ஸ்ரீ சரவணா ஃபிலிம் ஆர்ட்ஸ் தயாரிப்பில் தம்பி ராமையாவின் மகனும் நடிகருமான உமாபதி ராமையா நாயகனாக நடித்துள்ள படம் ‘பித்தள மாத்தி’
மாணிக் வித்யா இயக்கியுள்ளார்.
உமாபதி ராமையா மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்தப் படத்தில் பால சரவணன், தம்பி ராமையா, வித்யூலேகா மற்றும் பலர் உடன் நடித்துள்ளனர்.
இந்தக் காலத்துக் காதலை மையப்படுத்தி சிறந்த பொழுதுபோக்கு படமாக உருவாகியுள்ள இப்படம் ஜூன் 14ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது
சரி .. பித்தள மாத்தி என்றால் என்ன? (படத்தின் விளம்பரத்தில் பித்தல மாத்தி என்று எழுதி இருக்கிறார்கள். அது தப்பு. பித்தள மாத்தி என்பதே சரி )

பளபள ஜிகினா பேப்பரில் பித்தளை மோதிரம், மூக்குத்தி, செயின் இவற்றில் எதாவது ஒன்றைக் கட்டி சாலையில் போட்டு விட்டு ஒருவர் முன்னால் போய் விடுவார். அந்த பொட்டலத்தில் அந்த நகை தங்கமாக இருந்தால் என்ன விலை இருக்குமோ அந்த விலைக்கு ஒரு போலி பில்லும் உடன் இருக்கும்
பின்னால் வசதியான அப்பாவி யாரையும் பார்க்கும் இன்னொருவர் — அதாவது முதலில் போகிறவரின் குழுவைச் சேர்ந்தவர்- அப்பாவியிடம் பேச்சுக் கொடுத்து பேசிக் கொண்டே வருவார். சட்டென்று எதிர்பாராத விதமாகப் பார்ப்பது போல கீழே குனிந்து, முதலில் சென்றவர் போட்ட பொட்டலத்தை எடுத்துப் பிரிப்பார். உள்ளே பித்தளை நகை தங்க நகை போல பளபளவென மின்னும் . கூடவே போலி பில்லும் இருக்கும்
அப்பாவியைப் பார்த்து, ” உங்க முகத்துல முழிச்ச நேரம் . தங்கம் கிடைச்சு இருக்கு . ஆனா பாருங்க இதை வச்சு நான் என்ன பண்ணப் போறேன் . உங்க முகத்துல கோடீஸ்வரக் களை இருக்கு . நீங்க வாங்கிக்குங்க . பில் தொகையில பாதி பணம் கொடுத்துட்டு மவராசனா போங்க” என்பார்கள் .

பாதி விலைக்கு ‘புதிய தங்க நகை’ கிடைக்கும் மகிழ்ச்சியில் அப்பாவியும் ஐநூறு ரூபாய்க்கு வாங்கிக் கொண்டு போவார் . உதாரணமாக அஞ்சு ரூபாய் செயின் ஆயிரம் ரூபாய் போலி பில்லுடன் வந்து, ஐநூறு ரூபாய்க்கு ‘ விற்கப்படும்’
சந்தோசமாக வாங்கிக் கொண்டு போன – பேராசைப்பட்ட அப்பாவி, சில நாளில் அது அஞ்சு ரூவா பித்தளை நகை என்று தெரிந்து அழுவார். அனால்ஏமாற்றிய இருவருக்கும் செலவு அஞ்சு ரூபாய்தான். ஆனால் லாபம் 495 ரூபாய் .
இப்படி பித்தளை நகையை தங்க நகை என்று சொல்லி ஏமாற்றுபவனுக்கு பித்தளை மாத்தி என்று பெயர் பேச்சு வழக்கில் பித்தள மாத்தி !
அதாவது பொதுவில் பித்தள மாத்தி என்றால் ஏமாற்றுக்காரன், அயோக்கியன் என்று பொருள் .
படத்தில் என்ன கதை சொல்கிறார்கள் என்று பார்ப்போம்.