பா.விஜய் இயக்கும் ஸ்ட்ராபரி

_DSC0866
பாடல் ஆசிரியராக அறிமுகம் ஆகி  ஞாபகங்கள் , இளைஞன் படங்களில் ஹீரோவாக நடித்த பா.விஜய் அடுத்து தகடு தகடு என்ற படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். ,

இந்தப் படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது .

DSC_0401

இதை அடுத்து இப்போது பா. விஜய் வில் மேக்கர்ஸ் என்ற நிறுவனத்தின் சார்பில் தயாரித்து பாடல்கள் எழுதி ஹீரோவாக நடிப்பதோடு இயக்குனராகவும் அறிமுகம் ஆகும் படம் ஸ்ட்ராபரி .

விஞ்ஞான மனோதத்துவ திரில் பேய்ப் படமாம் இது .

படத்தில் சமுத்திரக்கனி, தம்பி ராமையா,  தேவயானி , இவர்களுடன் யுவினா பார்த்தவி, அவனி மோடி என்று இரண்டு கதாநாயகிகள் . (ம்ஹும் இந்த மோடிக்கு எந்த சம்மந்தமும் இல்லை )

_DSC0593

“ஒரு கால் டாக்சி டிரைவர் எதிர்பாராத விதமாக ஒரு பேயை சந்திக்கிறான். முன்பே அந்தப் பேயை சந்தித்த உணர்வு அவனுக்கு . அந்தப் பேய் ஒரு நல்ல மனிதரை அநியாயமாக கொல்ல  முயல்கிறது . ஏன் அப்படி செய்கிறது ? அந்த பேயின் நியாயங்கள் என்ன என்பதுதான் படத்தின் கதை” என்கிறார் இயக்குனர் பா. விஜய் . நாயகி அவனி மோடி இதில் பேய்களை ஆராயும் விஞ்ஞானியாக வருகிறாராம்.

_DSC0350

“படத்தில் சுமார் நாற்பது நிமிடம் கிராபிக்ஸ் காட்சிகள் வருகிறது . அந்தக் காட்சிகளை முதலில் வீடியோவில் படம் பிடித்து கிராபிக்ஸ் காட்சிகளை முடிவு செய்து மீண்டும் படமாக்கினோம் . மொத்தப் படமும் சென்னையிலும் பாண்டிச்சேரியிலும் எடுத்து இருக்கிறோம். படத்தின் ஒளிப்பதிவாளர் மாறவர்மன் உட்பட பல புதிய இளைஞர்கள் அணியுடன் களம் இறங்கி இருக்கிறேன் “என்கிறார் பா விஜய் .

_DSC1194

படத்தின் இசையமைப்பாளர் தாஜ் நூர் . “படத்தில் விஜய் எழுதி இருக்கும் சண்டேக்கும் மண்டேக்கும் சண்டை . அதுல உடைஞ்சு போச்சு டியூஸ்டேயின் மண்டை ‘ என்ற பாடல் ரொம்ப சிறப்பா வந்திருக்கு. படத்தின் ரீ ரிக்கார்டிங்கை முடிக்க அறுபது நாட்கள் ஆனது ” என்கிறார் தாஜ் நூர் (ஹ்ஹஹ்ம்மம்ம்ம்ம்!)

3X0A2162

படத்தின் பெயர்க்காரணம் சொன்ன பா.விஜய் “இந்தப் படத்தில் ஸ்ட்ராபரி ஒரு முக்கியக் கேரக்டர் ஆக வருகிறது. எனவே படத்துக்கு அந்தப் பெயர் வைத்தோம் . இது முழுக்க முழுக்க கமர்ஷியல் படம் “என்றார்

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →