‘தூங்காவனத்’தில் சிம்புவை நெம்பிய பாண்டிராஜ்

Thoongavanam Audio launch Stills (66)

ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் எஸ். சந்திரஹாசனும் கமல்ஹாசனும் தயாரிக்க, கமல்ஹாசன் , பிரகாஷ்ராஜ் , த்ரிஷா, கிஷோர், சம்பத், யூகி சேது நடிப்பில், கமல்ஹாசனிடம் சுமார் ஏழு ஆண்டுகள் —  நான்கு படங்களுக்கு உதவி இயக்குனராக இருந்த —  ராஜேஷ் எம் செல்வா  இயக்குனராக அறிமுகமாகும் இரு மொழிப்படம் தூங்காவனம் . தெலுங்கில் சீக்கட்டி ராஜ்ஜியம் . 

 பொதுவாக ஒரு படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடந்தால் அது அரங்கில் உள்ள ரசிகர்களுக்கு மட்டுமே அந்த சமயத்தில் காணக் கிடைக்கும் . அது தொலைக்காட்சிகளில் படம் பிடிக்கப்பட்டு பிறகுதான் நிகழ்ச்சிக்கு வராத ரசிகர்களை  சென்றடையும் . ஆனால் தூங்காவனம் படத்தில் பாடல் வெளியீட்டு விழா நடந்த அதே சமயம் அது தமிழகம் முழுக்க 25 திரையரங்குகளில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது .
 
Thoongavanam Audio launch Stills (51)
அதற்கேற்ப கேமரா பொருத்தப்பட்ட குட்டி ஹெலிகாப்டர் ஒன்று அரங்கு முழுக்க பறந்து பரந்து (எழுத்துப் பிழை அல்ல) படம் பிடித்துக் கொண்டு இருந்தது . ஏ சி அரங்கில் அது தலைக்கு மேல் பறந்த போது உச்சந்தலையில் சில்லென்று காற்றடித்தது . 
 
விழாவுக்கு படம் சம்மந்தப்பட்ட கலைஞர்கள் தவிர நடிகர் சங்கத் தேர்தலின் பாண்டவர் அணியைச் சேர்ந்த விஷால் , பொன் வண்ணன் ஆகியோர் வந்திருந்தார்கள். கமல் நன்றி இல்லாதவர் என்று சரத்குமார் தாக்கி இருக்கும் நிலையில்  இவர்களின் வரவு கவனிக்கப்பட்டது .
 
Thoongavanam Audio launch Stills (50)
படத்தின்  இரண்டு முன்னோட்டங்களை காட்டினார்கள் . என்ன சொல்லிப் பாராட்ட … !நடிப்பு தொழில் நுட்பம் எல்லாவகையிலும் ஹாலிவுட் படம் போலவே இருந்தது .
 
படத்தில் இடம் பெற்ற பாடல் ஒன்றை மேக்கிங் வீடியோவாக உருவாக்கி இருந்தார்கள் . ”அதை அப்படியே படத்தின் கடைசியில் இடம்பெற வைக்கலாம் ”என்றார் பொன்வண்ணன் . அந்தளவுக்கு சிறப்பாக இருந்தது. 
 
“நிஜ வாழ்வில் கமல் பேசும் மொழி வளத்தில் கொஞ்சத்தையே சினிமாவுக்கு கமல் தருகிறார்.
Thoongavanam Audio launch Stills (11)  
தன் சிந்தனையில் கற்பனையில் வருவனவற்றில் சினிமாவில் செரிக்க முடிந்த கொஞ்சத்தை மட்டுமே சினிமாவுக்கு கமல் தருகிறார் ” என்றார் வைரமுத்து .
 
விஷால் ” இனி எனக்கு சினிமா உலகில் என்ன பிரச்னை வந்தாலும் இனிமேல்  கமல் சாரிடம்தான் போவேன் ” என்று சொன்னபோது , அதை சீரியசாக கூர்ந்து கவனித்தார் கமல் . 
 
விழாவுக்கு வந்திருந்த பலரும் கமலைப் பாராட்டிக் கருத்துகள் சொல்ல , அந்த வாய்ப்பை — தன்னை நோகடிக்கும் சிம்புவைப் போட்டுத்தாக்க பயன்படுத்திக் கொண்டார் இயக்குனர் பாண்டிராஜ் 
 
pandiraj
இது நம்ம ஆளு பட ஷூட்டிங்குக்கு சிம்பு தாமதமாவே வந்துட்டு இருந்தார் . ஒரு நாள் நான்  பொறுமை இழந்து ‘இது சரியா?’ன்னு கேட்டேன் .   ” சின்ன வயசுல இருந்தே நடிச்சுட்டு இருக்கேன் இல்லியா? அதான் நடிப்பு போரடிக்குது ‘ என்றார் சிம்பு.  
நான் உடனே சிம்பு கிட்ட ” அம்பத்து அஞ்சு வருஷமா கமல் சார் நடிச்சுட்டு இருக்காரு. அவர் என்ன லேட்டாவா வர்றாரு ? அவரை விடவா நீ நடிச்சுட்ட?’ன்னு கேட்டேன் ” என்று கிடைத்த அம்பில் சிம்புவை ஒரு நெம்பு நெம்பிய பாண்டிராஜ்…..
 
 தொடர்ந்து ” தன்னிடம் உதவியாளராக இருந்த ராஜேஷை இயக்குனர் ஆக்கியதன் மூலம் இளைய தலைமுறையுடன் கமல் சார் இணைகிறார் . அதே வகையில்  எனக்கும் எங்களைப் போன்றவர்களுக்கும் வாய்ப்புத் தரவேண்டும் ” என்று கூறியதன் மூலம் , 
 
அந்த அம்பிலேயே ஒரு கோரிக்கை ஓலையைக் குத்தி அனுப்பவும் தவறவில்லை .

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →