சத்யாவின் பக்காவான இசையில் ‘பக்கா ‘

அதிபர் படத்தை தயாரித்த பென் கண்ஸ்டோரிடியம் பட நிறுவன தயாரிப்பாளர் T.சிவகுமார் அடுத்து தயாரிக்கும் படம் “ பக்கா “                                                                                                

விக்ரம்பிரபு கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகிகளாக  நிக்கிகல்ரானி, பிந்துமாதவி இருவரும் நடிக்கிறார்கள்.

மற்றும் சூரி, சதீஷ், ஆனந்த்ராஜ், நிழல்கள் ரவி, சிங்கமுத்து, சிங்கம் புலி, ரவிமரியா, வையாபுரி, இமான் அண்ணாச்சி, ஜெயமணி, கிருஷ்ணமூர்த்தி,  முத்துக்காளை,

சிசர்மனோகர், சுஜாதா, நாட்டாமை ராணி, சாய்தீனா ஆகியோர் நடிக்கிறார்கள். முக்கிய வேடத்தில் தயாரிப்பாளர் T.சிவகுமார் நடிக்கிறார்.ஒளிப்பதிவு           –  எஸ்.சரவணன் / இசை   –  C.சத்யா  / பாடல்கள்   –   யுகபாரதி, கபிலன் 

கலை   –  கதிர் /  நடனம்   –   கல்யாண்,  தினேஷ்

ஸ்டன்ட்   –  மிராக்கிள் மைகேல் / எடிட்டிங்    –  சசிகுமார்                                                                            

தயாரிப்பு நிர்வாகம் –  செந்தில்குமார்                                                                                   

இணை தயாரிப்பு  –  B.சரவணன்                                                                               

தயாரிப்பு  –  T.சிவகுமார்   

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் –  S.S.சூர்யா                                                                                                              

படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் திரையிடப் பட்ட பாடல்களில் பட்டையைக் கிளப்பி இருந்தார் இசை அமைப்பாளர் c.சத்யா .  குத்தாட்டப் பாடல்; துள்ளாட்டம் போட வைத்தது என்றால் மெல்லிசைப் பாடல் மனதை வருடியது . 

இசை அமைப்பாளர் சி. சத்யா

விழாவில் கலந்து கொள்ள முடியாத நிலையில் செய்தி அனுப்பி இருந்த  விக்ரம் பிரபு கூட சத்யாவை (மட்டும்) பெரிதும் பாராட்டி இருந்தார் 

கலந்து கொண்டு பேசிய நாயகி நிக்கி கல்ரானி ” நான் ரஜினி சாரின்  தீவிர ரசிகை. அவருடைய ரசிகையாகவே இந்தப் படத்தில் நான் வருகிறேன் என்ற ஒரே காரணத்தால் இந்தப் படத்தில் நடித்தேன் .

படத்தில் நான் ரஜினி ராதா என்ற கேரக்டரில் நடிக்கிறேன் . விக்ரம் பிரபு டோனி ரசிகராக நடிக்கிறார் ” என்றார் ” முழு நீள  காமெடி படமாக உருவாகி உள்ளது. தமிழ் சினிமாவில் இதுவரை ஒரு காட்சியிலோ அல்லது ஒரு பாடல் காட்சியிலோ திருவிழாவை பார்த்திருபோம். ஆனால் நாங்கள் ஒரு திருவிழாவையே படமாக எடுத்திருக்கிறோம்.

இன்டீரியல்  காட்சிகள் ( சுவற்றிற்குள் )  இல்லாமல் படம் முழுக்க எக்ஸ்டீரியல் என்று சொல்லப்படும் வெளிப் புறங்களிலேயே படமாக்கப் பட்ட முதல் படம் இந்த பக்கா. ” என்றார் தயாரிப்பாளர் டி. சிவகுமார் .

”கள்ளக்குறிச்சி அருகில் உள்ள செம்படாப் குறிச்சி என்ற ஊரில் ஒரிஜினல் திருவிழாவே நடத்தி இசையமைப்பாளர் சத்யாவை அழைத்துச் சென்று,  இரவு முழுக்க அவரை பார்க்க வைத்து ஒரு கரகாட்ட சாங்கை கம்போஸ் பண்ணினோம்.

அந்த பாடல் பட்டி தொட்டியெங்கும் பேசப்படும் பாடலாக நிச்சயம் இருக்கும்.

குற்றாலம் பக்கத்தில் ஒரு ஆற்றில் 1000 பேரை வைத்து ஆற்று  திருவிழாவில்  ஒரு வித்தியாசமான காட்சிகளை தத்ரூபமாக படமாக்கினோம்.  படம் விரைவில் வெளியாக உள்ளது ” என்றார் இணை தயாரிப்பாளர் சரவணன் . 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *