ஸ்ரீநிதி பிலிம்ஸ் சார்பில் ரமேஷ் ரெட்டி தயாரிக்க, பல முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கு டான்ஸ் மாஸ்டராக பணியாற்றிய ஸ்ரீதர் கதாநாயகனாகவும் ஸ்பூர்த்தி கதாநாயகியாகவும் நடிக்க மாதேஷ் ராகவ் என்பவர் இயக்கி இருக்கும் படம் போக்கிரி மன்னன்.
விரைவில் திரைக்கு வர இருக்கும் இந்தப் படத்தை ஆர் எஸ் எஸ் எஸ் பிக்சர்ஸ் உரிமையாளர் எஸ்.தணிகைவேல் வாங்கி வெளியிடுகிறார்.
ரமேஷ் ரெட்டி வில்லனாக நடித்து இருப்பதோடு ஒரு பாடலில் ஆடியும் இருக்கிறார்
“டான்ஸ் மாஸ்டரில் இருந்து டைரக்டரா ஆகத்தான் முயற்சி பண்ணினேன். அது நடக்கும் . ஆனா அதுக்குள்ளே இந்தப் படத்தில் ஹீரோவாக ஆகிட்டேன் .டான்ஸ் பாடல்களுக்கு நடனம் அமைக்கும்போது ஹீரோ நடிகர்களை எவ்வ்வளவோ கஷ்டப் படுத்தி இருக்கேன்.. டான்ஸ் மாஸ்டர் வேலை டான்ஸ் ஆடுறது மட்டும்தான். ஆனா நடிகர்கள் எமோஷனலா நடிச்சுட்டு , ஃ பைட் பண்ணிட்டு எல்லாம் ஆட வருவாங்க.
அவங்க செய்றது எவ்வளவு கஷ்டமான வேலை என்பது இப்போ நானும் ஹீரோவா நடிக்கும்போதுதான் தெரியுது . டான்ஸ் ஆடுவது சுலபம் . ஆனா நடிக்கிறது ரொம்ப கஷ்டம். ஹாட்ஸ் ஆஃப் டு ஆல் ஹீரோஸ் ஆண்டு ஹீரோயின்ஸ்.
இந்தப் படத்தோட பெயருக்கே முக்கியக் காரணம் இருக்கு. விஜய் சார் நடிச்சு ஹிட் ஆன படம் போக்கிரி . ரஜினி சார் நடிச்சு ஹிட் ஆன படம் மன்னன் . இரண்டையும் சேர்த்து இந்தப் படத்துக்கு பெயர் வச்சு இருக்கோம் ” என்றார்.
படத்தின் கதாநயகி ஸ்பூர்த்தி“பல கன்னடப் படங்களில் நடிச்சு இருக்கேன் . ஆனா யாருமே என்னை இவ்வளவு அழகா படம் எடுத்ததில்லை . இது எனக்கு முதல் தமிழ்ப் படம் . என்னை அழகா காட்டி இருக்கும் ஒளிப்பதிவாளர் சூரி சாருக்கு நன்றி .
படத்துல ரொம்ப நல்ல கேரக்டர். படத்தை நல்லா உருவாக்கி இருக்கோம் ” என்றார்.
படத்தின் இசையமைப்பாளர் இந்திரவர்மன். நல்ல திறமைசாலி . சரியான ஒரு வெற்றிக்காக காத்திருப்பவர் “படத்தில் நான்கு பாடல்கள். ரொம்ப நல்லா அமைஞ்சது .
ஹீரோ ஸ்ரீதர் அடிப்படையில் டான்ஸ் மாஸ்டர் என்பதால் அதற்கு ஏற்ற மாதிரி நன்கு ஆட வாய்ப்புள்ள வகையில் பாடல்களை கொடுத்து இருக்கிறேன் . ” என்றார் . (பாடல்கள் இனிமையாகவும் வரிகள் புரியும் அளவுக்கு இசை தெளிவாகவும் இருப்பதை இங்கே சொல்லியாக வேண்டும் )
தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் ரமேஷ் ரெட்டி “தமிழ்ல படம் தயாரிக்க முடிவு பண்ணினப்ப இயக்குனர் மாதேஷ் ராகவ் வந்து கதை சொன்னார். மிக சிறப்பாக இருந்தது . உடனே ஆரம்பித்தோம் ” என்றார் .
அப்படி என்ன கதை ?
இதற்கு பதில் சொல்லும் இயக்குனர் மாதேஷ் ராகவ் “கள்ளச் சாராயம் என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். ஆனால் பொதுவான மதுக்கடைகளிலேயே திடீர் என அதிகரிக்கும் தேவையை சமாளிக்க, போலி மது , கலப்பு மது விற்பனை நடக்கிறது .
குடிப்பது தவறுதான். ஆனால் நம்பிக் குடிக்க வரும் அப்பாவிகளை இது போன்ற போலி மது மூலம் உடல் நலச் சீர்கேட்டுக்கும் உயிரிழப்புக்கும் ஆளாக்கும் அநியாயம் நடக்கிறது. இந்த அநியாயத்தால் தன் உறவுகளை இழக்கும் ஒருவனின் கோபமே இந்தப் படம் .
போக்கிரியாக இருந்த ஒருவன் இப்படிப்பட்ட இழப்புக்குப பின்னால் திருந்தி மன்னன் ஆகிறான் ” என்கிறார் .
அட ! நல்லா இருக்கே !