அவ்னி மூவீஸ் நிறுவனம் சார்பாக இயக்குநர் சுந்தர்.சி தயாரிக்க, வைபவ் , ஐஸ்வர்யா ராஜேஷ் ,ஓவியா , வி.டி.வி.கணேஷ் , சிங்கம்புலி ,யோகிபாபு , சிங்கர்பூர் தீபன் , ஆகியோர் நடிக்க,
அறிமுக இயக்குனர் பாஸ்கர் இயக்கம் படம் ‘ஹலோ நான் பேய் பேசுறேன்’.
இந்த பாஸ்கர் நாளைய இயக்குனர் ஐந்தாம் சீசனில் பரிசு வென்றவர் . அந்த நிகழ்ச்சிக்கு நடுவராக இருந்த இயக்குனர் சுந்தர் சி யின் மனதில் இடம் பிடித்து அப்படியே அவர் தயாரிக்கும் படத்தையும் பிடித்தவர்.
வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தது படக் குழு .
படம் பற்றிப் பேசிய இயக்குனர் பாஸ்கர் “வழக்கமாக பேய் என்பது ஒரு பங்களா , காடு இப்படிப்பட்ட இடங்களில் இருந்துதான் வரும் . அனால் இந்தப் படத்தில் ஒரு போனில் இருந்து பேய் வருகிறது .காமெடியும் பேய் பயமும் சமமாக இந்தப் படத்தில் இருக்கும்.
படத்தில் ஒரு சாவுக்குத்து பாடலுக்கு வைபவும் ஐஸ்வர்யாவும் அதி அட்டகாசமாக ஆடி உள்ளனர் . விஜய் சேதுபதி பாடிக் கொடுத்த மஜா மால்ச்சா பாடல் இப்போதே செம ஹிட் . ரசிகர்களுக்கு நன்றி ” என்கிறார்
சிங்கப்பூர் தீபன் பேசும்போது ” படத்தில் வவ்வாலு என்ற கேரக்டரில் நானும் எனது அண்ணனாக வஞ்சிரம் என்ற கேரக்டரில் வி டி வி கணேஷும் நடித்துள்ளார் .
இருவரும் நாயகி ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரர்களாக வருகிறோம் . இப்போது பொதுவாக பேய்ப்படம் என்றால் காமெடி மட்டுமே இருக்கிறது . இதில் நகைச்சுவை, ஹாரர் இரண்டும் சமமாக இருக்கும் ” என்கிறார்
வி டி வி கணேஷ் பேசும்போது ” எங்கள் தங்கையை ஐஸ்வர்யாவை வைபவ் லவ் பண்ணுவார் . கல்யாணம் பண்ணித் தரணும்னா சாவுக்குத்து பாட்டுக்கு ஆடி பாராட்டு வாங்கணும்னு சொல்லிடுவோம்.
அப்படி வரும் சிலாக்கி டும்மா பாடலில் இருவரும் டான்சில் தூள் கிளப்பி உள்ளார்கள் சித்தார்த் விபின் பாடல்கள மட்டுமல்லாது சிறப்பாக பின்னணி இசையும் கொடுத்து உள்ளார் ” என்றார் .
சிங்கம் புலி தன் பேச்சில் ” படத்துல நான் ஒரு சின்ன கேரக்டர்ல நடிச்சு இருக்கேன் . பாஸ்கர் காமெடியையும் திரில்லையும் மிக அழகாக கையாண்டு இருக்கிறார் ” என்றார் .
இசையமைப்பாளர் சித்தார்த் விபின் “
படத்தில் ஐந்து பாடல்கள் . வெரைட்டியாக கொடுத்தேன் . அதை இயக்குனர் மிக வெரைட்டியாக எடுத்துள்ளார் .
நடன இயக்குனர் அதி சிறப்பாக நடனம் அமைத்துள்ளார் . ஐஸ்வர்யாவும் வைபவும் சிறப்பாக ஆடியுள்ளனர் . படம் நன்றாக வந்துள்ளது ” என்றார்
“படத்தில் என்னுடன் ஐஸ்வர்யா , ஓவியா என்று இரண்டு நாயகிகள் நடித்துள்ளனர். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் இருவரும் பேய்களாக நடித்துள்ளனர் , அதுவும் அழகான பேய்களாக நடித்துள்ளனர்.
எனது மச்சான்களாக வி டி வி கணேஷும் சிங்கப்பூர் தீபனும் நடித்து உள்ளனர் . . படத்துல ஒரு இருபது நிமிஷம் என் கூடவே இருப்பாங்க.அவங்க ரெண்டு பேரு குரலும் ஒரே மாதிரி.
சும்மாவே DTS effect போட்ட மாதிரி இருக்கும் ”என்று குசும்பு பேசினார் நாயகன் வைபவ்
ஐஸ்வர்யா ராஜேஷ் பேசும்போது
“முதல் பாதி முழுவதும் காமெடிக்கு முக்கியத்துவம் இருக்கும் வகையிலும் இரண்டாம் பாதி முழுவதும் நம்மை மிரட்டும் வகையிலும் படம் இருக்கும். பாட்டும் டான்சும் செம .
நான் இதுவரை சினிமாவில் டான்ஸ் ஆடியது கிடையாது . ஆனால் இந்தப் படத்தில் வரும் சாவுக் குத்து பாடலுக்காக செம ஆட்டம் ஆட வேண்டி இருந்தது . பிணத்தின் மேல் எல்லாம் ஏறி நின்று ஆடினேன் .”என்றார் .
ஹலோ… நிஜ பிணம் எல்லாம் இல்லீங்க . அப்புறம் நிஜமாவே பேய் பேசும் . பரர்ர்ர்ர்ரவால்லியா ?