1990களின் பின்னணியில் உருவாகி இருக்கும் இந்தப் பதில், காதல் எப்படி உறவுகளை சிதைக்கிறது; அதே போல உறவுகள் எப்படி காதலை சிதைக்கிறது என்பது இரண்டு கோணத்தில் இருந்து நியாயமாகப் பேசப்பட்டுள்ளதாம். ஜாதி வெறி படத்தில் ஒரு முக்கிய விஷயமாக இருக்கிறது என்பது படத்தின் முன்னோட்டத்திலும் பாடல்களிலும் தெரிந்தது.
சபேஷ் முரளி இசையில் முத்துக் குமாரின் பாடல் வரிகளில் அமைந்த ஐந்து பாடல்கள் சிதம்பரத்தை அடுத்த சிவபுரி என்ற ஊரின் கோவில் திருவிழா, கொள்ளிடம் ஆறு, மூங்கில் காடுகள் , போன்ற இயற்கைப் பின்னணியில் படமாக்கப்பட்டு உள்ளன. ஒரு பாடலில் நாயகனும் நாயகியும் மழையில் நனைந்து ஆடிப் பாட .. ..
அட சினிமாவுல இதெல்லாம் சகஜமப்பா .
இந்தப் பறவைகள் போவது எங்கே ? தத்துவப் பாட்டு தவிர, அம்மா செண்டிமெண்ட் பாட்டு ஒன்றும் படத்தில் உண்டு . முதன் முதலாக ஒரு பாட்டில் டான்ஸ் எல்லாம் ஆடிக் கலக்கி இருக்கிறார் கஞ்சா கருப்பு .
படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் இயக்குனர்கள் ஆர்.கே செல்வமணி,வி.சேகர் , .பேரரசு ஆகியோர் கலந்து கொண்டு பாடல்களை வெளியிட்டனர் .
நிகழ்ச்சியில் பேசிய பேரரசு ” கஞ்சா கருப்புவின் மனைவி எனக்கு உறவுக்காரப் பொண்ணு . இப்படி எங்க சொந்தத்துல பொண்ணு எடுத்துட்டு எந்த நிகழ்ச்சிக்கு போனாலும் கதாநாயகி பக்கத்துல உட்கார்றதுலேயே குறியா இருக்காரு கஞ்சா கருப்பு ” என்று சொன்னது ஒரு பக்கம் இருக்கட்டும் .
இன்னொரு விசயம்தான் “அப்படியா?” என்று கேட்க வைக்கும் .
“கஞ்சா கருப்பு ஊருல யாருக்கும் பயப்படாத ஆளு . அங்க அவருக்கு பேரே அஞ்சா கருப்புதான் .. பாலா அண்ணன்தான் அவரை கஞ்சா கருப்புன்னு ஆக்கிட்டாரு “என்றார் .
நிஜமாவா பாலா?