“பதினைந்து வயது முதல் இருபத்தி மூன்று வயது வரை உள்ள இளைஞர் சமூகம் பயம் அறியாதது. பக்குவமும் பெறாதது . அந்த வயசில் உள்ளவர்கள் என்ன செய்ய நினைத்தாலும் செய்வார்கள். என்ன செய்யச் சொன்னாலும் செய்வார்கள்.. அவர்களை செலுத்துகிறவர்கள் நல்லவர்களாக இருந்து நல்ல விசயங்களை செய்ய வைத்தால் அவர்கள் நல்லவர்களாக மாறுவார்கள் . செலுத்துபவர்கள் தீயவர்களாக இருந்து தவறான செயல்களை செய்ய வைத்தால் அந்த இளைஞர்கள் சமூக விரோதிகளாகப் போவார்கள் என்பதை இந்தப் படத்தில் அழுத்தமாக சொல்கிறேன் “என்று கூறும் இயக்குனர் ஜெயந்தன் ,
தொடர்ந்து “இந்த பின்னணியில் இரண்டு பெரிய குழுக்களுக்கு இடையே நடக்கும் சண்டையில் தேவையில்லாமல் சிக்கிக்கொள்ளும் ஒரு இளைஞன், அவனது காதலி, சில நண்பர்கள் இவர்களுக்கு நிகழும் சம்பவங்களே இந்த ‘பட்ற’ படம் ” என்கிறார்.
“அந்த சூழ்நிலையிலும் மிதுன் தேவ் நடிப்பில் காட்டிய ஆர்வமும் கஷ்டங்களை எல்லாம் மனதில் புதைத்துக் கொண்டு நடித்துக் கொடுத்த விதமும் அற்புதமானது. நிச்சயமாக இவர் பெரிய ஹீரோவாக வருவார் ” என்கிறார் இயக்குனர் ஜெயந்தன் .
ஓங்குதாங்காக இருக்கிறார் படத்தில் வில்லனாக நடித்திருக்கும் Dr S.R.S.பால் M.E., Phd, B.L..
ஆமாங்க , எஞ்சினியர் வக்கீலான இந்த ஆசிரியர் சென்னை , பாண்டிச்சேரி ,திருச்சி, ஆகிய ஊர்களில் பள்ளி, கல்லூரி, ஹோட்டல் , அழகு நிலையம் என்று பல்தொழில் நடத்தும் தொழிலதிபர்.
“முதல்ல இவரோட கல்லூரியில் இடம் கேட்டுத்தான் போனோம் . பார்த்தா வில்லன் கேரக்டருக்கு பொருத்தமா இருந்தாரு. நடிக்கக் கேட்டோம் . அவர் விரும்பல . சின்ன கேரக்டர்தான்னு சொல்லி இழுத்து உள்ள போட்டு மெயின் வில்லனா நடிக்க வச்சுட்டோம் ” என்று Dr S.R.S.பால் பற்றி இயக்குனர் ஜெயந்தன் கூற , ” நான் பொருத்தமா இருப்பேன்னு அவர்கள் அந்த அளவுக்கு நம்பிக்கையாக கூறும்போது, ஏன் நடிக்கக் கூடாதுன்னு ஒரு நிலையில தோணுச்சு. நடிச்சேன் . நல்லா வந்திருக்குன்னு எல்லாரும் சொல்லும்போது சந்தோஷமா இருக்கு” என்கிறார் Dr S.R.S.பால்
படத்தின் கதாநாயகி வைதேகி சில மலையாளப் படங்களிலும் சில தமிழப் படங்களிலும் நடித்து வருபவர் .
“படத்தின் ஐந்து பாடல்களுக்கான சூழலும் வெரைட்டியாக இருந்தது . அது இசையமைக்கும்போது மிகுந்த உற்சாகத்தைக் கொடுத்தது” என்கிறார் இசையமைப்பாளர் ஸ்ரீ கிருஷ்ணா .
படத்தொகுப்பாளர் மணியை வெகுவாக புகழ்கிறார் இயக்குனர் ஜெயந்தன். ” மிக சிறப்பான எடிட்டர் அவர். நான் எடுத்ததைக் கொண்டு போய் அப்படியே அவரது டேபிளில் வைப்பேன் . அவரே அழகாக எடிட் பண்ணுவார் . அதன் பிறகு நாம் போய்ப் பார்த்தால் நாம் என்ன நினைத்து எடுத்தோமோ அது அப்படியே இருக்கும் ” என்பது அவரது பாராட்டு .
பதிலுக்கு மணி என்ன சொல்கிறார் ? “நான் கதையே கேட்காமதான் எடிட் பண்ண உக்காருவேன் . அப்படி உட்காரும்போதே நமக்கு தெளிவா புரிஞ்சா , அது நல்லா வரும்னு அர்த்தம் . இந்தப் படம் அப்படி தெளிவா இருந்தது ” என்கிறார் மணி .
சென்னையிலும் பாண்டியிலும் படப்பிடிப்பு நடத்தி இருக்கிறார்கள் . கிளைமாக்ஸ் சண்டைக் காட்சி மிகப்பிரம்மாதமாக வந்திருக்கிறதாம். படத்தில் கூத்துப் பட்டறையில் இருந்து பல நடிகர்களை நடிக்க வைத்து இருக்கிறார்கள் . (இந்த பட்றக்கி அந்த பட்ற!