஞர்களும் மிகச் சிறந்த திறமைசாலிகள், அவர்களின் திறமையால் அழகாக இதனை உருவாக்கியுள்ளார்கள்.

பொதுவாக ஓர்இடைவேளைக்குப் பிறகு மீண்டும் நடிக்கும் போது, டைட்டில் கேரக்டர் நடிப்பார்கள். ஆனால் நான் இந்த வெப் சீரிஸ் நடிக்க காரணம் இதன் திரைக்கதை தான், அவ்வளவு அற்புதமாக இருந்தது. டீன் பசங்களின் உலகை அவ்வளவு தத்ரூபமாக எழுதியிருந்தார்கள் அதே போல் என் கதாபாத்திரம் அம்மா பாத்திரம் அத்தனை அழகாக வந்துள்ளது. உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி.

‘ஒரு கோடை Murder Mystery’ வெப் சீரிஸை ZEE5 தளத்தில் 2023 ஏப்ரல் 21 முதல் காணக் கிடைக்கும் 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *