பாலாவின் பி ஸ்டுடியோ தயாரிக்க மிஷ்கின் இயக்கி இருக்கும் பிசாசு படம், பாடல் வெளியீட்டு விழா நடக்கும் முன்னரே திரையரங்கு மற்றும் எப் எம் எஸ் என்று எல்லா வகையிலும் விற்பனையாகி விட்டது . முரளி ராம நாராயணனின் தேனாண்டாள் பிலிம்ஸ் படத்தை வாங்கி இருக்கிறது
ரவி ராயின் ஒளிப்பதிவில் அரோல் கொரெளி என்பவரின் இசையில் வண்ணமயமாக இசைமயமாக இருந்தது முன்னோட்டம் .
“ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தை பார்த்து விட்டு கண்ணீரோடு வெளியே வந்த பாலா, எனக்கு கொடுத்த படம் இது ” என்று துவங்கிய இயக்குனர் மிஷ்கின் , ” இந்தப் படத்தின் கதாநாயகி பிரயாகாவை பல காட்சிகளில் கிரேனில் கட்டி தூக்கி அறுபது அடி உயரத்தில் தொங்க வைப்போம் . இறங்கும்போது அலை பாய்ந்து சுவற்றில் மோதி அவருக்கு அடி பட்டிருக்கிறது பல முறை. அப்போது எல்லாம் அவரின் அப்பா அம்மா இருவரும் கண்ணீரோடு இருப்பார்கள் . எனக்கே கஷ்டமாக இருக்கும் .
பி சி ஸ்ரீராமிடம்தான் ஒளிப்பதிவைக் கேட்டுப் போனேன் . அவர்தான் ‘என்னை விட நல்ல ஆளை தரேன்’என்று ரவி ராயை எனக்கு கொடுத்தார் .இசையமைப்பாளர் தம்பி அரோல் கொரெளி இந்தப் படத்துக்காக உயிரைகொடுத்து உழைத்து அற்புத இசை கொடுத்து உள்ளான் . அவனுக்கு நன்றி . ஹீரோ நாகாவை ரொம்ப கஷ்டப்படுத்தினேன் . நன்றாக நடித்துள்ளான்..
செத்துப் போன பெண் பேயாக வரும் கதைதான் . ஆனால் வித்தியாசமான திரைக்கதை அமைத்துள்ளேன். உங்க எல்லோருக்கும் பிடிக்கும் ” என்றார் .