வேதாத்திரி பிக்சர்ஸ் மற்றும் பவர் கிங்ஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்க, ஜெயபாலகிருஷ்ணன் என்ற புதியவர் இயக்கி இருக்கும் படம் பந்து .
கோவை பகுதியைச் சேர்ந்த வங்கி அதிகாரியான பிரதாப் என்பவர் கதாநாயகனாக நடிக்க, , மலையாளப் புகழ் திருஷ்யம் படத்தில் மோகன் லாலுக்கு மகளாகவும் தமிழில் கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை மற்றும் நாகராஜா சோழன் ஆகிய படங்களில் நடித்தவருமான அன்ஷிபா கதாநாயகியாக நடிக்கும் இந்தப் படம்….
திருநெல்வேலி திருநெல்வேலி தூத்துக்குடி கோவில்பட்டி பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் நந்தா என்ற புதியவர் இசை அமைத்து இருக்கும் இந்தப் படத்தின் எல்லா பாடல்களையும் பத்மாவதி என்ற பெண் கவிஞர் எழுதி இருக்கிறார் .
தவறான செல்போன் அழைப்புகள் அதிகமாகிக் கொண்டு இருக்கும் காலம் இது . அப்படி ஒரு தவறான அழைப்பால் நிகழும் எதிர்பாராத ஒரு பிரச்னையில் கதாநாயகன் மாட்டிக் கொள்ள , காவல் துரையின் தவறான நடவடிக்கைகளால் அவனது வாழ்க்கைஎப்படி பந்து போல உதைக்கப்படுகிறது என்பதை விறுவிறுப்பான திரைக்கதையுடன் சொல்லும் படமாம் .
ஆனால் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் இந்தக் கதையை துளியும் வெளிப்படுத்தாத ஒரு முன்னோட்டத்தையும் சில பாடல்களையும் திரையிட்டார்கள் . ஊதா நிறம் என்று சொன்ன கதாநாயகிக்காக ஹீரோ விதம் விதமாக ஊதா உடை அணிந்து பாடும் பாடல் காட்சி கவனம் கவர்ந்தது.
நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நடிகர் விக்னேஷ் “ஹீரோ அவசரப் பட்டு வங்கி வேலையை விடவேண்டாம்” என்று கூற, அடுத்துப் பேசிய பாடகர் நரேஷ் அய்யர் “சீக்கிரமே அவர் அந்த வேலையை விட்டு விடும் அளவுக்கு இந்தப் படம் வெற்றி பெற வேண்டும்” என்றார் . முன்னது விழிப்புணர்ச்சி பின்னது