விவேக்குடன் நடிக்க விரும்பும் சிவ கார்த்திகேயன்

palakkattu

மீண்டும் காமெடி பிளஸ் செண்டிமெண்ட் கதாநாயகனாக விவேக் !

எஸ் எஸ் எஸ் எண்டர்டெயின்மென்ட் சார்பில் ஜே. ஏ. லாரன்ஸ் வழங்க,  மேக்னாஸ் புரடக்ஷச்ன தயாரிப்பில் விவேக் கதாநாயகனாக நடித்து,  திரைக்கு வரத் தயாராக இருக்கும் படம் பாலக்காட்டு மாதவன் . சந்திர மோகன் என்பவர் இயக்கி இருக்கும் இந்தப் படத்தில் விவேக்கின்  ஜோடியாக நடித்திருப்பவர் சோனியா அகர்வால்.

பிள்ளையைத் தத்தெடுப்பது வழக்கம் . விவேக் ஒரு அம்மாவைத் தத்தெடுத்துக் கொண்டு வந்து விடுகிறார்.  அந்த அம்மாவுக்கும் மனைவிக்கும் மாமியார் மருமகள் சண்டை வருகிறது. அப்புறம் என்ன என்பதை காமெடியும் செண்டிமெண்டும் கலந்து சொல்லி இருக்கும் படம் இது.

palakkattu 3

அம்மாவாக பழம்பெரும் நடிகை  ஷீலா நடித்திருக்கிறார்.  “பொதுவாக இதுவரை மலையாளத்திலும் தமிழிலும் என்னை ரொம்ப சாஃப்ட்டான கேரக்டரில்தான் நடிக்க வைப்பார்கள். இதில் வித்தியாசமான வேடம் ”  என்று ஷீலா சொல்ல , அதை வழி மொழிந்த விவேக் ” அவங்களுக்கு காமெடி நடிப்பில் இவ்வளவு திறமை இருக்கும்னு யாருமே நினைச்சிருக்க மாட்டாங்க. சும்மா கலக்கி இருக்காங்க ” என்றார் .

ஒருவன் திடீர் என பணக்காரன் ஆனால் என்னென்ன செய்வான் என்பது போல படத்தில் வரும் ஒரு பாடலை விவேக்கே எழுதி இருக்கிறார் . ஸ்ரீகாந்த் தேவா இசையில் இந்தப் பாடலை இசையமைப்பாளர் அனிருத் பாடி இருக்கிறார்.

எனவே ?

படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பாடல்களைப் பெற்றுக் கொண்டவர் அனிருத் . வெளியிட்டவர் சிவகார்த்திகேயன் .

palakkattu 2“வொய் திஸ் கொலை வெறி பாட்டு ஹிட் ஆனப்போ எல்லாரும் என்னை பாராட்டினாங்க . ஆனா சினிமா உலகில் இருந்து என்னை பாராட்டிய முதல் மனிதர் விவேக் சார்தான் . அந்த நன்றிக்காகதான் அவர் கேட்டப்போ பாட்டுப் பாடினேன் . இப்போ நிகழ்ச்சிக்கும் வந்திருக்கேன் ” என்றார் அனிருத்.

 “என் படத்தின் பாடல்களை வெளியிட வரணும்னு சிவ கார்த்திகேயனுக்கு ஒரு மெசேஜ்தான் அனுப்பினேன் .அவரே போன்ல வந்து ‘கண்டிப்பா வர்றேன்’னு சொன்னார் . இதன் மூலமா யாரும் போன் பண்ணினா சிவ கார்த்திகேயன் போனை எடுக்கறது இல்ல என்று சொல்லப்படுகிற குற்றச் சாட்டை அடிச்சு நொறுக்கிட்டார்.” என்றார் விவேக்

“சின்ன வயசுல இருந்தே நான் விவேக் சார் ஃபேன்” என்று ஆரம்பித்த சிவ கார்த்திகேயன் ” எப்போ பார்த்தாலும் அவரோட காமெடியை பார்த்துட்டே இருந்து வீட்ல திட்டு கூட வாங்கி இருக்கேன். அவர் ஒரு படத்துல சொன்ன ‘அடியே ரதி அக்னிஹோத்ரி!’ என்ற டயலாக்கை நான் ஒரு படத்துல அறியாமலே பேசிட்டேன் . அந்த அளவுக்கு அவர் காமெடி என்னை ஆக்கிரமிச்சு இருக்கு . இப்போ அவர் படப் பாடலை வெளியிட அவர் கூப்பிட்டதை பெருமையா நினைக்கிறேன் . கூடிய சீக்கிரம் அவர் கூட சேர்ந்து நடிக்கவும் ஆசைப்படுறேன் ” என்றார் .

அது மட்டுமல்ல …

காமெடி நடிகர்கள் ஹீரோ ஆகும்போது கதாநாயகி கிடைப்பதில் உள்ள கஷ்டம் பற்றி பேசிய சிவ கார்த்திகேயன் ” மான் கராத்தே படத்தில்  எனக்கு ஹன்சிகா ஜோடியாக நடிக்க வந்த போது பல விமர்சனங்கள் வந்தது ” என்று கூற , இதற்கு பதில் சொன்ன விவேக் ” உங்க வருங்காலக் கணவர் எப்படி இருக்கணும்?னு’ எந்தக் கதாநாயகி கிட்ட கேட்டாலும் ‘சென்ஸ் ஆஃப் ஹியூமர் உள்ள ஆளா வேணும்’னு சொல்றாங்க . ஆனா நடிக்க கூப்பிட்டா மட்டும் வர மாட்டேங்கறாங்க. எங்க தொழிலே சென்ஸ் ஆஃப் ஹியூமரை வச்சுதானே நடக்குது ” என்றார்

சரி.. பாடலும் டிரைலரும் எப்படி இருக்கு ?

நாம் மூணாவது பாராவில் சொல்லி இருக்கும் கதையை டிரைலர் தெளிவாக விளக்குகிறது .

palakkattu 4விவேக் எழுதியுள்ள பாடலும் , எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன் என்று துவங்கும் பாடலும் நன்றாக இருக்கின்றன .

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →