பேஸ்ஷன் ஸ்டுடியோஸ் சார்பில் சுதன் சுந்தரம் தயாரிக்க, ஹரிஷ் கல்யான், இந்துஜா, எம் எஸ் பாஸ்கர், நடிப்பில் ராம்குமார் பால கிருஷ்ணன் இயக்கி இருக்கும் படம் பார்க்கிங்
குடியிருப்புப் பகுதியில் காரை நிறுத்துவதில் கர்ப்பிணி மனைவியைக் கொண்ட ஓர் இளம் கணவனுக்கும் , மகள் மனைவி என வாழும் ஒரு வயதான நபருக்கும் ஏற்படும் சண்டை ஒரு நிலையில் ஈகோ காரணமாக தீவிரம் அடையும்போது என்ன நடக்கும் என்பதே படத்தின் கதையாம்.
இளம் கணவனாக ஹரீஷ் கல்யாண், கர்ப்பிணி மனைவியாக இந்துஜா, நடுத்தர வயது நபராக எம் எஸ் பாஸ்கர் நடித்துள்ளனர்
இசை சாம் சி எஸ் . ஒளிப்பதிவு சிஜு சன்னி .
பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஹரீஷ் கல்யாண், இந்துஜா, ராம்குமார் பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்
ராம்குமார் பால கிருஷ்ணன் ” நான் கேள்விப்பட்ட சம்பவங்களில் இருந்து உருவான கதை. இதுதான் படம் என்று முடிவு செய்த நிலையில் தகவல்கள் சேகரித்தபோது , இன்னொரு பாகம் எடுக்கலாம் என்ற அளவுக்கு சம்பவங்கள் நடப்பது தெரிய வந்தது . எந்த கேரக்டரையும் போற்றிப் பாடவில்லை. இரண்டு தரப்பிலுமே தப்பு உண்டு என்ற வகையில்தான் படம் எடுத்துள்ளேன்.சாம் சி எஸ் இசை படத்துக்கு பெரிய பலம் .இரண்டு பாடல்கள் உண்டு ” என்றார்.
ஹரீஷ் கல்யாண் பேசும்போது, ” ஒரு காலத்தில் கார் என்பது ஆடம்பர விசயமாக இருந்தது . எளிய சிறிய கார்கள் வந்த பின்பு அது அடிப்படை விசயமாக ஆகி விட்டது .
பெரும்பாலான கார்கள் சாலை ஓரமே நடத்தப்படுகின்றன. எனவே கார் பார்க்கிங் விஷயத்தில் சண்டை வருவது சகஜமான விஷயமாக இருக்கிறது. எனவே இந்தக் கதை எல்லாருடனும் கனெக்ட் ஆகும். படம் நன்றாக வந்துள்ளது ” என்றார் .
இந்துஜா பேசும்போது, ” பக்கத்து வீட்டு பெரியவர் – கணவர் இடையே வரும் சண்டை எல்லை மீறும்போது, ஒரு கர்ப்பிணிப் பெண்ணின் மனநிலை எப்படி இருக்கும் என்பதை வெளிப்படுத்த வேண்டிய கேரக்டர் . நன்றாக இருந்தது . ” என்றார் .
திரையிடப்பட்ட முன்னோட்டம் கதையை ஒட்டியே இருந்தது .
பொதுவாக அபார்ட்மென்ட்களில் கார் நிறுத்த இடம் உள்ளவர் மட்டுமே நிறுத்த முடியும் . அப்படி இருக்க படத்தில் சண்டை எப்படி நியாயப்படுத்தப்பட்டுள்ளது, இரண்டு தரப்புமே தப்பு என்றால் இந்தப் படம் எதற்கு என்பதற்கான பதில்கள் இந்தப் படத்துக்கு முக்கியம் .
பார்க்கலாம்