AD ஸ்டுடியோஸ் மற்றும் அப்பு பத்து பப்பு புரடக்சன்ஸ் சார்பில் எம்.ரியாஸ் ஆதம், சிஜூ வடக்கன் தயாரிக்க, ஜோஜு ஜார்ஜ், சாகர் சூர்யா, ஜுனைஸ் , அபிநயா, அபயா ஹிரன்மயி, சீமா, சாந்தினி ஸ்ரீதரன் நடிப்பில்
நடிகர் ஜோஜு ஜார்ஜ் முதன் முதலில் இயக்கி இருக்கும் படம் .
கோடிக்கணக்கான ரூபாய்க்கு குற்றங்கள் ரவுடித்தனம் செய்யும் நபர்கள் கிரி, (ஜோஜு ஜார்ஜ்), வாரன்ட் டேவி ( பாபி குரியன்) , குருவில்லா (பிரசாந்த் அலெக்சாண்டர்), சஜி (சுஜித் அலெக்சாண்டர்) ஆகியோர் . இதில் குருவில்லா கிரியின் மைத்துனர். சஜி சகோதரர் . திருச்சூரில் பெரிய தாதா குடும்பம் இது .
கிரியின் மனைவி கவுரி ( அபிநயா). டேவியின் மனைவி ஜெயா ( அபிநயா ஹிரன்மயி)
இந்த நிலையில் மிகுந்த லோக்கல் ரவுடி நண்பர்கள் இருவரில் ஒருவரான டான் செபஸ்டியன் (சாகர் சூர்யா) – இன்னொருவன் சிஜு(ஜுனைஸ்)- கவுரியின் இடுப்பைக் கிள்ள ,
அவர்களை கிரி அடிக்க, பதிலுக்கு அவர்கள் வீடு புகுந்து கவுரியை பாலியல் ரீதியாக கேவலப்படுத்தி விட்டு தப்பிக்க, அவர்களை கிரி குடும்பம் வெறி கொண்டு தேட ,
பதிலுக்கு அவர்கள் கிரி குடும்பம் மற்றும் நட்பு வட்டத்தில் உள்ள ஒவ்வொரு பெரிய தலைகளையும் காலி செய்ய ..நடந்தது என்ன என்பதே படம்
டைரக்டராக ஜெயித்து இருக்கிறார் ஜோஜு ஜார்ஜ் . நடிக நடிகையர் தேர்வு அபாரம்
ஜோஜு ஜார்ஜ், சாகர் சூர்யா, ஜுனைஸ் , அபிநயா, அபயா ஹிரன்மயி, சீமா, சாந்தினி ஸ்ரீதரன் ஆகியோர் நடிப்பில் அசத்தி இருக்கிறார்கள். . ஒருவருக்கு ஒருவர் சளைக்கவில்லை.
வேணு, ஜின்டோ ஜார்ஜ ஆகியோரின் ஒளிப்பதிவு, மனு ஆண்டனியின் படத் தொகுப்பு , விஷ்ணு விஜய், சாம் சி எஸ் , சந்தோஷ் நாராயணன் இவர்களின் இசை இவையும் சிறப்பாக இருக்க, மேக்கிங்கில் அசத்தி இருக்கிறார் ஜோஜு ஜார்ஜ் .
இடைவேளைக்குப் பிறகு தடுமாறும் திரைக்கதை,
என்னதான் கமர்சியல் என்றாலும் லாஜிக் இல்லாத கொலைகள்,
எல்லோரும் அயோக்கியர்கள் என்ற நிலையில் எவன் எப்படி போனா என்ன என்று ஏற்பாடு உணர்வு
இவை படத்துக்கு மைனஸ்.