திருக்குமரன் என்டர்டைன்மென்ட் சார்பில் சி வி குமார் தயாரிக்க, அஸ்வின் காகுமானு, பவித்ரா மாரிமுத்து, கவுரவ்,அனுபமா குமார், அபி நக்ஷத்ரா , காளி வெங்கட் நடிப்பில் மோகன் கோவிந்த் இயக்கி இருக்கும் படம்
மேற்கத்திய உணவு விடுதி ஒன்றை சிரமங்களுக்கு இடையே நடத்திக் கொண்டு இருக்கும் ஒருவனுக்கு ( அஸ்வின் காகுமானு) , ஆவிகளின் இருப்பை உணரும் செயலி ஒன்றை கண்டுபிடித்து இருக்கும் ஒரு பெண்ணோடு ( பவித்ரா மாரிமுத்து) காதல்.
பெண்ணின் அண்ணனான இன்ஸ்பெக்டருக்கு (கவுரவ்), தன் தங்கையை ஒரு தொழில் அதிபருக்கு திருமணம் செய்து வைக்க ஆசை. தங்கை மறுக்க, அண்ணனுக்கு காதலன் மேல் கோபம் .
இந்த நிலையில் உணவு விடுதியில் அமானுஷ்ய உருவங்கள் நடமாடுவதோடு , ரத்தச் சிவப்பு நிறத்தில் மிக சுவையான உணவு ஒன்றையும் தயாரித்து வைக்கின்றன.
இன்னொரு பக்கம் நாயகன் உணவு சப்ளை செய்யும் நபர்கள் இருவர் அடுத்தடுத்து மரணம் அடைய – அதில் ஒருவர் , இன்ஸ்பெக்டர் ஆசைப்பட்ட தொழில் அதிப மாப்பிள்ளையின் நண்பனாக இருக்க- உண்மையோ பொய்யோ காதலனைக் குற்றவாளி ஆக்கி ஜெயிலுக்கு அனுப்பி விட்டு தங்கைக்கு தொழில் அதிபர் மாப்பிள்ளையை கட்டிவைக்க முயல்கிறார் இன்ஸ்பெக்டர்.
ஒரு நிலையில் காதல் ஜோடி ஆவிகளிடமே தஞ்சம் அடைய , நடந்தது என்ன ? அந்த ஆவிகள் யார் ? அப்புறம் நடந்தது என்ன என்பதே இந்தப் படம் .
காமெடி எல்லாம் இல்லாமல் எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்குகள் ஏதும் இல்லாமல் முழுக்க முழுக்க ஒரு பேய்ப்படம் . மோகன் கோவிந்தின் காட்சி அமைப்பும் பிரபு ராகவின் ஒளிப்பதியும் அட்டகாசம். அருண் ராஜின் இசை கூட ஓகேதான்.
பேய்கள் சமைத்து வைக்கும் உணவு அது தொடர்பான காட்சிகள் அபாரம். முதல் பாதி முழுக்கவே அந்த பரபரப்பு தொடர்கிறது .
அஸ்வின் காகுமானு அட்டகாசமான கெட்டப்பில் இருக்கிறார் , உணர்ந்து நடிக்கிறார் . அபி நக்ஷத்ரா , அனுபமா குமாரும் ஒகே. பவித்ரா மாரி முத்துவை வித்தியாசமான தோற்றம் காப்பாற்றுகிறது .
என்ன கொடுமை என்றால் ஒவ்வொரு காட்சியையும் அவர்கள் இஷ்டத்துக்கு கட் பண்ணி தொங்கலில் விட்டு விட்டு அடுத்த காட்சிகளுக்குப் போய் விடுகிறார்கள் . அது ஒருவித பேட்டர்ன்தான். அனால் இந்தப் படத்துக்கு செட் ஆகவில்லை .
நின்னு விளையாடுகிற ஸ்கிரிப்ட் ஆக இல்லை.
இரண்டாம் பாதியில் கதையை எல்லோராலும் எளிதாக ஊகிக்க முடிந்த நிலையில் அதுவே கடைசி வரை வந்து முடிவதும் அயற்சி .
பிஸ்சா 3…. ஆர்டருக்கு ஏற்ற டெலிவரி இல்லை .
