ஆர்யா நடித்த கலாபக் காதலன் படத்தை இயக்கிய இகோர் இயக்கத்தில், கெய்கர் பிலிம் புரடக்ஷன் சார்பில் மலேசியாவைச் சேர்ந்த ஜெயராதாகிருஷ்ணன் மற்றும் நவ குமாரன் இவர்களுடன் கொரியாவைச் சேர்ந்த கிம் சூன் ஜாங் ஆகியோர் தயாரிக்க, இளம் இசையமைப்பாளர் சாம் டி ராஜ் இசையில் உருவாகி , வரும் 7 ஆம் தேதி திரைக்கு வர இருக்கும் படம் ‘வந்தா மல’
தமிழ், பிரசாத், ஹிட்லர், உதயராஜ் ஆகியோருடன் கங்காரு பட நாயகிகளில் ஒருவரான பிரியங்கா கதாநாயகியாக நடிக்க, பழம்பெரும் கதை வசன கர்த்தா இயக்குனர் நடிகர் வியட்நாம் வீடு சுந்தரம் முக்கிய வேடத்தில் நடிக்க … இவர்களுடன் மகாநதி ஷங்கர் , மலேசியா தியாகா மற்றும் திருநங்கை மலைக்கா ஆகியோர் நடித்திருக்கும் படம்இது
சென்னையில் காலகாலமாக வாழும் மக்களின் மொழியில் அமைந்த இந்தப் படத்தின் பாடல்களுக்கு, நகர்ப்புற சென்னையின் நேட்டிவிட்டி இசையை….. சரியான இசைக் கருவிகள் , அருமையான மெட்டுகள் , பொருத்தமான குரல்கள் மூலம் மிக சிறப்பாகக் கொடுத்து இருக்கிறார் இசையமைப்பாளர் சாம் டி ராஜ் என்பதை நாம் முன்பே பார்த்திருக்கிறோம்.
இப்படி முழுமையாக சென்னைத் தமிழுடன் அதற்கேற்ற இசையைக் கலந்து ஒரு படத்தின் எல்லாப் பாடல்களும் இதுவரை அமைந்ததில்லை என்ற நிலையில், படத்தின் பாடல்கள் செம ஹிட் அடித்து இருக்கிறது என்பதையும் பேசினோம் . படத்தில் இடம்பெற்ற ‘வாயில வட சுடு’ என்ற பாடல் பற்றியும் தனிக் கட்டுரையாகப் பார்த்தோம்
{இவை குறித்த முழு தகவல்களுக்கு https://wh1026973.ispot.cc/vantha-mala-music-reveiw/ மற்றும் https://wh1026973.ispot.cc/vaayila-vada-sudu-song-review/ ஆகியவற்றை பதித்துப் பார்க்கலாம் )
இப்போது இந்தப் படத்துக்கு இன்னொரு கூடுதல் சிறப்பாக ஒரு பாடல் வருகிறது.
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் முதல் படமாக, கலைஞரின் கதை வசனத்தில் பெருமாள் பிக்சர்ஸ் நிறுவனமும் ஏ வி எம்மும் இணைந்து தயாரித்து 1952 ஆம் ஆண்டு வெளிவந்த படம் பராசக்தி . இந்தப் படத்தில் வந்த — உடுமலை நாராயண கவி எழுதிய — ”தேசம் ஞானம் கல்வி .. ”என்ற பாடல் அப்போதே பட்டி தொட்டி எல்லாம் கொட்டி முழக்கிய பாடல்.
இன்றும் வாழ்க்கைக்குப் பொருந்தும் வரிகளைக் கொண்ட அந்தப் பாடலுக்கு தலைமுறைகளைக் கடந்தும தலையாட்டும் ரசிகர்கள் இன்றும் ரசிகர்கள் உண்டு .
இந்த வரலாற்று சிறப்பு மிக்க தேசம் ஞானம் கல்வி பாடலை வந்தா மல படத்துக்காக ரீமிக்ஸ் செய்து இருக்கிறார்கள்.

பாடல் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம்
முதல் வரி பழைய பாணியில் அப்படியே கர்நாடக இசை பாணியில் பாடப்பட , அடுத்து வெஸ்டர்ன் பீட்டில் ‘திஸ் சாங் இஸ் டெடிகேட்டட் டு மணி (This song is dedicated to money) ” என்று அறிவித்து இசை ஏற்றி, இடையில் டப்பாங்குத்தில் ரீமிக்ஸ் செய்து அப்படியே வெஸ்டர்ன் பீட்டுக்கு வருகிறார் இசையமைப்பாளர் சாம் டி ராஜ்
மறுபடியும் ஆரியக் கூத்தாடினாலும் வரியில் கர்நாடக இசைக்கு போய், மீண்டும் வெஸ்டர்ன், மீண்டும் டப்பாங்குத்து என்று இசை அமைப்பாளர் இசையை அள்ளி வீசி இருக்கும் இந்தப் பாடலை பாடிய பாடகர் ரசித்துப் பாடி இருக்கிறார் . குறிப்பாக ” நல்லவரானாலும் இல்லாதவரை நாடு மதிக்காது . கல்வி இல்லாத மூடரை கற்றோர் கொண்டாடுதல் வெள்ளிப் பணம் அடியே ” என்ற வரிகளில் பாடிய விதம் அருமை .
பாடலை வெஸ்டர்ன் ஆக அமைத்து இருந்தாலும் ஒரிஜினல் பாடலின் கர்நாட்டிக் மெட்டை அப்படியே பயன்படுத்தி இருந்தது…..
நல்லவரானாலும் என்ற வார்த்தையைப் பாடும்போது ம்ம்ம்ம்ம்ம்ம்ம்… என்று தொடரும அந்த அதே பழைய ஆலாபனை ,இவற்றை அப்படியே பயன்படுத்தி இருப்பது…
இவை எல்லாம் இயக்குனர் இகோர் மற்றும் இசை அமைப்பாளரின் புத்திசாலித்தனம்

எந்திரன் படத்தில் சிட்டி ரஜினி கர்வமாக சிரிச்ரி என சிரித்து என்னை யாராலயும் அழிக்க முடியாது என்பாரே அந்த வசந்தம் அப்படியே ரஜினி குரலில் ஒழிக்க அதோடு முடிகிறது பாடல். வெரி இன்ட்ரஸ்டிங் மியூசிக்.
ஏற்கனவே இந்தப் படத்தில் இடம்பெறும் உன்னாண்ட காதல , ஆனா ஆவன்னா , வாயில வட சுடு , சைபர் ஆகலாம் போன்ற பாடல்கள் முன்னரே பிரபலமாகி இருக்கும் நிலையில் இந்த தேசம் ஞானம் கல்வி பாடலும் படத்துக்கு ஒரு பலமாக இருக்கும் என்று தோன்றுகிறது.