பாகுபலி படத்துக்கு தமிழ் நாட்டில் கிடைத்த பெரிய வெற்றிக்கு நன்றி சொல்ல அதன் நாயகன் பிரபாஸ், தயாரிப்பாளர்கள் வந்திருந்தனர் . அவர்களோடு படத்தை தமிழில் வழங்கிய ஞானவேல் ராஜா, , படத்தில் சிவகாமியாக நடித்த ரம்யா கிருஷ்ணன் இணைந்திருந்தனர் .
வாழ்த்துவதற்காக லிங்குசாமி, அம்மா கிரியேஷன்ஸ் சிவா, தயாரிப்பாளர் சி.வி. குமார், இசைஞர் மற்றும் நடிகர் ஜி.வி. பிரகாஷ்குமார் , இயக்குனர் எம் ராஜேஷ் , டார்லிங் பட இயக்குனர் சாம் ஆண்டன் , விநியோகஸ்தர் அபினேஷ் இளங்கோவன் ஆகியோர் வந்திருந்தனர் .
“படம் பார்த்ததில் இருந்து படத்தில் வரும் பாகுபலி , பல்வால் தேவன் , சிவகாமி, அவந்திகா, , தேவசேனா, கட்டப்பா போன்ற பாத்திரங்கள் தினமும் கனவில் வந்து கொண்டு இருக்கிறார்கள் . அந்த அளவு பாதிப்பை ஏற்படுத்திய படம் பாகுபலி ” என்றார் அம்மா கிரியேஷன்ஸ் சிவா .
“படம் ஆரம்பம் முதலே இந்தப் படம் பற்றிய விசயங்களை ஆர்வமாக கவனித்து வந்தேன் . இப்படி ஒரு படத்தை நம்ம ஞானவேல் ராஜா தமிழில் கொடுத்து இருப்பது எல்லோருக்கும் பெருமை ” என்றார் சி.வி.குமார் .
” இரண்டாம் பாகத்தை ஆவலோடு எதிர்பார்க்கிறோம் ” என்றார் அபினேஷ் இளங்கோவன் .
“மறக்க முடியாத மாபெரும் படைப்பு ” என்றார் சாம் ஆண்டன்.
எம்.ராஜேஷ் பேசும்போது “நம்மள எல்லாம் காமெடிக்குன்னு நேந்து விட்டுட்டாங்க, நமக்கு இந்த மாதிரி படம் எல்லாம் எடுக்க வாய்ப்புக் கொடுக்க மாட்டாங்க.
ஆனா சின்ன வயசுல நாம படிச்ச பல பல பிரம்மாண்ட விசயங்களை திரையில் பார்க்க வைத்த பாகுபலி டீமுக்கு நன்றி ” என்றார் .
ஜி.வி. பிரகாஷ்குமார் பேசும்போது “உண்மையிலேயே மறக்க முடியாத அனுபவம். ஹாலிவுட் படம் பார்த்து நாம வியந்தது போய் , இப்போ நம்ம ஊர் படத்தைப் பார்த்து ஹாலிவுட் வியக்கும் காலம் இது . குறிப்பா அந்த போர்க்களம். . ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ் சார் எல்லாம் ரொம்ப பிரம்மாதமா நடிச்சு இருக்காங்க .
பிரபாஸ் , ராணா எல்லாம் கடந்த மூணு வருஷமா ஒரே படத்துல , டைரக்டர் ராஜ மவுலி மேல நம்பிக்கை வச்சிருந்து பொறுமையா காத்திருந்து சின்சியரா உழைச்சதுக்கு நல்ல பலன் கிடைச்சு இருக்கு . அடுத்த பார்ட்டுக்கு ஆவலோட காத்து இருக்கோம் ” என்றார் .
ஞானவேல் ராஜா தன் பேச்சில் ” இப்படி ஒரு அற்புதமான படத்தை எடுத்த தயாரிப்பாளர்கள் , தமிழ் நாட்டு ரசிகர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஒவ்வொரு ஷாட்டையும் தமிழ்ல ஒரு தடவை தனியா எடுத்தாங்க . ஒரு சாதரணமான படத்த இரண்டு மொழிப் படமா பண்ணி அதுல இன்னொரு மொழிக்கு தனி ஷாட் எடுக்கறது பெரிய விஷயம் இல்ல.
ஆனா இப்படி ஒரு பிரமாண்ட படத்துல அப்படி எடுத்தாங்கன்னா அது பெரிய விஷயம் . எனவே அதுக்கு ஒரு நல்ல வியாபாரத்தை தருவது அவசியம் . அதனால இந்தப் படத்தை மிஸ் பண்ணக் கூடாதுன்னு பண்ணினோம் . படத்துக்கு ஆதரவு கொடுத்த மக்களுக்கு நன்றி . ” என்றார் .
ரம்யா கிருஷ்ணன் பேசும்போது
” இப்படி ஒரு பெரிய படத்துல வாய்ப்புக் கொடுத்த தயாரிப்பாளர்கள் , இயக்குனர் ராஜ மௌலி , ஆதரிச்ச நம்ம தமிழ் ரசிகர்கள் எல்லாருக்கும் நன்றி ” என்றார் .
இயக்குனர் லிங்குசாமி தன் பேச்சில் “ராஜ மவுலியின் அப்பா எனக்கு நெருங்கிய நண்பர் . அடிக்கடி போனில் பேசுவார் .
படம் ரிலீஸ் ஆன அன்னிக்கு காலைல எனக்கு ஹைதராபாத்தில் இருந்து ‘பாகுபலி படம் பயங்கர ஃபிளாப் அப்படின்னு ஒரு போன். எனக்கு பயங்கர ஷாக் .
ஆனா இதையெல்லாம் நம்பக் கூடாது .நாம பார்த்துதான் முடிவு பண்ணனும்னு , டிக்கட் புக் பண்ணி இருந்த தியேட்டருக்கு போனேன் . படம் பார்த்து அசந்துபோனேன். ஒவ்வொரு பிரேமும் அப்படி ஒரு அற்புத அனுபவமா இருந்தது .
மலை உயரத்துக்கு நின்னார் பிரபாஸ். புது தமன்னாவை பார்க்க முடிந்தது. இரண்டு குழந்தைகளையும் கையில் ஏந்து உட்காந்து ”இது என் கட்டளை அதுவே சாசனம்”னு மிரட்டி இருந்தாங்க ரம்யா கிருஷ்ணன் . சத்யராஜ் அந்த கேரக்டரில் வாழ்ந்து இருந்தார் .
படம் முடியும்போதுதான் என்னவோ படம் பார்த்துகிட்டு இருக்கும்போது பாதியில கரண்ட் கட் ஆன மாதிரி ஒரு திருப்தியின்மை இருந்தது . ஆனா அது ஒரு டைரக்டரோட தில் . அவர் பிளான் பண்ணிதான் செஞ்சுருக்காரு. இரண்டாம் பாகத்துக்கு வாழ்த்துக்கள் ” என்றார் .
இறுதியாக பேசிய ஹீரோ பிரபாஸ் “எனக்கு இவ்வளவு ஆதரவு கொடுத்த தமிழ் மக்களுக்கு நன்றி . இந்தப் படத்தில் நடிக்கும்போது பல விபத்துகள் . பல காயங்கள் . இந்தப் படம் எடுத்த காலத்தில் ஐந்து படங்களை நான் இழந்தேன் . நம்பி உழைத்தோம் . இந்த வெற்றி கிடைத்து இருக்கு .
படத்துல சத்ய்ரராஜ் சார் என் காலை எடுத்து தன் தலையில் வச்சுக்கற மாதிரி ஒரு காட்சி இருக்குன்னு டைரக்டர் ராஜமவுலி சார் சொன்ன உடனே நான் பதறிப் போய் ‘நடிக்க புக் பண்ணும்போதே சத்யராஜ் சார் கிட்ட முன்னயே சொல்லிடுங்க’ன்னு சொன்னேன். அவரு சார் கிட்ட கதை சொல்லும்போதே அதை சொல்ல , உடனே ஒத்துக்கிட்டார் சத்யராஜ் சார் .
நான் இந்தப் படத்துலயே நடிக்க ரொம்ப கஷ்டப்பட்ட சீன் அதுதான் . எவ்வளவு பெரிய ஆர்ட்டிஸ்ட் அவரு . என்னதான் நடிப்புன்னாலும் அவர் தலையில் என் காலை எடுத்து வைத்துக் கொள்ளும் அந்தக் காட்சி எடுக்கும்போது ரொம்ப கஷ்டமா இருந்தது .
பாகுபலி படத்தின் கதையில எம் ஜி ஆர் நடிச்ச அடிமைப் பெண் படத்தின் கதை இருக்குன்னு சொல்றாங்க . எம் ஜி ஆர் சார் நடிச்ச ஒரு கதையில நடிக்கிறது பெரிய அதிர்ஷ்டம்தானே. பெருமைதானே
தமிழ்ல பொருத்தமான வாய்ப்பு வந்தா நடிப்பேன். குறிப்பா ஷங்கர் சார் , கவுதம் மேனன் இவங்க படங்களில் நடிக்கும் ஆசை இருக்கு ” என்றார்.
சக்சஸ் !