பொது நலன் கருதி @ விமர்சனம்

ஏ வி ஆர் புரடக்ஷஸ் சார்பாக வி ஆர் அன்புவேல்ராஜன் தயாரிக்க, கருணாகரன்,  சந்தோஷ், அருண் ஆதித் , யோக் ஜேபி,

சுப்ரமணியபுரம் ராஜா, அனு சித்தாரா, சுபிக்ஷா, லிசா  நடிப்பில் சீயோன் இயக்கி இருக்கும் படம் பொது நலன் கருதி .

ரசிகர் நலன் கருதி பேசுவோம்.

 குஜராத்தில் இருந்து வந்த பாபு- தென் மாவட்டத்தில் இருந்து வந்த உக்கிரமூர்த்தி ( யோக் ஜேபி) என்று, இரண்டு கந்து வட்டி தாதாக்கள்.

அதில் உக்கிர மூர்த்தியின் தீவிர அடியாள் ஒருவன் ( சந்தோஷ்)
அவனின் காதலி (அனு சித்தாரா) அடியாள் தொழிலை

விட்டு விடச் சொல்ல, உக்கிர மூர்த்தி மேல் உள்ள விசுவாசத்தால் அவன் மறுக்க, காதலிக்கு வேறு திருமணம் . 

ஆனால் உக்கிர மூர்த்தியால் பாதிக்கப்பட்டு அவனிடமே வேலைக்கு சேர்ந்த ஒருவனுக்கு முக்கியத்துவம் தரும் உக்கிர மூர்த்தி விசுவாச அடியாளை புறக்கணிக்கிறான் . 

செத்துப் போன அண்ணனை தேடும் ஒரு தம்பி (கருணாகரன்) அவனை கரித்துக் கொட்டும் அப்பா. அப்பாவியான ஓர் அண்ணி மற்றும் குழந்தை .

உக்கிர மூர்த்திக்கு ஒரு கள்ளக் காதலி!

உக்கிர மூர்த்தியின் மேனேஜரின் (முத்துராமன்)  மகளை காதலிக்கும் ஓர் இளைஞன் .

காதலியைத் துறந்த அடியாள் விசுவாசி ஒரு நிலையில் பாபுவிடம் சேர்கிறான் .

 இந்த நிலையில் மேலே சொன்ன கதாபாத்திரங்கள் என்ன செய்கின்றன . அதன் விளைவுகள் என்ன என்பதே இந்த பொது நலன் கருதி .

 ஷாட்கள்,  படமாக்கல் இவற்றை சிறப்பாக செய்து இருக்கிறார் இயக்குனர் .

 அடியாளின் காதலியாக நடிக்கும் அனு சித்தாரா,  அடியாள் சந்தோஷ் , உக்கிர மூர்த்தியால் பாதிக்கப்பட்டு,

அவனிடமே வேலைக்கு சேரும் இருதயம் கேரக்டரில் நடித்து இருப்பவர் , உக்கிர மூர்த்தியாக நடித்திருக்கும் யோக் ஜேபி, ஆகியோர் சிறப்பாக நடித்துள்ளனர் .

கால் டாக்சி டிரைவரின் காதலியாக வரும் அந்த டீச்சராக நடித்துள்ள நடிகை அழகும் சிறப்பும் .

 ஹரி கணேஷ் இசையில் வரும் அந்த காதல் டூயட் இனிமை . வரிகள் படமாக்கலும் சிறப்பு.

 ஏகப்பட்ட கதா பாத்திரங்கள் … இவற்றை  வைத்து ஒரு மகா பாரதமே எழுதி இருக்கலாம் .

 சல சல வென்று பேசுகிறார்கள் . அப்புறம்  யாரவது யாரையாவது அறைகிறார்கள் .. அப்புறம்  சல சல வென்று பேசுகிறார்கள்.

அப்புறம்  யாரவது யாரையாவது அறைகிறார்கள்… அப்புறம்… …. இப்படியே போகிறது படம் .

 துண்டு துண்டாக வரும் கதாபாத்திரங்கள் .. காட்சிகள்… கதைப் போக்குகள் .. முன்னும் பின்னுமான நிகழ்வுகள் … அலைக்கழிக்கின்றன .

 இந்த படத்தை எப்படி சொல்லி இருக்க வேண்டும் . ?
கால் டாக்சி ஓட்டுபவனை காணவில்லை . அப்பா சோகத்தில் கரைகிறார் .

அண்ணி,  பிள்ளையை  கண் கொண்டு பார்க்க முடியவில்லை. அதுவரை வேலை வெட்டி இல்லாமல் அண்ணனிடம் பாக்கெட் மணி வாங்கி டீச்சரைக் காதலித்துக் கொண்டு இருந்த தம்பி தலையில்,

குடும்பப் பொறுப்பும் அண்ணனை தேடும் வேலையும் கூடவே கால் டாக்சி வேலையும் விழுகிறது .

 போலீஸ் உதவாத நிலையில் அவனாகவே அண்ணனைத்  தேடத் தொடங்குகிறான் .

 அந்த தேடலில் அவனது கோணத்தில் மற்ற கேரக்டர்கள் எல்லாம் ரசிகர்களுக்கு அறிமுகமாக வேண்டும் . அந்த கோணம், பயணம், செயல்பாடுகள் என்று கிளைமாக்ஸ் வரை போயிருக்க வேண்டும் .

அப்படி போயிருந்தால்  திரைக்கதை ஒரு ஒழுங்குக்கு வந்திருக்கும் . 
படமும் பொது மக்களால் கருதப்பட்டு இருக்கும் . 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *