கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான இப்படத்தின் காமெடிக் காட்சிகள் மற்றும் பாடல்கள் மிகப்பெரிய வரவேற்பு பெற்றதோடு, முழுமையான பொழுதுபோக்கு படமாகவும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றது. மேலும், விமர்சன ரீதியாகவும் சிறந்த கமர்ஷியல் படமாக பாராட்டுப் பெற்றது.
தற்போது கடந்த 40 நாட்களுக்கு மேலாக புதிய திரைப்படங்கள் வெளியாகத காரணத்தினால் ஏற்கனவே வெளியான படங்களை இரண்டாவது முறையாக ரிலீஸ் செய்து வருகிறார்கள்.
அந்த வகையில் ‘பாக்கணும் போல இருக்கு’ படமும் சிங்கப்பூரில் கடந்த மாதம் ரிலீஸ் செய்யப்பட்டது. ரிலீஸ் ஆன முதல் நாளே சிறப்பான ஓப்பனிங்கோடு ரசிகர்களின் வரவேற்பை பெற்ற இப்படம்,
சிங்கப்பூரில் தொடர்ந்து நான்காவது வாரமாக ஓடிக்கொண்டிருப்பதோடு, வசூலில் சாதனையும் படைத்து வருகிறது.
சிங்கப்பூரில் உள்ள பிரபல திரையரங்கமான ரெக்ஸ் உள்ளிட்ட பல முக்கிய திரையரங்குகளில் சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கிறது.
கஞ்சா கருப்பு, சூரி, சிங்கப்பூர் துரைராஜ் ஆகியோரது காமெடிக் காட்சிகள் படத்திற்கு ஹைலைட்டாக அமைந்தது போல, பாடல் காட்சிகளும் உறுதுணையாக அமைந்திருக்கிறது.
இப்படத்திற்கு சிங்கப்பூரில் கிடைத்த வரவேற்பால் மகிழ்ச்சியடைந்திருக்கும் தயாரிப்பாளர் துவார் ஜி.சந்திரசேகர், தமிழகத்திலும் இப்படத்தை மீண்டும் ரிலீஸ் செய்ய முடிவு செய்திருக்கிறார்.
’பாக்கணும் போல இருக்கு’ படத்தில் எப்படி காமெடி, பாடல், காதல் காட்சிகள் பாராட்டுப் பெற்றதோ அதேபோல், படத்தில் இடம்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி காட்சியும் பாராட்டுப் பெற்றது.
நிஜமான ஜல்லிக்கட்டு போட்டியை படமாக்கிய விதம் இப்படத்தின் சிறப்பு அம்சமாகும். இப்படம் முதல் முறையாக வெளியான போது, துவார் ஜி.சந்திரசேகர்,
தனது சொந்த கிராமத்தின் கோவில் திருவிழாவுக்கான அனைத்து செலவுகளையும் ஏற்றுக்கொண்டு சிறப்பாக நடத்திக் கொடுத்தார்.
தற்போது இரண்டாவது முறையாக ரிலீஸ் செய்யப்பட்டு, படம் வெற்றிப் பெற்றிருப்பதால், இந்த வருடமும் தனது சொந்த ஊரில் உள்ள கோவில் திருவிழாவில்,
தனது சொந்த செலவில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த முடிவு செய்திருக்கிறார்.
துவார் சந்திர சேகர்
மேலும், ஆறாவது திரைப்படத்தை பெரிய பொருட்ச் செலவில் தயாரித்துள்ள துவார் ஜி.சந்திரசேகர், அதற்கான பணிகளில் பிஸியாக இருக்கிறார்.
சினிமா வேலை நிறுத்தப் போராட்டம் முடிந்ததும் படப்பிடிப்பு தொடங்க இருக்கும் இப்படம் ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகளில் படமாக்கப்பட இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பெயர் : சு.செந்தில் குமரன்
புனைப் பெயர் : ராஜ திருமகன்
கல்வித் தகுதி : B.E. Mechanical
பிரசுரமான முதல் படைப்பு : கவிதை --
பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில்
தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே
தேவை என்றாராம் ஜெயவர்த்தனே!
நல்ல வேளை.....
தமிழன் ரத்தம் கேட்கவில்லையே
(ஜூனியர் விகடன் )
பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம்
மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது
விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்)
விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு)
கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு)
சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்)
நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்)
பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்)
சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் )
தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி )
நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி )
நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது )
திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்)
நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு )
-- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக)
-- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள்
பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா),
முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் )
அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து
தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462