தெலுங்கிலும் குபேரனான பிச்சைக்காரன்

pichai 2

இசை அமைப்பாளராக அறிமுகமாகி ,பின்னர் கதாநாயகனாகி தனக்கென்று தனி பாணி  அமைத்து வெற்றிகரமான நாயகனாக வலம் வரும் விஜய் ஆன்டனிக்கு

சமீபத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய ‘பிச்சைகாரன்’,வணிக ரீதியாக மிகப் பெரிய அநதஸ்தைக் 

கொடுத்தது.  

தமிழில்  மாபெரும் வெற்றிபெற்ற இந்தப் படம், தெலுங்கில் ‘பிச்சகாடு ‘ என்கிற பெயரில் மொழி மாற்றம் செய்யப் பட்டது.                   

pichai 3

வெளி வந்த ‘ பிச்சகாடு ‘ பல்வேறு சாதனைகளை முறியடித்து வெற்றிப் படமாக உருவெடுத்து உள்ளது.

இது பற்றி   மன  நிறைவோடு பேசும் விஜய்  ஆண்டனி, 

‘ இந்த வெற்றி இயக்குனர் சசி சாருக்கும் , தெலுங்கில் இந்தப்  படத்தை வெளியிட்ட லக்ஷ்மன் அவர்களுக்கும் 

உரியது என்றுதான் நான் சொல்வேன்

அனைத்து மொழி ரசிகர்களும் கொண்டாடக் கூடிய ஒரு கதைக்கரு, 

தெளிவான திரைக்கதை அமப்பு, நேர்த்தியான இயக்கம் என சசி சார் வழங்க , 

தெலுங்கு பாடல் வெளியீட்டு விழாவில் ...
தெலுங்கு பாடல் வெளியீட்டு விழாவில் …

 

‘நான் என்ன சளைத்தவனா?’ என்று மிக பிரம்மாண்டமாக  விளம்பரப்படுத்தி , 

அதிக அளவில் திரை அரங்குகள் எடுத்து ,    

  ‘பிச்சகாடு ‘ படத்தின் வெற்றியை ஊர்ஜிதம் செய்த  லக்ஷ்மன் சாருக்கும் உரியது இந்த வெற்றி.

தற்போது தமிழ் , தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் நான் ஒரு நடிகனாக வெற்றி பெற்று இருப்பது 

எனக்கு  மிகப் பெரிய பொறுப்பைக் கொடுத்து இருக்கிறது. 

தமிழ் திரை உலகில் இருந்து வரும் நடிகர்கள் பொதுவாக தெலுங்கில்  நிலைப்பது  இல்லை என்ற கூற்றை,

pichai 4 

என் அடுத்தடுத்த படங்களின்  கதையும்  மற்ற அம்சங்களும் பொய்யாக்கும் என்று நம்புகிறேன்.

இந்த வெற்றி ஒரு  நடிகனாக என்னை இன்னமும்  மேம்படுத்தி,

 தென்னிந்தியாவில் ஒரு நம்பிக்கை  நட்சத்திரமாக வலம் வர வைக்கும் என்று உறுதியாக நம்புகிறேன் என்கிறார் விஜய் ஆண்டனி.

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →